நமது பாரம்பரியம்.
மிக்ஸியும் க்ரைண்டரும் தோன்றுவதற்கு முன், சுமார் 30,35 வருஷங்களுக்கு முன்னர், வீடுகளில் அம்மிக்கல், ஆட்டு உரல், எந்திரம் போன்ற கற்களை பயன் படுத்தி வந்தோம்.
இன்று அம்மிக்கல்லைப் பற்றி பேசுவோம். அம்மி என்பது செவ்வகமான ஒரு கல் (rectangle); அம்மிக்கல்லில் வரும் “கல்” என்பது ஒரு குழவி. cylindrical வடிவில் இருக்கும்.
அம்மிக்கல்லில் அரைப்பது, பொடி பண்ணுவது போன்றவற்றை செய்யலாம். சட்னி, துவையல், சாம்பார் பொடி, ரசப் பொடி போன்றவற்றை செய்ய இது பயன் படுத்தப்பட்டது
அம்மியின் மேற்பகுதி சொரசொரப்பாக இருக்கும். இதை நன்கு சுத்தப்படுத்திய பிறகு அரைக்க வேண்டியதை இதன் மேல் வைக்க வேண்டும்; தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் ஆகியவைகளை வைத்து, முதலில் சிறிது நசுக்கி கொள்ளவும்.
பிறகு, குழவியை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, முன்னும் பின்னும் ஓட்டினால் தேங்காய் முதலியவை அரைபடும். சிறிது சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கு சுவையான சட்னி தயார்.
இதே போன்று, சாம்பார் பொடி, ரஸம் பொடி, மிளகு பொடி, போன்றவற்றையும் செய்யலாம். ஜிம்முக்குப் போய் 1000, 2000 ரூ என செலவு செய்து கிடைக்கும் பலன்களை, இந்த அம்மி, குழவியில் 20 நிமிஷம் தேங்காய் சட்னி அரைத்தால் செலவு இல்லாமல் பெறலாம்.
அரைத்த பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இதை அலம்புவதும் எளிது. பல மாதங்கள் உபயோகித்த பின், அம்மியின் சொரசொரப்பு மழுங்கி விடும் - அப்போது “அம்மி கொத்தவில்லையோ, அம்மி” என தெருவில் கூவி செல்லும் ஆளை கூப்பிட்டு கொத்த சொல்லலாம். ஒரு கூரிய ஆணியையும் சுத்தியையும் வைத்துக் கொண்டு, அந்த ஆள் அம்மியை “கொத்தி” விடுவார். ஒரு முறை நன்றாக அலம்பிய பின்னர் மீண்டும் அம்மியை பயன் படுத்த ஆரம்பிக்கலாம்.
நாளைக்கு, இட்லி மாவு, தோசை மாவு போன்றவற்றை அரைக்க பயன்படும் “ஆட்டு உரல் (அ) ஆட்டுக் கல் (அ) கல் உரல்” பற்றி பேசுவோம்.
ஆட்டுக் கல்லின் இன்னொரு முக்கியமான பயன் --- அப்பளம் மாவு பண்ணுவது. உளுத்தம் பருப்பை நன்கு அலம்பி, காயவைத்து, அதை “ஏந்திரத்தில்” மாவாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த மாவில் சிறிது பெருங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை ஆட்டுக் கல்லில் வைத்து, ஒரு இரும்பு உலக்கையால் இடிக்க வேண்டும். அவ்வப்போது விளக்கெண்ணையை கையில் தடவிக் கொண்டு மாவில் சேர்த்து இடிக்க வேண்டும். மாவு நன்றாக இளகி விடும். பின்னர் உருண்டைகளாக உருட்டி, அப்பள குழவியால் வட்டமாக இட்டு, வெயிலில் ஓரிரண்டு தினங்கள் காய வைத்தால் அப்பளம் ரெடி.
அப்பள மாவை ஆட்டுக் கல்லில் இடிக்கும் போது, அதன் வாசனை ஊரை கூட்டும். சுவையோ ஓஓஒ கேட்க வேண்டாம். அப்படி ஒரு சுவை.
மாவை தின்பதற்காகவே சிறுவர் முதல் பெரியவர் வரை ஒரு கூட்டமே அங்கு மொய்க்கும் !! அப்பளம் இட ஆரம்பிப்பதற்குள், கால்வாசி மாவு காணாமல் போயிருக்கும் !
ராஜப்பா
24-08-2017

Comments