SRI VITTAL RUKMINI SAMASTHAN - GOVINDAPURAM - Part 1
மஹாராஷ்டிர மாநிலம் பண்டர்பூர் என்னும் ஊரிலுள்ள ஸ்ரீவிட்டல் கோயிலைப் போன்று தமிழ்நாட்டிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று ஆசை கொண்டு, ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் கும்பகோணத்தின் அருகிலுள்ள கோவிந்தபுரம் என்னும் கிராமத்தில் கோயிலை நிர்மாணிக்க ஆரம்பித்தார்.
சேங்காலிபுரம் ப்ருஹ்மஸ்ரீ அநந்தராம தீக்ஷிதரும், அவர் தம்பி ப்ருஹ்மஸ்ரீ நாராயண தீக்ஷிதரும் தமிழ்நாட்டின் இரண்டு புகழ்பெற்ற பக்திமான்கள். நாராயண தீக்ஷிதரின் பேரனான ஸ்ரீ ஜெயகிருஷ்ண தீக்ஷிதரும் இவர்களைப் போலவே சிறந்த பக்திமான். ஸ்ரீவிட்டல் பகவான் மேல் இவருக்கு இருந்த பக்தியால் இவர் ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் என அழைக்கப்படுகிறார்.
இந்தியா மற்றும் உலகின் பல ஊர்களிலும் இவரது விட்டல் பஜனை புகழ் பெற்றது. கோயில் கட்டுவதற்கான நிதி உதவியை இவர் பல ஊர்களில் நாம சங்கீர்த்தனம் செய்து திரட்டினார். கோயிலும் வளர ஆரம்பித்தது.
இந்த 2011 வருஷம் ஜூலை 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியில் கோயிலின் மஹாகும்பாபிஷேகம் பஜனைகள் பாடல்கள் மற்றும் வேத கோஷங்களும், விட்டல் நாமாக்களும் ஒலிக்க கோலாகலமாக நடந்தது.
முன்னதாக, கோயிலில் நித்யபூஜை செய்ய விருப்பப்பட்டு, கிருத்திகாவின் தகப்பனார் TSG பணம் செலுத்தியிருந்தார். ஜூலை 26 செவ்வாய் என அவருக்கு நாள் ஒதுக்கியிருந்தனர். அவர் கூட 10 பேர் வரலாம் எனவும் சொல்லியிருந்தனர். அவர் எங்களை 24-ஆம் தேதியன்று அழைத்தார். அர்விந்த், கிருத்திகா வர இயலாது என ஒதுங்கிவிட, நாங்கள் இருவரும் சம்மதித்தோம்.
24-ஆம் தேதி நான் சரோஜா-அத்திம்பேரை அழைத்தேன் - “வேறு வேலை prior commitment இருப்பதனால்“ சரோஜா வரவில்லை, ராமமூர்த்தி அத்திம்பேர் வர சம்மதித்தார். ஹோசூரில் சாவித்திரியை கூப்பிட்டேன்; ”வர இயலாது,” என 24-ஆம் தேதி இரவு சொன்ன அவள் மறுநாள் காலை மனம் மாறி கும்பகோணம் வருவதற்கான் ட்ரெயின் டிக்கெட் வாங்கினாள். நாங்கள் பயணம் போவதற்கு ஒரு TAVERA வண்டியை ஏற்பாடு செய்தேன் - சார்ஜ் கிமீட்டருக்கு 9-00 (AC) தவிர ஓட்டுனருக்கு தினம் 300-00 batta.
ஜூலை 25, திங்கட்கிழமை: இரவு உணவிற்கு தோசை, சப்பாத்தி, தயிர்சாதம் செய்து கொண்டு. பகல் 1-45க்கு டாக்ஸியில் கோவிந்தபுரம் புறப்பட்டோம். TSG மாமா, மாமி, விஜயா, நான், ராமமூர்த்தி அத்திம்பேர், மற்றும் அருணாச்சலம் என்கிற பூ வியாபாரி ஆகிய 6 பேர் கிளம்பினோம். Tavera புத்தம்புது வண்டி. ஓட்டுனர் ராஜேஷ் ஒரு இளைஞர்.
புதுச்சேரியில் 5 மணிக்கு டிஃபன் என்ற பெயரில் ஆறிப்போன போணடாவை விழுங்கிவிட்டு, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக கோவிந்தபுரம் கிராமத்தை இரவு 9-15க்கு அடைந்தோம். நெடிதுயர்ந்த விட்டல் கோபுரம் எங்களை வரவேற்றது. ஒரு அறை ஒதுக்கி இருந்தனர். இரவு உணவு தருவதற்கு அவர்கள் தயாராக இருந்தனர். “வேண்டாம்,” என சொல்லிவிட்டு, அறைக்கு சென்று, எடுத்துச் சென்ற தோசை முதலானவற்றை சாப்பிட்டோம்.
அறையில் படுப்பதற்கு தலைகாணி, பாய், ஜமுக்காளம் போன்று எதுவுமே இல்லை. வழவழவென்ற புது தரையில் அப்படியே படுத்துக் கொண்டோம். ரூம் பரவாயில்லை. ஹோசூரில் சாவித்திரியும் மாலை 7-45க்கு டிரெயினில் கிளம்பினாள்.
அடுத்த Part 2 பகுதி
ராஜப்பா
காலை 1000 மணி
29 ஜூலை 2011

Comments