இந்த வருஷம் (2009), ஜூலை 23, 24 தேதிகளில் நானும், விஜயாவும் திருப்பாதிரிப்புலியூர் சென்றோம். அங்குள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கும், ஸ்ரீ பாடலீஸ்வரர்க்கும், ஸ்ரீ ப்ருஹந்நாயகி அம்மனுக்கும் அபிஷேகம் /அர்ச்சனை செய்வதாக திட்டம். வரும் ஆகஸ்ட் 14, 2009 ஆடிக்கிருத்திகை அன்று அம்மாவிற்கு (ஸ்ரீமதி சம்பூரணம் அம்மாள்) 100-வது பிறந்தநாள் வருவதை ஒட்டி தானதர்மங்களும், அபிஷேக, அன்னதானங்களும் செய்து அம்மாவின் நினைவை கொண்டாடலாம் எனத் திட்டமிட்டோம். அபிஷேகங்கள் / அர்ச்சனைகளை சென்னையில் செய்வதை விட, அம்மா 35 வருஷங்களுக்கு மேல் வசித்த திருப்பாதிரிப்புலியூர் கோயில்களில் செய்தால் இன்னும் நிறைவாக இருக்குமே எனத் தோன்றியது. திடீரெனத் தோன்றிய இந்த எண்ணத்தை விரைவாக செயல்படுத்தினோம். ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை முடித்தேன். அர்விந்த் தன் காரை எடுத்துப் போகுமாறு சொன்னான். முதலில் அருணைத்தான் கார் கேட்டிருந்தேன்; அவனும் தர ஒப்புக்கொண்டிருந்தான்; இடையில் அர்விந்த் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், அவனது காரையே பயன்படுத்தினோம். சாவித்திரியை வருகிறாயா என அழைத்தேன்; சந்தோஷமாக சம்மதித்தாள்; மங்களமும் அவ்வாறே ச