Skip to main content

Bhima Ratha Santhi

பீமரத சாந்தி (17-7-2011)

ஒருவருக்கு 69 வயசு முடிந்து 70 தொடங்கும்போது பீமரத சாந்தி பண்ணுவது வழக்கம். நான் 1941-ல் பிறந்தவன்; எனவே 2011-ல் 69 முடிந்தது. என் பிள்ளைகள் மூவரும் பீமரத சாந்தி பண்ணிக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள்; புது வீட்டில் அதுவும் சொந்த வீட்டில் பண்ணிக் கொள்வது இன்னும் விசேஷமானது; எனவே மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டேன்.

என்னுடைய நக்ஷத்திரம் 2011, ஜூலை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தது. ஒருநாள் முன்பு அதாவது ஜூலை 16-ஆம் தேதி காலை 7 மணிக்கு இதைப்பற்றி என்னிடம் அர்விந்த் முதன்முதலாக சொன்னான். VERY VERY SUDDEN DECISION. எல்லா காரியங்களையும் அர்விந்த - கிருத்திகா இருவரும் ஃபோன் மூலமே முடித்தனர். அருண், அஷோக் ஆகியோருக்கு சொல்லி அவர்களும் வர சம்மதித்தனர். அஷோக் உடனே காரில் (பெங்களூரிலிருந்து) கிளம்பியே விட்டான் !! வரும் வழியில் ஹோசூரிலிருந்து சாவித்திரியையும் கூட்டி வந்தான்.

உறவினர் எல்லாரையும் ஃபோன் மூலமாகவே அழைத்தோம்; சாஸ்திரிகளுக்கும் அவ்வாறே! சாமான்களையும் உடனேயே வாங்கினோம். அஷோக் நீரஜா சாவித்திரி மூவரும்  பகல் 4-30க்கு வந்தனர். அர்விந்த சாஸ்திரிகள் சாமான்களை வாங்கி வந்தான். கிருத்திகா எங்களுக்கு ட்ரெஸ் வாங்கினாள்.

மாலை 5-30க்கு நாங்கள் இருவர், அஷோக்-நீரஜா, சாவித்திரி ஆகியோர் காரில் அடையாறு சென்று அருண், அஷோக், அர்விந்த, காயத்ரி, நீரஜா, கிருத்திகா, ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராம் ஆகிய எல்லாருக்கும் புது ட்ரெஸ் வாங்கினோம். ஸ்ருதியும் பின்னர் சதீஷும் இங்கு மாலையே வந்துவிட்டனர்.

ஞாயிறு, 17-07-2011

காலை 7 மணிக்கே எல்லாரும் குளித்துவிட்டோம். காலை 7 மணி சுமாருக்கு நான், விஜயா, சாவித்திரி மூவரும் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று ஸ்வாமி-அம்மனை வேண்டிக் கொண்டோம். உறவினர் வர ஆரம்பிக்கவே, எல்லாருக்கும் இட்லி கொடுத்தோம். நாங்கள் 11 பேர், சாவித்திரி, ஸ்ருதி, சதீஷ், கணபதி சுப்ரமணியன், மாமி, ராமசுப்ரமணியன், இந்திரா, அகிலா, ராஜா, லலிதா, குமார், ப்ரத்யுன், சரோஜா, அத்திம்பேர், ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் 4 பேரும், சுகவனம், சுபா (நால்வரும்), சுதா (4 பேரும்), விஜயராகவன், மாமி, --- மொத்தம் 39 பேர் இருந்தனர்.

சாஸ்திரிகள் 9-45க்கு வந்து ஆரம்பித்தனர். பீமரத சாந்தி, ருத்ரம், ம்ருத்யுஞ்ச ஹோமம், நவக்ரஹ பூஜை, கலஸ பூஜை, ஹோமங்கள், பூர்ண ஆஹுதி முதலியவை மிக சிறப்பாக நடந்தன. முடியும்போது பகல் 1-45 மணி. ஓம் காடரர் மூலம் பகல் உணவு. (ரூ 150/-) அருண் அஷோக் அர்விந்த் ஆகியோர் அம்மாவிற்கு (விஜயா) ரூ 5000 க்கு ஒரு பட்டுப் புடவையும் எனக்கு ஒரு ஷர்ட்டும் வாங்கினர். கணபதி சுப்ரமணியமும் ஒரு பட்டுப் புடவையும் எனக்கு ஷர்ட்டும் வாங்கினார். நாங்கள் வாங்கிய ட்ரெஸ்களை எல்லாருக்கும் கொடுத்தோம்.
 




சாப்பிட்டுவிட்டு எல்லாரும் கிளம்பினர். இவ்வாறாக பீமரத சாந்தி மிக மிக மிக சிறப்பாக நடந்தேறியது. 40 மணி நேரத்திற்கு முன்பு கூட இதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை. அர்விந்த், கிருத்திகா, அஷோக், நீரஜா, அருண், காயத்ரி ஆகியோர் ஓடி ஓடி வேலை செய்தனர். எல்லா வேலைகளையும் 24 மணி நேரத்தில் முடித்தனர். எல்லாரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.





ராஜப்பா
18-7-2011
மாலை 4 மணி

பின்குறிப்பு # 1: அஷோக், நீரஜா, சாவித்திரி மூவரும் 18-ஆம் தேதி காலை 5-45க்கு காரில் கிளம்பி ஹோசூருக்கு 11-30க்கும் பெங்களூருக்கு 12-45 க்கும் போய் சேர்ந்தனர்.

பிகு # 2: 17-ஆம் தேதி மாலை 4-30க்கு, மங்களம், கோபி, பிரியா, ராஜேஷ், அனிருத், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா ஆகியோரும் வந்தனர்.

பிகு # 3 : என்னுடைய சரியான நக்ஷத்திர பிறந்த நாள் அடுத்த மாசம் (ஆகஸ்டு) 13ஆம் தேதிதான் வருகிறது. அன்று யஜுர் உபாகர்மம் என்பதால் முதல் நக்ஷத்திரமான ஜூலை 17 லியே பீமரத சாந்தி பண்ணிக் கொண்டோம்.


Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011