வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் சரித்திரம் யாவரும் அறிந்த ஒன்று. 8ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் விஷ்ணுசித்தர் என்னும் ஒரு அடியார் வசித்து வந்தார். தன்னுடைய தோட்டத்திலிருந்து தினமும் பூக்கள் பறித்து ஆண்டவனுக்கு சமர்ப்பிப்பதே அவரது தொண்டாக இருந்து வந்தது. ஒரு நாள் பூப்பறிக்க சென்றபோது, ஒரு துளஸி செடியின் கீழ் ஒரு குழந்தை இருக்கக் கண்டார்.
குழந்தை பாக்கியம் இல்லாத விஷ்ணுசித்தர் தமபதியினர், இந்தக் குழந்தையை மிக மகிழ்ச்சியுடன் வளர்க்க ஆரம்பித்தனர். “பூமி மாதாவின் கருணை”யினால் கிடைத்த குழந்தைக்கு “கோதை” எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்தனர்.
விஷ்ணுசித்தர் பெரும் விஷ்ணுபக்தராதலால் அவர்கள் வீட்டில் எப்போதுமே ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பற்றிய பாடல்களும் கதைகளும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் வளர்ந்த ஆண்டாள் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணர் மேல் பக்தியும் ப்ரேமையும் கொள்ள ஆரம்பித்தாள்.
நாளடைவில் இந்த ப்ரேமை கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக்கொள்ளும் காதலாக மாறியது. விஷ்ணுசித்தர் தற்போது பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார். அவர் ஆண்டாளுக்கு பாவை நோன்பைப் பற்றி விளக்கி, இந்த நோன்பு நோற்றால் கிருஷ்ணனை அடையலாம் என விளையாட்டாகச் சொன்னார்.
ஆண்டாள் சிறுமியாக இருந்தாலும், பாவை நோன்பு இருக்க ஆரம்பித்தாள்; அவளது நாவிலிருந்து பக்தியும், ப்ரேமையும் கலந்து பரிமளிக்கும் 30 பாசுரங்கள் வந்தன. “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் …” என ஆரம்பித்து, “வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை” என முடியும் திருப்பாவை பாடல்களில் ஸ்ரீ ஆண்டாளின் பக்தியும் கிருஷ்ணன் மேல் அவள் கொண்ட அபரிமிதமான காதலும் வெளிப்படுகின்றன.
ஸ்ரீ ரங்கநாதருடன் நிகழ்ந்த ஸ்ரீ ஆண்டாளின் திருக்கல்யாணத்தை விஷாகா ஹரி தன்னுடைய பக்தி பரவசமான உபந்யாஸத்தால் நம் கண் முன் வந்து நிறுத்துகிறார். திருப்பாவையின் பல பாசுரங்களை விஷாகா ஹரி பாடும்போது நம் மனசு எங்கேயோ போய்விடுகிறது – சிலிர்க்கும் ஒரு அனுபவம்.
பெரியாழ்வாரும் மற்றவர்களும் இதை ஒரு சிறுமியின் விளையாட்டாகவே எண்ணிக் கொண்டிருக்க, ஒரு நாள் ஆண்டவனுக்கு சார்த்த வைத்திருந்த மலர்மாலையை எடுத்துவிட்டு தான் சூடியிருந்த மாலையை அங்கு கோதை வைத்துவிட்டாள்; இது தெரியாத பெரியாழ்வார் அந்த மாலையை அர்ச்சகரிடம் கொடுக்க, அவரும் அதை பகவானுக்கு சார்த்தப் போனார்; அப்போது மாலையிலிருந்து கூந்தல் மணம் வீச, ”யாரோ சூடிக்களைந்த மாலை இது, அபசாரம்,” என பெரியாழ்வாரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.
”கோதையின் வேலையிது,” என்று சிறுமி மீது கோபம் கொண்டு, பெரியாழ்வார் வேறு ஒரு மாலையை மீண்டும் அர்ச்சகரிடம் கொடுக்க, அவரும் அதை பகவானுக்கு சாத்தப் போனார். அப்போது ஆண்டவன் ப்ரத்யட்சமாகி தனக்கு “கோதை சூடிய மாலைதான் வேண்டும்,” என்று சொல்ல, பெரியாழ்வார் வியப்பிலாழ்ந்தார்.
வீட்டுக்கு ஓடி வந்து, “ஆண்டாள் !” என கோதையை அழைத்து நடந்ததை விவரித்தார். அன்று முதல் “சூடிக் கொடுத்த கோதை” ஆண்டாள் என்றே அழைக்கப் பெற்றாள்.
பின்னர் ஸ்ரீரங்கநாதனே ஆயிரம் யானைகள் சூழ வந்து முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் ஸ்ரீஆண்டாளை திருக்கல்யாணம் பண்ணிக் கொண்டார்.
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
ஸ்ரீமதி விஷாகா ஹரியின் புதிய DVDயைக் கேளுங்கள் – ஆண்டாளின் பக்தி பரவசத்தில் முழுகி ரசியுங்கள். மிக அருமையான உபந்யாஸம். ஸ்ரீமதி விஷாகா ஹரி ஆண்டவன் நமக்கு அளித்துள்ள ஒரு தெய்வீகப் ப்ரஸாதம்.
Rajappa
08-01-2010
காலை 1000 மணி

ஆயிரம் யானைகள் சூழ ஸ்ரீரங்கநாதனுடன் தன் திருமணம் நிகழ்வதாக “கனா” காண ஆரம்பித்த கோதை, தன்னுடைய கனாவினை வாரணம் ஆயிரம் மூலம் உலகிற்கு அளித்தாள். திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இந்தப் பாசுரங்கள் விளக்குகின்றன.

Comments