Skip to main content

மாவிளக்கு Maavilakku

மாவிளக்கு

மாவிளக்கு போடுவது என்பது நம் குடும்பத்தில் தொன்றுதொட்டு வரும் பழைமையான ஒரு சம்பிரதாயம். நம் அம்மா சொல்லிக் கொடுத்த ஒரு நல்ல வழக்கம்.

நம் குலதெய்வம் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் மற்றும் ஸ்ரீ வைத்தியநாதஸ்வாமி என்பதால் புரட்டாசி மாஸம் சனிக்கிழமையன்று மாவிளக்கு வீட்டில் ஏற்றுவது என்பது வழக்கம். ஆடி மாஸம் மற்றும் தை மாஸம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவதும் வழக்கம்.

சிற்றஞ்சிறு காலே எழுந்து, குளித்து, வீட்டையும் ஸ்வாமி பிறையையும் நன்கு அலம்பி, கோலம் போட்டு, ஒரு சுத்தமான தாம்பாளத்தில் மாவிளக்கு போட வேண்டும்.

அரிசியைக் களைந்து சுத்தப்படுத்திய பின், மாவாக அதை அரைத்துக் கொள்ளவும். வெல்லம் சேர்த்து மாவில் நன்கு கலக்கவும். நடுவில் விளக்கு போல் குழித்து, திரி போட்டு, நிறைய நெய் விட்டு, விளக்கை ஏற்றவும். அம்மனுக்காக என்றால் இரண்டும், ஸ்வாமிக்காக (புரட்டாசி சனிக்கிழமை) என்றால் ஒரு விளக்கும் ஏற்ற வேண்டும்.

புஷ்பங்கள் சாற்றி, வெற்றிலை, பழம், தேங்காய் நைவேத்யத்துடன் ஒரு பாயஸமும் செய்து ஸ்வாமிக்கு / அம்மனுக்கு நைவேத்யம் பண்ணலாம். தூப, தீப, கற்பூர தீபாராதனை செய்து, நமஸ்காரம் செய்யவேண்டும்.

இந்த வழக்கத்தில் ஜோதி தத்துவமும் இன்னும் பல தத்துவங்களும் அடங்கியுள்ளன.

இன்று (23 ஜனவரி 2009) தை வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டில் கிருத்திகாவும், விஜயாவும், அருண் வீட்டில் காயத்ரியும் மாவிளக்குப் போட்டனர்.
பெரியவர்கள் அனைவருக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.

ராஜப்பா
23-01-2009 11 மணி

Comments

Anonymous said…
Instead of Green Banana , It is better to have Yellow Banana which gives mangalagaramana feel.
( My grand father used to tell me about this every time ).

thanks,
subarayan

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011