வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல ஊர்களிலும் சென்று ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாஸங்கள் செய்து வருகிறார். இதன் அங்கமாக நேற்று அவர் ஹோசூர் சென்று உபன்யாஸம் செய்து வருகிறார். நேற்று, இன்று, நாளை (25,26,27 ஆகிய மூன்று தேதிகளில் மாலை 6 மணிக்கு)
உபன்யாஸம் செய்யும் இடம் சாவித்திரி வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது. சாவித்திரி நேற்று மாலை போயிருந்தாள்; இன்றும் போயிருப்பாள்.
சாவித்திரியும் ஹோசூரில் அவளது குழுவினரும் சேர்ந்து பஜனைகள், விசேஷ பூஜைகள், சஹஸ்ரநாமம் சொல்லுதல் இன்ன பிற ஆன்மீக விஷயங்களில் / தொண்டுகளில் ஈடுபடுவது எல்லாருக்கும் தெரியும்.
இவற்றை நடத்துவதற்காக சாவித்திரி வீட்டின் பக்கத்தில் ஒரு மாமி (புவனா மாமி) தன் வீட்டின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார். வருஷம் முழுதும் இங்கு பலவித பக்தி, ஆன்மீக சம்பந்தமான விழாக்கள் நடைபெறும். நானும் விஜயாவும் கூட சில பூஜைகளுக்கு சென்றுள்ளோம். BLOGம் எழுதியுள்ளேன். இந்த இடத்திற்கு “தபோவனம்” என பெயரிட்டுள்ளார்கள்.
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி ஹோசூர் வருகிறார் என்பது தெரிந்ததும், அவரை தபோவனத்திற்கு அழைத்து வணங்க வேண்டும் என சாவித்திரி மற்றும் குழு எண்ணியது.
வருவதற்கு ஒத்துக் கொள்வாரா என்பதே தெரியாத நிலையில், இவர்கள் முன் - வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். இடத்தை நன்கு அலம்பி, மெழுகி, கோலங்கள் போட்டு, ஸ்வாமி-அம்பாள் உருவப் படங்களை துடைத்து, குத்து விளக்கு போன்ற பூஜை சாமான்களை தேய்த்து, அலம்பி மெருகேற்றி .. . என வேலைகள் நீண்டன. இவற்றில் சாவித்திரியின் பங்களிப்பு நிறைய. நேற்று காலை 5, 6 மணி நேரம் இதில் செலவிட்டாள்.
நேற்று (வெள்ளி, 25) மாலை 9-30 க்கு அவரது உபன்யாஸம் நிறைவு பெற்றதும், அவரை அணுகி தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள். அவரும் உடனே ஒத்துக் கொண்டுவிட்டார்! நேற்று இரவோடு இரவாக மற்ற வேலைகளில் முழுகி விட்டனர்.
அவருக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், ஷால் போன்றவை வாங்குவது, பூஜை செய்ய புஷ்பங்கள் வாங்குவது, அவற்றை மாலைகளாக தொடுப்பது, சக்கரை பொங்கல் போன்ற ப்ரஸாதங்கள் ஆர்டர் செய்வது, ஃபோட்டோக்ராஃபருக்கு சொல்லுவது, ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்ய ஏதாவது பணணுதல் etc etc நூறு விதமான வேலைகள். சாவித்திரி இரவு 2 மணி வரை இந்த வேலைகளில் ஈடுபட்டாள்.
இன்று (சனிக்கிழமை, 26) காலை 7, 7:30 க்கே தபோவன்ம் சென்று, ஸ்வாமி உருவப்படங்களை துடைத்து, குங்குமம், சந்தனம் இட்டு, தொடுத்த மாலைகளை அணிவித்து, விளக்குகள் ஏற்றி சாவித்திரியும் குழுவும் தயாரானார்கள். சாவித்திரியின் பங்கு இதில் அதிகம்.
வேளுக்குடி வந்ததும், அவரை பூரண கும்பம் வைத்து வரவேற்றனர். பின்னர் சிறிய பூஜை. ஷால் போர்த்தி அவரை வணங்கினர். இரண்டு நிமிஷங்கள் பேச அழைத்தனர். “நான் பேசவில்லை; நீங்கள் தினமும் பாராயணம் பண்ணும் ஸ்லோகங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் இவற்றை எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கள், நான் கேட்கிறேன்,” என்றாராம். உட்கார்ந்து உன்னிப்பாக கேட்டாராம். எல்லாருக்கும் ஒரே சந்தோஷம்.
வெளியில் எங்கும் அவர் சாப்பிடுவது கிடையாது (அவரது மனைவி எல்லா இடங்களுக்கும் சென்று தினமும் தன் கையால் சமைத்து போடுகிறாராம்) எனவே நிவேதனமான பால், பழங்களை அருந்தி விட்டு அவர் திரும்பினார். அவர் நடத்தும் கிஞ்சித்காரம் அறக்கட்டளைக்கு (ட்ரஸ்ட்) இவர்கள் ரூ 6000 க்கும் மேல் அளித்தனர்.
சாவித்திரிக்கு பரம திருப்தி, உள்ளம் முழுதும் சந்தோஷம். இவ்வாறு ஸ்வாமி கார்யங்களில் உள்ளார்ந்த முழு மனசுடன் ஈடுபடுவது எல்லாருக்கும் கிட்டாது; சாவித்திரிக்கு கொடுப்பினை இருக்கிறது. திருப்தியாக செய்கிறாள். சந்தோஷமாக இருக்கிறாள்.
ஸ்ரேயான் த்ரவ்யமயாத்-யஜ்ஞாத் ஜ்ஞான யஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரிஸமாப்யதே
என்று கீதை ஞானகர்மஸந்யாஸ யோகத்தில் (4:33) கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு சொல்லுகிறார். (திரவியம் கொண்டு செய்யப்படும் யஜ்ஞங்களை விட, பக்தியோடு செய்யப்படும் ஜ்ஞான யஜ்ஞங்கள் மிக சிறந்தவை). இது போன்று பகவானின் பணிகளில் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே ஜ்ஞான யஜ்ஞம். ஆயிரம், லக்ஷம் என செலவு செய்து செய்யப்படும் த்ரவ்ய-மயாத் யஜ்ஞாத் (திரவியம் மயமான யஜ்ஞங்களை விட) இதுவே ஸ்ரேயாத் என்பது பகவானின் வாக்கு.
இதில் நான் ஒன்றும் பங்களிக்கவில்லை என்றாலும், இன்று என் மனசு முழுக்க சந்தோஷமாகவும், திருப்தியாகவும் உள்ளது.
சாவித்திரியும் எல்லாரும் நன்றாக இருக்கட்டும்.
ராஜப்பா
5-30 மாலை
26-03-2001

Comments