SOME DEFINITIONS IN
APARA KARIYANGAL
நித்யவிதி
ஜீவன் இறந்த உடனேயே உலகை விட்டுச் செல்வதில்லை. அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் 10 நாட்கள் வரை இவ்வுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம். அந்த ஜீவன் இந்த 10 நாட்களும் தங்கியிருக்க, சில கருங்கற்களை நிலத்தில் ஊன்றி, மண்ணினால் நன்கு மூடி, அந்த கல்லில் ஜீவனை ஆவாஹனம் செய்து, 10 நாட்கள் வரை தினஸரி எள்ளு ஜலமும், சாதமும் (பிண்டம்) தந்து நித்யவிதி செய்ய வேண்டும்.
வாஸோதகம், திலோதகம்
நித்யவிதி
இறந்த உடனேயே கல் ஊன்றவேண்டும்; இது முடியாதபோது, 7-ஆம் நாளோ அல்ல்து 9-ஆம் நாளோ கல் ஊன்றலாம் (ஆனால் உத்தமம் இல்லை). கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் தர்ப்பணம் பண்ணவேண்டும். பிணடம் சமர்ப்பிக்க வேண்டும். இது நித்யவிதி எனப்படுகிறது.
ஏகோத்தர வ்ருத்தி
முதல் நாளில் மூன்று எனத்தொடங்கி, அடுத்த நாள் 4, பின்னர் 5 என ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போய் 10-ஆம் நாளில் 12 முறை இந்த வாஸோதகம், திலோதகம் தர்ப்பணத்தை செய்ய வேண்டும். (இது ஏகோத்தர வ்ருத்தி எனப்படும்
ஆத்ய மாஸிகம் ஏகோத்திஷ்டம்
பின்னர் ஆத்ய (முதல் மாத) மாஸிகம் என்னும் சிராத்தம் பண்ணவேண்டும். இறந்தவர்க்கு இன்னும் பித்ருத்வம் (முன்னோர்களுடன் சேர்க்கை) கிடைக்காதபடியால், இறந்தவர் ப்ரேத ஸ்வரூபியாக வருவதாக ஐதீகம். ஒரு ஒத்தன் வந்து, தானே சிராத்த சமையலை செய்துகொண்டு அதை சாப்பிட்டுவிட்டு போய்விடுவான். இறந்தவர்க்கு இன்னும் பித்ருத்வம் கிடைக்காததால், இந்த ஆத்ய மாஸிக சிராத்தத்தை ”ஏகோத்திஷ்டம்” என்னும் முறைப்படி, அதாவது விச்வேதேவர் முதலிய தேவர்கள் இல்லாமல், இறந்தவரையே ஆவாஹனம் செய்து நடத்துவார்கள்
ஷோடஸம்
இறந்தவருக்கு முதல் வருஷத்தில் செய்ய வேண்டியது மொத்தம் 16 சிராத்தங்கள் - அவை :: ஸபிண்டீகரணம் பண்ணுவதற்கு முன் ஆத்ய, த்ரைபக்ஷிக, ஷாண்மாஸிக, அந்வாப்திக ஊனம் 4, அதிகமாஸ்யம்-1, மாஸ்யங்கள்-11 ஆக 16 ச்ராத்தம் ஏகோதிஷ்டமாகப் பண்ணிவிட்டு பின்னரே ஸபிண்டீகரணம் பண்ணவேண்டும் என்பது விதி. காலத்தாலும், நடைமுறையாலும் அது ஸாத்யமில்லை என்பதால் ஆகர்ஷண விதியைக்கொண்டு மேற்படி 16 மாஸ்யங்களை அன்னமாகவோ, ஆமமாகவோ பண்ணிவிட்டு 12ம் நாளே ஸபிண்டீகரணம் பண்ணலாம் என்ற விதிப்படி (சாஸ்திரப்படி) 16 பேருக்கு ஆமமாக அரிசி, வாழைக்காய் இத்யாதிகளுடன் தக்ஷிணை கொடுத்து தத்தம் செய்வது சோடசம் ஆகும்.
சோதகும்பம்
நேற்று (11-ஆம் நாள்) வரை ப்ரேத ரூபத்தில் இருந்த ஜீவன், இன்று பித்ருத்வம் கிடைத்து, தனது பித்ருக்களுடன் சேர்வதாக ஐதீகம் - இதைத்தான் சபிண்டீகரணம் என சொல்வார்கள். இறந்தவரை நேரடியாக பித்ருவாக வரித்து முதன்முதலாகச் செய்யப்படும் ச்ராத்தம் ஸோதகும்பம். இது ஸாதாரணமாக ஸங்கல்ப விதானத்தில் செய்யப்படும். ஒரு பிராஹ்மணர் சாப்பிடுவார்.
Comments