ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் தினந்தோறும் காலை 6-30 முதல் 6-45 வரை தெள்ளிய தமிழில் கீதை உபன்யாஸம் செய்து வருவது (பொதிகை டிவியில்) தெரிந்ததே. 2007 ஜனவரி 18 ஆம் தேதி வியாழனன்று உபன்யாஸம் துவங்கியது. இரண்டு வருஷங்கள் ஆகப்போகின்றன.
இவரைப்பற்றியும் இவரது கீதை உபன்யாஸத்தைப் பற்றியும் ஏற்கனவே நான் 02-01-2008 அன்றும், 18-01-2008 அன்றும் எழுதியுள்ளேன். முதல் பதிவு இங்கேயும், அடுத்தது இங்கேயும் படிக்கவும்.
இந்த 2008 டிசம்பர் 12 வெள்ளியன்று அவரது 500வது சொற்பொழிவு! கீதையின் 12வது அத்தியாயம் முதல் ஸ்லோகம் சொல்லுகிறார்.
500 சொற்பொழிவுகளில் 475 க்கும் மேலாக விஜயாவும் நானும் விடாமல் கேட்டுக்கொண்டு வந்துள்ளோம். முதலில், இரண்டு நாட்கள் குளிக்காமல் கேட்ட நான் பின்னர் 6 மணிக்கு தினமும் குளித்துவிட்டு கேட்க ஆரம்பித்தேன். 6 மணிக்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக 5-45, 5-30, 5-00 மணியென சீக்கிரமாக எழுந்துகொண்டு உடனே குளித்து ... என மாறியது. சென்ற இரண்டு மாதங்களாக இது 4-30 அல்லது 4-45 என இன்னும் சீக்கிரமாக மாறியுள்ளது.
இந்தமாதிரி ஒரு நியமமும், மனக்கட்டுப்பாடும் எனக்கு எப்படி வந்தது? யார் அருளியது? ஸ்ரீ கண்ண பரமாத்மாவும், ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனும் தான் !! அவர்கள் பாதாரவிந்தங்களில் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.
ராஜப்பா
12 Dec 2008 1000 AM
Comments