அடையாறு பூங்கா
சென்னை நகரின் இரண்டு நீர்வழிப் பாதைகளான கூவம் மற்றும் அடையாறு நதிகள், கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. இந்த 2 ஆறுகளிலும் கழிவு நீர் மிகப்பெரிய அளவில் கலப்பதால், ஆற்று நீரும், அதன் சுற்றுப்புற சூழலும் மிக மோசமாக உள்ளன. இந்த சீர்கேட்டை மாற்றுவதற்காக எடுக்கப்பட்டு வரும் தமிழக அரசின் ஒரு முக்கிய திட்டம் - அடையாறு பூங்கா.
அடையாறு கடலில் கலக்குமிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரையில் உள்ள 358 ஏக்கர் இடம் அடையாறு கழிமுக பகுதியாகும். இதிலும், செட்டிநாடு அரண்மனையிலிருந்து, பட்டினப்பாக்கம் வழியாக மந்தைவெளிப்பாக்கத்தில் முடியும் 58 ஏக்கர் பரப்பை மேம்படுத்தி அடையாறு பூங்காவாக ஆக்குவது குறிக்கோள்.
கடல்சூழ் நீர்- சதுப்பு நிலப்பரப்புகளில் வாழும் இந்திய அல்லது வெளிநாடுகளிலிருந்து வரும் 200-க்கும் மேலான பறவை இனங்கள் வேகமாக அழிந்து வரும் (extinct) ஆபத்தான நிலையில் உள்ளன. இந்தப் பறவைகள் வந்து தங்குவதற்காக பூங்காவின் சதுப்பு நிலங்களை அகழ்ந்து உப்புநீர் பரப்பாக ஆக்கியுள்ளனர்.
இந்த நீர்ப் பரப்பில் தற்போது வெள்ளை நிற கொக்குகளும், கறுப்பு நிற வாத்துக்களும் காணப்படுகின்றன. அவை நீரில் நீந்தி வருவதைக் காண பரவசமாகிறது. தினமும் விஜயாவும் நானும் walking போகும்பொழுது, இந்த இடத்தில் 5 நிமிஷங்களாவது நின்று பறவைகளை பார்த்து இயற்கை அழகில் ஒன்றிப் போய் விடுகிறோம். இன்னும் நிறைய பறவைகள் வரவேண்டும், அவற்றைப் பார்த்து மகிழ வேண்டும்.
அடையாறு பூங்காவின் website : http://www.adyarpoonga.com/index.html
ராஜப்பா
10:00 மணி
08-07-2009

Comments