இந்த வருஷம் (2009-2010 விரோதி) மார்கழி மாஸம் 2009 டிஸம்பர் 16ஆம் தேதியன்று பிறந்தது. முதல் நாள் நான் அருகிலுள்ள ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயிலுக்குப் போனேன் என்றாலும், அடுத்த ஒன்பது நாட்களுக்குப் போகமுடியவில்லை – உடல் நலம் சரியாக இல்லாததால் காலை வேளைகளில் வெளியே கிளம்பவே முடியவில்லை.
மீண்டும் டிஸ 27-ஆம் தேதிமுதல் போக ஆரம்பித்தேன். 0415க்கு அல்லது 0430க்கே எழுந்து குளித்து, என்னுடைய வழக்கமான பாராயணங்களை சொல்லிவிட்டு, ஸ்ரீமத் பாகவதம் உபந்யாஸம் முடிந்ததும் 0645க்கு செல்வேன். ஸ்வாமி தரிஸனத்திற்குப் பிறகு சுடச்சுட வெண்பொங்கல் கிடைக்கும். ஈஸ்வரன் கோயிலிலிருந்து ஸ்ரீவரஸித்தி விநாயகர் கோயிலுக்குச் செல்வேன்; பிறகு வீடு.
டிஸம்பர் 30ஆம் தேதி முதல் விஜயாவும் வர ஆரம்பித்தாள்; காலை 0515க்கு எழுந்து, குளித்து, பாராயணம் சொல்லிவிட்டு அவளும் என்னுடன் தினமும் வர ஆரம்பித்தாள்.
இந்த வழக்கம் மார்கழி முழுதும் நீடித்தது. தினமும் காலையில் சரோஜா அக்காவை கோயிலில் சந்திப்போம். அவள் தன் வீட்டிற்கு கிளம்பியதும் நாங்கள் விநாயகர் கோயிலுக்கும் சென்று விட்டு, வீடு திரும்புவோம். தினமும் பொங்கல் பிரஸாதம் கிடைக்கும்.
இதோ, இன்று 2010 ஜனவரி 13ஆம் தேதி – மார்கழி மாஸம் நிறைவு பெற்றது. இவ்வளவு நாட்கள் தினந்தோறும் ஸ்வாமி தரிஸனம், காலை வேளை நடை என காலைப்பொழுது இனிதாக மன நிறைவாகக் கழிந்தது. அடுத்த மார்கழி வரை இனி காக்க வேண்டும்.
”மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்”
ராஜப்பா
13-01-2010
19:25

Comments