குமாரராஜா முத்தையா இசையரங்கம், ராஜா அண்ணாமலைபுரம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (எங்கள் வீட்டிற்கு அருகில்) செட்டிநாடு வித்யாஷ்ரம் (Chettinad Vidhyashram) என்ற புகழ்பெற்ற ஒரு ஸ்கூல் உள்ளது. ராஜா அண்ணாமலை செட்டியார் அவர்களின் வம்சத்தினர் இந்த் ஸ்கூலை நிறுவி, நிர்வகித்து வருகின்றனர். (ஏரியா பெயரே ராஜா அண்ணாமலைபுரம் !!)
இந்த ஸ்கூலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 முதல் 15 வரை தினம்தினம் கர்னாடக இசைக்கலைஞர்களை கூப்பிட்டு கச்சேரிகள் நிகழ்த்துகிறார்கள். பாடுபவர்கள் எல்லாருமே மிகப் புகழ்பெற்றவர்கள் ! அனுமதி இலவசம். பல கச்சேரிகளுக்கு கூட்டம் அலைமோதும். தொட்டுவிடும் தூரத்தில் உள்ள வங்கக்கடலுக்குப் போட்டியாக இங்கும் ரசிகர்கள் கடல் இருக்கும். 6-30 மணிக்கு ஆரம்பமாகும் கச்சேரிக்கு 4-30 மணிக்கே கூட்டம் பிதுங்கி வழியும். (இது எல்லா கச்சேரிகளுக்கும் பொருந்தாது.)
பெரிய்ய பார்க்கிங் ஏரியா. நிறைய கார்களை தாராளமாக நிறுத்தலாம். இருந்தும், சில கச்சேரிகளுக்கு வரும் கார்கள், இந்த பார்க்கிங்கும் போதாமல், துணை ரோடு, மெயின் ரோடு .... என கார்கள் நிறுத்தவே இடம் போதாது. (இந்த கார்களில் வருபவர்களுக்கு எதற்கு அனுமதி இலவசம்? ஆளுக்கு 10 ரூபாய் டிக்கெட் வைத்தாலும், சுளுவாக 10000.00 க்கு மேல் வசூலாகுமே? ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கலாமே? - இவை என்னுடைய நெருடல்கள்.)
பெரிய அரங்கு; Fully air-conditioned; எல்லா வசதிகளும் நிரம்பியது. Excellent acoustics. பாடுபவர்கள் தமிழ்நாட்டின் #1, #2, #3 என்னும் பாடகிகள்/பாடகர்கள். அனுமதி இலவசம். இவை போதாதா கூட்டம் வர?
ஒவ்வொரு ஆண்டும் விஜயா 4-5 கச்சேரிகளுக்கும் நான் 1 அல்லது 2 கச்சேரிகளுக்கும் செல்வது வழக்கமாகி விட்டது. வீட்டிலிருந்து 15 நிமிஷ நடை.
ராஜப்பா
6:20PM 12 Dec 2008

Comments