கடற்கரை
இன்று 16-ஜூலை-2014 மாலை நானும் விஜயாவும் வெளியில் சென்றோம். மினி பஸ் பிடித்து (6.00 டிக்கெட்) பெஸண்ட் நகர் சென்று பீச்சிற்கு சென்றோம்.
பீச்சில் அரை மணி நேரம் நடந்தோம்; பின்னர் 20 நிமிஷங்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். அடுத்து, தண்ணீர் அருகே சென்றோம். வெறும் காலோடு சமுத்திர மணலில் நடப்பதே தனி சுகம். தண்ணீரை பார்த்துக் கொண்டு 15 நிமிஷம் போக்கினோம்.
அடுத்து, 15 நிமிஷம் நடந்து ஸ்ரீ வல்லப விநாயகர் கோயிலுக்குள் நுழைந்தோம். சாயரக்ஷை தீபாராதானை பார்த்தோம்..இந்த விநாயகர் எனக்கு மிகவும் பிடித்த விநாயகர். பெஸண்ட் நகரில் இருந்தபோது வாரத்திற்கு 5 முறையாவது செல்வேன்.
மீண்டும் மினி பஸ் - வீடு திரும்பினோம்; மனசுக்கு மகிழ்ச்சியாக ஒரு இனிய மாலைப் பொழுது. ஆண்டவனுக்கு கோடி நமஸ்காரங்கள்.
ராஜப்பா
16-07-2014

Comments