நேற்று (06-07-2009) காலை 8 மணி அளவில், விஜயாவும் நானும் மாம்பலம் சென்றோம். லஸ்ஸிலிருந்து 12G பஸ்ஸில் அங்கு போனோம். (உமா) சுந்தரின் அண்ணா முரளீதரனின் மகனுக்குக் கல்யாணம். மங்களமும், கோபியும் எங்களுடன் 12G யில் வந்தனர். வழக்கமான காலை சிற்றுண்டி, மதிய உணவிற்குப் பின், அங்கிருந்து கிளம்பினோம்.
இடையில், மாம்பலம் விநாயகர் தெருவிலுள்ள ஸ்ரீராம் மந்திருக்கு சென்றோம்; ராமமூர்த்தி அத்திம்பேர், கோபி, மங்களமும் வந்தனர். இந்த இடத்தில் “ஸ்ரீராம நாம வங்கி” உள்ளது. சென்னை மற்றும் பல இடங்களில் பலரும் எழுதும் ஸ்ரீராமஜெயம் நாம நோட் புஸ்தங்களை இங்கு சேமித்து வருகின்றனர். இது (ஜூன் 2009) வரை 500 கோடி நாமாக்கள் சேர்ந்துள்ளன. அழகாக, பத்திரமாக இவற்றை பாதுகாத்து வைத்துள்ளனர். எண்ணிக்கை 1000 கோடியானதும், எல்லாவற்றையும் அடித்தள்த்தில் வைத்து, மேலே ஸ்ரீராமனுக்குக் கோயில் கட்ட எண்ணியுள்ளார்கள். 2011 ஆரம்பத்தில் இது நடக்கும் எனச் சொன்னார்கள். பார்க்க பரவசமாக இருக்கிறது.
உங்கள் வீட்டில் ஸ்ரீராமஜெயம் நாமா எழுதிய புஸ்தகங்கள் இருந்தால், அவற்றை இங்கு கொண்டு வந்து கொடுத்து 1000 கோடி முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள். கோயில் கட்டும் பணியில், மற்றும் அன்னதான பணியில் உங்கள் அன்பளிப்பையும் தரலாம்.
ராஜப்பா
09:50 மணி
07-07-2009

Comments