Skip to main content

Posts

Showing posts from October, 2013

தீபாவளி லேகியம்

தீபாவளி லேகியம். கொத்தமல்லி - கால் கப் அரிசி திப்பிலி - 10 கிராம் கண்டந்திப்பிலி - 10 கிராம் சுக்கு - 10 கிராம் சீரகம் - அரை மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி மிளகு - ஒரு மேசைக்கரண்டி உருண்டை வெல்லம் - 100 கிராம் வெண்ணெய் - 100 கிராம் தேன் - அரை கப் ஓமம் - ஒரு மேசைக்கரண்டி கிராம்பு - 4 சித்தரத்தை - 10 கிராம்    செய்முறை     அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும். மற்ற எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து தயாராக எடுத்துக் கொள்ளவும்.   வெறும் வாணலியில் வெண்ணெய், வெல்லம், தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு 2 நிமிடம் வறுக்கவும். ஒவ்வொன்றையும் 2 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும். எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.   ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.   பின்னர் ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். மேலும் தண்ணீர் சேர்க்காமல் நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.   வ

Kishkindha Kaandam - Part 1

கிஷ்கிந்தா காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் ஆக மூன்று காண்டங்களை முடித்து விட்டார். இன்று 2013 செப்டம்பர் 11 புதன்கிழமை. 374-வது பகுதியாக கிஷ்கிந்தா காண்டம் தொடங்குகிறது. மொத்தம் 67 ஸர்கங்கள்.  ஸ்ரீ ஹனுமானை முதன்முதலாக சந்திக்கப் போகிறோம். ரா மனும் லக்ஷ்மணனும் பம்பா ஏரியின் (பம்பா என்றால் தாமரை) அழகை ரசிக்கிறார்கள். ராமனுக்கு ஸீதையின்  ஞாபகம் வந்து அவனை துன்புறுத்துகிறது. மலைப்பகுதியில் ஒளிந்து வாழும் சுக்ரீவன் இவர்களைப் பார்த்து சந்தேகம் கொண்டு பயப்படுகிறான். ஆயுதங்கள் கொண்டு இருவரையும் தாக்க எண்ணுகிறான். வாலிதான் வந்துவிட்டான் என வானரங்கள் அஞ்சுகிறார்கள். இப்போது ஹனுமான் முதன்முதலாக அறிமுகமாகிறான். “அஞ்சாதே! எதற்கும் பயப்படாதே!! என்பதுதான் ஹனுமானின் சொல். {ஸர் 2] தானே சென்று அவர்களை பார்த்து வருவதாக ஹனுமான் புறப்படுகிறான். பார்த்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - 400

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் 2012ம் வருஷம் மார்ச் 31-ஆம் தேதி யன்று ( அன்று ஸ்ரீ ராம நவமி) ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ண ஆரம்பித்தார். பால காண்டம், அயோத்யா காண்டம் சொல்லி முடித்து, தற்போது ஆரண்ய காண்டம் வாலி வதம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த உபன்யாஸத்தின் 400-வது பகுதி சென்ற வியாழனன்று (2013 அக்டோபர் 17 அன்று) நடந்தது. பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06-30 முதல் 06-45 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுவரை கேட்காதவர்கள் இனியாவது கேட்டு ஸீதம்மா ஸமேத ஸ்ரீ ராமரின் அருள் பெறுங்கள். ராஜப்பா 17-10-2013

SOME DEFINITIONS IN APARA KARIYANGAL

SOME DEFINITIONS IN APARA KARIYANGAL நித்யவிதி ஜீவன் இறந்த உடனேயே உலகை விட்டுச் செல்வதில்லை . அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் 10 நாட்கள் வரை இவ்வுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம் . அந்த ஜீவன் இந்த 10 நாட்களும் தங்கியிருக்க , சில கருங்கற்களை நிலத்தில் ஊன்றி , மண்ணினால் நன்கு மூடி , அந்த கல்லில் ஜீவனை ஆவாஹனம் செய்து , 10 நாட்கள் வரை தினஸரி எள்ளு ஜலமும் , சாதமும் ( பிண்டம் ) தந்து நித்யவிதி செய்ய வேண்டும் . வாஸோதகம் , திலோதகம்     நித்யவிதி இறந்த உடனேயே கல் ஊன்றவேண்டும் ; இது முடியாதபோது , 7- ஆம் நாளோ அல்ல்து 9- ஆம் நாளோ கல் ஊன்றலாம் ( ஆனால் உத்தமம் இல்லை ) . கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும் , திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் தர்ப்பணம் பண்ணவேண்டும் . பிணடம் சமர்ப்பிக்க வேண்டும் . இது நித்யவிதி எனப்படுகிறது . ஏகோத்தர வ்ருத்தி முதல் நாளில் மூன்று எனத்தொடங்கி , அடுத்த நாள் 4, பின்னர் 5 என ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போய் 10- ஆ