கிஷ்கிந்தா காண்டம் --- தொடர்கிறது ::
தன்னுடைய வானரங்களை நாலா பக்கமும் அனுப்பி அங்கிருக்கும் மற்ற வானரங்களை கிஷ்கிந்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களும் பல கோடி வானரங்கள் வந்து சேர்கிறார்கள். (ஸர் 36-39)
விநாடன் என்னும் பெரிய வானரத்தை அழைத்து, கிழக்குப் பக்கம் போய் தேடுமாறு சுக்ரீவன் ஆக்ஞை இடுகிறான். பாரத தேசத்தின் புவி இயலை - ஆறுகள், மலைகள், ராஜ்ஜியங்கள், ஊர்கள் - விரிவாக இந்த ஸர்கத்தில் சொல்லப்படுகின்றன. பாகீரதி (கங்கை), ஸரயூ, கௌஷிகி, யமுனை, ஸரஸ்வதி, ஸிந்து, ஷோனா, மாஹி, காலாமாஹி, ஆகிய நதிகளும், ப்ரஹ்மமாலா, விதேஹம், மாளவம், காசி, கோஸலம், போன்ற ராஜ்யங்களும், மலைகளும், வனாந்திரங்களும் மிக விரிவாக சொல்ல்ப்படுகின்றன (ஸர் 40)
ஹனுமான், ஜாம்பவான், நீலன், ஆகிய வானர தலைவர்களை அங்கதன் தலைமையில் தெற்கு திசை நோக்கி அனுப்புகிறான். ஒரு மாதத்திற்குள் திரும்ப வர வேண்டும் எனவும் ஆணையிடுகிறான். (ஸர் 41)
தாராவின் தந்தையாகிய சுஷேஷனாவின் தலைமையில் வானரங்களை கிழக்கு திசை நோக்கி அனுப்புகிறான். இவர்களுக்கும் ஒரு மாஸம் அவகாசம் கொடுக்கிறான். (ஸர் 42)
ஷடபாலி என்னும் வானரத்தின் தலைமையில் வானரப்படைகளை வடக்கு நோக்கி அனுப்புகிறான். (ஸர் 43)
ஹனுமானிடத்தில் ராமனுக்கு நிறைய நம்பிக்கை இருந்ததால், ஹனுமானிடம் தன்னுடைய மோதிரத்தை கொடுத்து அதை ஸீதையிடம் சேர்ப்பிக்குமாறு சொல்லுகிறான். (ஸர் 44)
கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளில் சென்ற வானரங்கள் சீதையைக் காணாமல் திரும்பின. ஹனுமான, மற்றும் அங்கதன் தெற்கு திசை நோக்கிச் சென்றனர். [ஸர் 49]
சீதையை எங்கும் காணாமல் மனம் உடைந்த வானரங்கள் தீக்குளித்து இறக்க முற்படும்போது, கழுகு அரசனான ஜடாயுவின் அண்ணன் சம்பாதி என்னும் கழுகரசன் அங்கு வருகிறான். தன் தம்பி ஜடாயூ இறந்ததை அறிந்து துக்கப்படுகிறான். [ஸர் 56]
சம்பாதியிடம் சீதையைப் பற்றிக் கூற, அவன் ராவணன், லங்கா, சீதையை பற்றி சொல்லுகிறான். இந்த செய்தியினால் புத்துணர்வு பெற்ற வானரங்கள் குதூகலம் அடைகின்றன. சம்பாதி கூறியவாறே அவைகள் தெற்கு நோக்கி விரைகின்றன. [ஸர் 63]
அங்குள்ள ஹிந்து மஹா சமுத்திரத்தை பார்த்து வானரங்கள், “இந்த சமுத்திரத்தை யார், எப்படி தாண்டுவார்கள்,” என பயப்படுகின்றன. பல வானரங்கள் இதை தாண்ட தங்களால் இயலாது என அறிவிக்க, ஜாம்பவான் ஹனுமானை தேற்றுகிறார். [ஸர் 65]
ஹனுமானின் பிறப்பு ரகசியத்தையும், அவன் எப்படி அஞ்சனாவிற்கும் வாயு தேவனுக்கும் மகனாக எப்படி பிறந்தான் எனபதையும் ஜாம்பவான் விளக்கிச் சொல்கிறார். [ஸர் 66]
ஜாம்பவானின் வார்த்தைகளால் புது உத்ஸாகம் பெற்ற ஹனுமான் கடலைத் தாண்ட தயாராகிறான். நீண்ட, நீடிய பெரிய உருவத்தை ஹனுமான் எடுத்துக் கொள்கிறான், [ஸர் 67]
இத்துடன் கிஷ்கிந்தா காண்டம் நிறைவு பெறுகிறது, அடுத்து ஸ்ரீராமாயணத்தின் மிக முக்கியமான சுந்தர காண்டம் தொடங்குகிறது.
வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இந்த காண்டத்தை 25-12-2013 புதன்கிழமை நிறைவு செய்தார் [449வது பகுதி]
ராஜப்பா
25-12-2013

Comments