10 ஆம் நாள் காரியங்கள்
2012 செப் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 06:05க்கு பத்மா அக்கா காலமானதை முன்பே எழுதினேன். இடியென காதில் விழுந்த செய்தி அது. புரட்டாசி, சுக்ல சதுர்த்தசி திதி.
பிரகாஷ் தன் அம்மாவின் காரியங்களை தினம் தினம் செய்தான். பத்தாம் நாள் காரியம் அக்டோபர் 08ம் தேதி வந்தது. அதற்கென அஷோக்கும் நீரஜாவும் பெங்களூரிலிருந்து அக் 7-ஆம் தேதி (ஞாயிறு) வந்தனர். முன்னாதாக அக் 2ம் தேதி அருண், காயத்ரி பெங்களூரிலிருந்து வந்து உடனே அம்பத்தூர் சென்றனர். காயத்ரியின் அப்பாவும் சென்றார்.
8 ஆம் தேதி (திங்கள்) காலை 7-15க்கு 10 ஆம் நாள் காரியத்திற்காக அருண் காரில் விஜயா, நான், அஷோக், நீரஜா கிளம்பினோம். அஷோக் ட்ரைவிங். சுகவனத்தையும் கூட்டிக் கொண்டு போனோம். மங்களம், கோபி, சரோஜா, அத்திம்பேர், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, (ரமேஷ் மனைவி) விஜி, மற்றும் லலிதா, குமார், ராஜேஸ்வரியின் பெற்றோர் வந்தனர். எங்களையும் சேர்த்து 17 பேர். பிரகாஷ், ராஜேஸ்வரி, ஸ்ரீவித்யா, அவள் பெண் ஐஸ்வர்யா சேர்த்து 21 பேர்.
காலை 10-20க்கு 10 ஆம் நாள் காரியங்கள் தொடங்கின. எல்லா பெண்மணிகளும் “பத்து” கொட்டினர். 11-30 க்கு அருகிலுள்ள் ஒரு ஏரிக்கு சென்று பிரகாஷ் இதைக் கரைத்தான். பின்னர் நாங்கள் எல்லாரும் குளித்தோம். பின்னர் உணவு அருந்திவிட்டு 3 மணி சுமாருக்கு வீடு கிளம்பினோம்.
இவ்வாறாக, பத்மாவின் 10 ஆம் நாள் காரியங்கள் நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது. 11, 12, 13 ஆம் நாள் காரியங்கள் பாக்கி.
ராஜப்பா
10:30 மணி
09-10-2012
பின்குறிப்பு : அம்பத்தூரில் ஒரு டிரைவரை ஏற்பாடு செய்து கொண்டு அருண் காரில் நாங்கள் வீடு திரும்பினோம். அஷோக் - நீரஜாவை செண்ட்ரல் ஸ்டேஷனில் இறக்கிவிட்டு நாங்கள் வந்தோம். அவர்கள் 5-30 ஷதாப்தியில் பெங்களூர் திரும்பினர்.
13 ஆம் நாள் காரியம் (கிரேக்கியம்/ஸுபஸ்யம்)
2012, அக்டோபர் 11 ஆம் தேதி, வியாழன் அன்று 13-ஆம் நாள் காரியம் நடந்தது. கிரேக்கியம் என்றும் ஸுபஸ்யம் என்றும் இது அழைக்கப்படுகிறது. விஜயாவும் நானும் டிரைவரை ஏற்பாடு பண்ணிக் கொண்டு, காரில் காலை 7 மணிக்கு கிளம்பினோம். சரோஜா, அத்திம்பேரை கூட்டிக்கொண்டு அம்பத்தூர் சென்றோம். பின்னர், ராஜேஸ்வரியின் பெற்றோர், அவளது தங்கை. சுகவனம், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, ரமேஷ், விஜி, கார்த்திக் வந்தனர். மொத்தம் 18 பேர்.
09-40க்கு சாஸ்திரிகள் 6 பேர் வந்தனர். நவக்கிரஹ பூஜையும், ஒரு ஹோமமும் செய்தனர். பின்னர் ப்ரகாஷுக்கு அபிஷேகம் செய்தனர். வீடு முழுதும் மற்றும் வந்த யாவருக்கும் புண்ய தீர்த்தம் தெளித்தனர். அக்ஷதை ஆசீர்வாதம், ஹாரத்தியுடன் விழா இனிதே முடிந்தது.
ப்ரகாஷ், ராஜேஸ்வரிக்கு அவளது பெற்றோர் புத்தாடைகள் அளித்தனர். ப்ரகாஷ் - ராஜேஸ்வரி இருவரும், ஸ்ரீவித்யா, குடும்பத்தினர்க்கு புத்தாடைகள் கொடுத்தனர். ஸ்ரீவித்யா பேத்தி உருண்டைகள் கொடுத்தாள்.
முதலில், வீட்டு சாஸ்திரிகள் ஸ்லோகத்தையும், ஆன்மீக உபன்யாஸமும் பண்ணினார். மிகவும் நன்றாக இருந்தது. அடுத்து நான் எழுதிய நினைவு அஞ்சலியை படித்தேன். என்னால் கண்ணீரை அடக்க முடியாமல் பல இடங்களில் அழுதுவிட்டேன்.
அடுத்து லஞ்ச். சாப்பிட்டுவிட்டு எல்லாரும் வீட்டிற்கு 1-45 அல்லத் 2 மணிக்கு கிளம்பினோம். சரோஜா அத்திம்பேரை வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் வீடு திரும்பியபோது மணி 3.
ஆக, இவ்வாறாக பத்மாவின் காரியங்கள் நன்றாக நடைபெற்றன. பிரகாஷும், ராஜேஸ்வரியும், ஸ்ரீவித்யாவும் நன்கு வேலைகள் செய்து எல்லாவற்றையும் மிக அழகாக செய்தனர்.
ராஜப்பா
11-10-2012
மாலை 6-00 மணி
Comments