Skip to main content

Posts

Showing posts from 2014

Our Bangalore - Hosur Visit 24 Nov 2014

WE two left Chennai on 24-11-2014 (Monday) by the Double Decker train for Bangalore. On 26th Nov we left Bangalore for Hosur by bus at 09:30. Evening at 5 we went to shops with Savithri and ordered for two cots for her. Ramesh came from Chennai on the early hours of 27th. 27 Nov 2014 Thursday: Savithri vacated her TNHB house and shifted to a rented house at Avalapalli Road. First Paal kaaychi kudiththal at 9 AM. Vijaya performed the small poojai. We had Idli at the new house. The 2 BHK plus dining area house is very good with good natural light and ventilation. Shifting was completed by 4 PM. 28-11-2014 : New house arrangement and setting it up. Evening we went to Big Bazaar and purchased dresses for Arjun. This Big Bazaar is very near to Savithri's house and so is a small Uzhavar Santhai. 30-11-2014 Sunday : Ashok and Neeraja came to the new house at Hosur and had lunch. Later in the evening we all went to a dam (on river Pennaiyaru) - a nice picnic spot. After spending

முள்ளங்கி

முள்ளங்கி , Radish, முளி ( ஹிந்தியில் ) என பல பெயர்களில் இந்த கிழங்கு அழைக்கப்படுகிறது . ( எனக்குத் தெரிந்தவரை ) இது வெள்ளை நிறத்திலும் , சிவப்பு நிறத்திலும் கிடைக்கிறது . உருண்டையாக , நீளமாக , இரண்டு விதத்திலும் கிடைக்கிறது . சிவப்பு முள்ளங்கி ( நீளம் ) சென்னையில் சில சமயம் தான் கிடைக்கிறது . இதன் கிழங்கு பாகத்தையும் , கீரையையும் சாப்பிடலாம் . பற்பல மருத்துவ குணங்கள் நிரம்பியது . இதய நோய்கள் , இரத்த அழுத்தம் , தோல் ப்ரச்னை , ஆஸ்துமா , சிறுநீர் வியாதிகள் , சளி , இன்னபிற நோய்களுக்கு இது சிறந்த மருந்து . இதன் சாற்றை தேனுடன் கலந்து சிறு குழந்தைகளுக்கு கூட தினமும் தரலாம் . கிழங்கை தமிழ்நாட்டில் சாம்பாராகவும் , கறியாகவும் செய்து சாப்பிடுகிறோம் . வடநாட்டில் பராத்தாவாக சாப்பிடுகிறார்கள் .  முள்ளங்கி கீரை இளசாக இருந்தால் சாப்பிடலாம் . பெங்களூரிலும் , புனே , தில்லியிலும் முள்ளங்கி கீரையை சாப்பிட்டு இருக்கிறேன் . மற்ற அரைத்து விட்ட சாம்பார்களைப் போலவே முள்ளங்கி சாம்பாரும் செய்ய வேண்டும் . முள்ளங்கி எனக்கு மிகவும் பிடித்த கிழங்கு . இன்று (21st) காலை திருவான்மி

யுத்த காண்டம்

யுத்த  காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆக ஐந்து காண்டங்களை முடித்து விட்டார். கடைசியாக சுந்தர காண்டத்தை 17-04-2014 அன்று நிறைவு பண்ணினார். 18-04-2014 வெள்ளிக்கிழமை முதல் யுத்த காண்டம் தொடங்கினார். [பகுதி 531] ஸ்ரீ ராமாயணத்தின் ஆறாவது காண்டம் இது. கடைசி காண்டமும், நீளமான காண்டமும் இது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தோடு 128 ஸர்கத்தோடு யுத்த காண்டம்  நிறைவு பெறும். ஸ்ரீராமர் ஹனுமானை ஒரு நல்ல காரியம் செய்து முடித்தற்காக மகிழ்கிறார். இனி லங்காவிற்கு எப்படி செல்வது என எல்லாருடனும் கலந்து ஆலோசிக்கிறார், சுக்ரீவன் ஆலோசனைகளைக் கேட்டு, ராமன் ஹனுமானை அழைத்து லங்காவை விவரிக்குமாறு கேட்கிறார். ஹனுமானும் விளக்க, ராமன் கடலை கடப்பதற்கு நல்ல முஹூர்த்தம் குறிக்கிறார். [ ஸர் 4] லங்காவில் ராவணனும் இதேபோன்று ஆலோசித்து ராமனை

Our Bangalore Visit - Aug 2014.

The last time we visited Bangalore was from 07 May 2014 (Wed) to 28 May 2014 (Wed), for Ashok's Ear Surgery. Now, Ashok and Neeraja came to Chennai by car on 15th August 2014 and we went with them in Car on Monday, 18th Aug. On the previous evening (17th) while playing on the street, unfortunately Ashok fell down and his left thumb was fractured. With a pain-killer injection, he started for Bangalore. We arranged a call-driver for the trip (2300.00) 18 Aug 2014, Monday    We started  by 06:35 in the car. We stopped at Vellore (Mrs Prema Lakshminarayanan's house) by 9.30 and had a delicious lunch there. We left Vellore by 11 and reached BTM, Bangalore at 2.15PM.  Ashok consulted two doctors and was advised Surgery tomorrow the 19th. 19 Aug 2014 Tuesday    Left thumb Surgery at 4:00 at Banashankari. Brought to the recovery room by 4:45 PM. Surgery successful. He was sent home by 9.30 and he came at 10 PM. 20 Aug - 31 Aug    We were in Bangalore. Going to various Parks for

Arvind to London

Arvind went to London for a week in August 2014. He left Chennai on Sunday, August 24, via Bombay. And he returned on Sunday, August 31, via Bombay again. We two had gone to Bangalore that time. Rajappa 2-9-2014 09.00

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை

Valmiki Ramayanam - 600

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபந்யாஸம் 2012-ஆம் வருஷம் ஏப்ரல் 01-ஆம் தேதியன்று (அன்று ஸ்ரீராம நவமி) ஆரம்பித்தார். இரண்டு வருஷங்களுக்கு மேல் ஓடிவிட்டன; இன்று (24 ஜூலை 2014) உபந்யாஸத்தின் 600- வது பகுதி. இந்தர்ஜித் செலுத்திய ப்ரஹ்மா அஸ்த்திரத்தினால் மயக்கமுற்று கீழே விழுந்த ஸ்ரீ ராமனையும், ஸ்ரீ லக்ஷ்மணனையும் உயிர்ப்பிக்க, “சஞ்சீவனி” முதலான நான்கு மூலிகைகளை கொண்டு வருமாறு ஜாம்பவான் ஹனுமானிடம் ஆணையிட, ஹனுமான் இமயமலை நோக்கி புறப்படுகிறார். [யுத்தகாண்டம், 74 ... வது ஸர்கம்] இதுவரை அவர் சொல்லியுள்ள 600-ல் குறைந்தது 595-ஐ நானும், விஜயாவும் கேட்டிருப்போம். எல்லாருக்கும், ஸ்ரீ ஹனுமான், ஸீதம்மா ஸமேத ஸ்ரீ ராமர் ஆகியோர் அருள் பாலிக்கட்டும். ஸ்ரீராமஜெயம். rajappa 24-07-2014  

ஒரு இனிய மாலைப்பொழுது

கடற்கரை இன்று 16-ஜூலை-2014 மாலை நானும் விஜயாவும் வெளியில் சென்றோம். மினி பஸ் பிடித்து (6.00 டிக்கெட்) பெஸண்ட் நகர் சென்று பீச்சிற்கு சென்றோம். பீச்சில் அரை மணி நேரம் நடந்தோம்; பின்னர் 20 நிமிஷங்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். அடுத்து, தண்ணீர் அருகே சென்றோம். வெறும் காலோடு சமுத்திர மணலில் நடப்பதே தனி சுகம். தண்ணீரை பார்த்துக் கொண்டு 15 நிமிஷம் போக்கினோம்.   அடுத்து, 15 நிமிஷம் நடந்து ஸ்ரீ வல்லப விநாயகர் கோயிலுக்குள் நுழைந்தோம். சாயரக்ஷை தீபாராதானை பார்த்தோம்..இந்த விநாயகர்  எனக்கு மிகவும் பிடித்த விநாயகர். பெஸண்ட் நகரில் இருந்தபோது வாரத்திற்கு 5 முறையாவது செல்வேன். மீண்டும் மினி பஸ் - வீடு திரும்பினோம்; மனசுக்கு மகிழ்ச்சியாக ஒரு இனிய மாலைப் பொழுது. ஆண்டவனுக்கு கோடி நமஸ்காரங்கள். ராஜப்பா 16-07-2014

வேளச்சேரியில் ஒரு கல்யாணம்.

நேற்று மாலை (13-07-2014, ஞாயிறு), நான், விஜயா, அதிதி மூவரும் வேளச்சேரியில் ” களஞ்சியம் திருமண மண்டபத்தில்” ஒரு கல்யாண வரவேற்பிற்கு சென்றோம். என்ன ஒரு EXPENSIVE வரவேற்பு ! மண்டபம் முழுதும் ஏசி குளிர். Centralised AC. மேலே சாப்பாட்டு கூடத்திலும் ஏசி ! பெரிய்ய ஹால். பெரிய்ய சாப்பாட்டுக் கூடம். மாலை 6 மணிக்கு போனாலும், டிஃபன் காத்திருந்தது. கேஸரி முதலான 4 வகை டிஃபன். காஃபி. பழ ஜூஸ் கொடுத்துக் கொண்டே இருந்தனர். இரவு உணவு தடபுடல் - உருளைக்கிழங்கு ரோஸ்ட், ராய்த்தா, இனிப்பு பச்சடி, வறுவல், பூரி, ஊத்தப்பம், குருமா, CHOLE மசாலா, கட்லெட், காலிஃப்ளவர் மஞ்சூரியன், பப்படம், புலவ், சாம்பார் சாதம்,  வெள்ளை சாதம், ரஸம், தயிர் சாதம், தொட்டுக்கொள்ள வத்தல் குழம்பு, ஊறுகாய்,பாயஸம், பாதாம் கீர், பாதாம் பர்ஃபி, ஸூப் ... கைகழுவிக் கொண்டு வந்தால், பானி பூரி, ஃப்ரூட் ஸாலட், ஐஸ்கிரீம், பீடா. ஆண்டவா, இவ்வளவு வகை உணவு தேவையா ? உணவு எவ்வளவு வீணாகிறது ? ராஜப்பா 14-07-2014

Aanmikam and Sevai

இன்று மாலை நாங்கள் இருவரும் திருவான்மியூரில் ஒரு மாபெரும் கண்காட்சிக்கு சென்றோம். ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவை என்னும் குழுமம் இதை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக சென்னையில் நடக்கும் கோயில்கள், சேவை மையங்கள், உதவிக்கரங்கள் ஆன்மீக மையங்கள் என நூற்றுக்கும் அதிகமாக ஸ்டால்கள் இருக்கின்றன. திருப்பதி-திருமலா தேவஸ்தானம் முதற்கொண்டு யாதகிரிகுட்டா வரை ஆந்திராவில் உள்ள நிறைய ஸ்தலங்களும், கர்னாடகாவில் உள்ள பல ஸ்தலங்களும், இங்கு ஸ்டால் அமைத்துள்ளன. இதுதவிர ஆந்திர மாநில கோவில்களின் சுவாமிகளின் திருவுருவோடு தர்மபிரச்சார ரதங்களும் கண்காட்சி அரங்கில் பக்தர்களின் தரிசனத்துக்காக சென்னைக்கு வருகின்றன. ஸ்ரீசைலம், காளஹஸ்தி, காணிப்பாக்கம், த்வரஹா திருமலை, திருமலை திருப்பதி, கனகதுர்க்கா- விஜயவாடா, யாதகிரி குட்டா ஆகிய இடங்களில் இருந்து ரதங்கள் வருகின்றன. இவை கண்காட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. காளஹஸ்தி ரதத்தில் எழுந்தருளியுள்ள ஞானப் பிரசன்னாம்பிகா சமேத காளகஸ்தீஸ்வரருக்கு ராகுகால பூஜைகள் நடக்கிறது. இதேபோன்று விஜயவாடா கனகதுர்க்

Our Bangalore Visit - May 2014

The last time we visited Bangalore was from 09 Dec 2013 (Mon) to 25 Dec 2013 (Wed), for Arun's Ear Surgery. Now, Vijaya and I left on the morning of Wednesday, the 7th of May 2014 by Double Decker train (0725 dep) for Bangalore. We reached Central by bus A1 and reached Bangalore Cantonment by 1 PM. Took a pre-paid auto to Ashok's house (rs 190.00). 8 May 2014, Thursday    Ashok was admitted in Apollo Hospital, Bannerghatta Road, 6th floor, R. No 6066 . Ear Surgery tomorrow. Preliminary tests were conducted tonight. 9 May 2014 Friday    Right Ear Surgery at 3-30 PM. Brought to the recovery room by 5 PM. And to his room by 6-45 PM. Surgery successful. We went to the hospital twice. 12 May  Monday    Ashok was discharged in the evening. He is improving. 13 May  Tuesday   Vijaya was diagnosed with high BP. 170 / 100.  Full body checkup suggested. "Nationwide" is the hospital at BTM Layout. The checkup was done on 14 May . All parameters are good except BP. Table

Sundara Kaandam

சுந்தர காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆக நான்கு காண்டங்களை முடித்து விட்டார். கடைசியாக கிஷ்கிந்தா காண்டத்தை 25-12-2013 அன்று நிறைவு பண்ணினார். 26-12-2013 வியாழன் முதல் சுந்தர காண்டம் தொடங்கினார். [பகுதி 450] ஸ்ரீ ராமாயணத்தின் மிக முக்கியமான காண்டம் இது. மொத்தம் 68 ஸர்கங்கள் உள்ளன. ராம தூதனாக ஹனுமான் லங்கா நோக்கிப் புறப்படுகிறார். கடலை கடக்க மேலே பறக்கிறார். இடையில் இருந்த மய்நாகா மலையை இடித்து. த்ள்ளி செல்கிறார். தன் மீது உட்கார்ந்து சிறிது இளைப்பாறி செல்லுமாறு மலை விண்ணப்பிக்கிறது. அன்புடன் அதை மறுத்து, ஹனுமான் மேலே செல்கிறார். அடுத்து சுரஸா என்னும் ராக்ஷசியின் வாயில் நுழைந்து அதே வேகத்தில் வெளியே வந்து பறக்க ஆரம்பிக்கிறார். அடுத்து ஸிம்ஹிகா என்னும் ராக்ஷசியையும் முடிக்கிறார். கரையை கடந்து லங்கா நகரை அடைகிறார் (ஸர்