இன்று (06 டிசம்பர் 2011) மாலை நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். பஸ் கட்டண உயர்விற்குப் பின்னர் நாங்கள் மயிலாப்பூருக்குச் செல்வது இதுவே முதல் முறை. பஸ் டிக்கெட் ரூ 13.00 ஆக உயர்ந்துள்ளது. இருவர் போய்விட்டு வர ரூ 52.00 ஆகிவிடுகிறது.
மயிலாப்பூரில் முதலில் வடக்குமாட வீதி வழியாக கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போனோம். கோயிலுக்குச் சென்று ஒரு மாசத்திற்கும் மேலாகிவிட்டது. கோயிலில் நல்ல கூட்டம். இருப்பினும், ஸ்ரீ கற்பகாம்பாளையும், ஸ்ரீ கபாலீஸ்வரரையும் நன்றாக, கண்குளிர திருப்தியாக தரிஸனம் செய்தோம். இந்தக் கோயிலில் கிடைக்கும் மனநிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை. மயிலாப்பூருக்கு இணை கிடையாது.
பின்னர் கிரி டிரேடர்ஸுக்கும், மாமி மெஸ்ஸுக்கும் சென்றோம். தெற்கு மாடவீதியில் நுழைந்து சில சாமான்களை வாங்கினோம். பஸ் பிடிக்க போய்க் கொண்டிருக்கும் போது, விஜயாவிற்கு திடீரென தனது 1965-வகுப்பு தோழி (வயது 66) நாகலக்ஷ்மியின் நினைவு வந்தது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்த 1965-வகுப்பு “ஸோமஸுந்த்ர கன்யா வித்யாலயா” மாணவிகள் பலர் 40க்கும் மேல் காஞ்சிபுரத்தில் தங்கள் பழைய பள்ளிக்கூடத்தில் சந்தித்தது குறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன்.
இந்த சந்திப்புக்காக விஜயா பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது அவள் எதிரில் இன்னொரு 66 வயது பெண்மணியும் பயணித்தார். ஒன்றும் பேசிக்கொள்ளாமலேயே சென்ற அவர்கள் மீண்டும் காமாக்ஷி அம்மன் கோயிலில் சந்தித்துக் கொண்டனர். அப்போதுதான் தெரிந்தது - அந்தப் பெண்மணியும் விஜயாவும் 1965-வகுப்பு தோழிகள் என! இருவரும் மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்தனர். அவர் பெயர் நாகலக்ஷ்மி; மயிலாப்பூரில் வசிக்கிறார். அதுவும் தெற்கு மாடவீதியின் அருகிலேயே!
இவரது மகன் தெற்கு மாட வீதியில் பூஜை சாமான்கள் மற்றும் பலவகை வடாம், வத்தல், ஊறுகாய் போன்றவைகளை விற்பனை செய்கிறார். இந்தக் கடையில் நாங்கள் பல தடவை சாமான் வாங்கியிருக்கிறோம். இவரிடம் வீடு செல்ல வழி கேட்டுக்கொண்டு, நாகலக்ஷ்மியின் வீட்டிற்கு சென்றோம். நாங்கள் அங்கு போனதில் அவருக்கு ஒரே ஆச்சரியம், மகிழ்ச்சி.
இவருக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண். கணவர் இறந்துவிட்டார். பார்ப்பதற்கு மிகவும் வயதானவராக காணப்படுகிறார். வடாம், மாகாளிக்கிழங்கு ஊறுகாய், ஒரு புடைவை ஆகியவற்றைக் கொடுத்தார். அரைமணி நேரம் அங்கு இருந்து அவரது பெண், நாட்டுப்பெண், பேரன் ஆகியோரை பார்த்துப் பேசினோம். எல்லாருக்கும் மிகவும் சந்தோஷம்.
46 வருஷங்களுக்குப் பிறகு இன்று சந்தித்தது மிக வியப்பான விஷயம் தான்.
ராஜப்பா
07-12-2011
காலை 0830 மணி

Comments