சென்ற 6 நாட்களாக சென்னையில் பல இடங்களில் நடந்துவந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நேற்றோடு (16-01-2010) நிறைவு பெற்றன. பெஸண்ட்நகர் எல்லியட்ஸ் பீச்சில் இந்த நிறைவு விழாவிற்காக காலையிலிருந்தே பிரம்மாண்டமான தடபுடலான ஏற்பாடுகள் துவங்கின. விஜயாவும் நானும் இரவு 8 மணிக்கு பீச்சிற்குச் சென்றோம்; நிறய கூட்டம். மேடையில் கிராமிய நடனங்கள் FOLK DANCES . பொதிகை டீவியில் வைத்தால் அந்த டீவி பக்கமே போகாதவர்கள், இங்கு மட்டும் எப்படி “ரசிக்கிறார்கள்”? என்று வியந்து போனேன். நிறைய பேர்களுக்கு நன்றி சொல்லிய பின்னர், வாண வேடிக்கைகள் FIREWORK DISPLAY ஆரம்பித்தன. அடுத்த 10-12 நிமிஷங்களுக்கு வானமே வண்ணமயமானது; நன்றாக இருந்தது. 9-30 மணிக்கு முடிவுற்றது. வீடு திரும்பினோம். பீச் ரோட்டில் இருபது, முப்பது “சாப்பாட்டுக் கடைகள்” வைத்திருந்தனர். ஏராளமானோர் கையில் தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரோடு முழுதும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், டம்ளர்கள் என அசிங்கம். இன்று காலை 7 மணிக்கு walking போகும்போது பார்க்கிறேன் – அதே ரோடு எல்லா CUTOUTகளும் நீக்கப்பெற்று, சுத்தமாகக் காணப்பட்டது; இரவு முழுதும் வேலை செய்திரு