Sathabishekam
புதுதில்லியில் தனது மாமா ஸ்ரீதண்டபாணி ஐயர் அவர்களின் ஸதாபிஷேகம் நவம்பர் 30-ஆம் தேதியன்று மிக சிறப்பாக நடந்ததை குறித்து எழுதியபோது, வாசு இவ்வாறு சொல்லியிருந்தான் --- “Sadhabishegam is a rare event and if anyone had an opportunity to attend such function considered to be lucky. Had an opportunity to attend the Sadhabishegam of my uncle Dhandapani on 30th Nov 2012 at Gurgaon.... “ மிகவும் உண்மை.
யாருடைய ஸதாபிஷேகம் விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் என ஒரு நிமிஷம் யோசித்தேன் --- ஊஹூம், நம் அப்பாவின் ஸதாபிஷேகம் தான் நான் கலந்துகொண்ட ஒரே ஸதாபிஷேகம். (நம் உறவினர்களில், இதுவரை). அது 1979-ல். கடந்த 33 வருஷங்களில் ...? ஊஹூம்.
சௌ நீரஜாவின் அம்மா வழி தாத்தா ஸ்ரீமான் நாகராஜ ஐயரின் ஸதாபிஷேகம் சில வருஷங்களுக்கு முன் சென்னையில் நடந்தது; அதற்கு போயிருந்தேன். வாசு எழுதியது போல, இது ஒரு அற்புதமான, அரிய நிகழ்வு.
நமது ப்ராஹ்மண சமூகத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் மொத்தம் 16 ஸம்ஸ்காரங்கள் (ஷோடஸ ஸம்ஸ்காரங்கள்) செய்து கொள்ள வேண்டுமென சாஸ்திரங்கள் / வேதங்கள் கூறுகின்றன. அதில் ஒன்றுதான் ஸதாபிஷேகம் என்பது. ப்ரஹ்மசரியம், க்ரஹஸ்தம், வானப்ப்ரஸ்தம், முக்தி அபீஷ்டம் என 4 நிலைகள் ஒவ்வொரு ப்ராஹ்மணனுக்கும் உள்ளன. க்ரஹஸ்தம் முடியும்போது தனது 60-வது வயஸில் ஸஷ்டிஅப்த பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். வானப்ரஸ்தம் நுழைய இதுதான் முதல் வாயில்.
70-வயஸில் செய்து கொள்ளும் பீமரத ஸாந்தி வானப்ரஸ்தத்தின் முதல் நிலை முடிவு பெற்றதை அறிவுறுத்தும். 70க்குப் பின்னர் இரண்டாம் நிலை துவங்கும். இரண்டாவது நிலையின் முடிவை ஸதாபிஷேகம் சொல்கிறது. இதன் பின்னர் முமுக்ஷு எனப்படும் மோக்ஷ நிலை ஆரம்பிக்கிறது; அடுத்த பிறவி எடுக்காமல் இருக்க செய்யவேண்டிய கர்மங்களை 80-க்குப் பிறகு கட்டாயம் செய்யவேண்டும். The Man has completed all his Family-duties and Mundane-commitments... gets trotally relieved from the Monetary-involvements handed over to his children to continue on their own independantly on reaching 80.
1000 சந்திர தரிஸனம் (பௌர்ணமி) பண்ணினவர்கள் ஸதாபிஷேகம் செய்து கொள்வர். வருஷத்திற்கு 12 பௌர்ணமி எனக் கொண்டால், 1000 பௌர்ணமிகளை தரிஸிக்க, 80 வருஷங்களும், 40 மாஸங்களும் ஆகும். எனவேதான் சிலர் தங்களுடைய 85-வது வயஸில் ஸதாபிஷேகம் செய்து கொள்வார்கள்.
ஆனால் தெலுங்கு கணக்குப்படி, 2 1/2 (2.5) வருஷங்களுக்கு ஒருமுறை வருஷத்தில் ”அதிக-மாஸம்” என ஒரு மாஸம் அதிகரிக்கும். இந்த அதிக-மாஸ வருஷத்தில் மொத்தம் 13 மாஸங்கள் இருக்கும். தற்போது நடக்கும் நந்தன வருஷம் (2012) ஒரு அதிக-மாஸ வருஷமாகும். 2 1/2 வருஷங்களுக்கு ஒருமுறை என்றால், 80 வயஸில் [80 / 2.5 = 32] 32 அதிக மாஸங்கள் வந்திருக்கும். எனவே 960 + 32 = 992 பௌர்ணமிகள் தரிசித்து இருப்பார்கள். 80 முடிந்து இன்னும் எட்டு மாஸங்களில் 1000 பூர்த்தியாகும்.
ஆக, நிறைய பேர் தங்களுக்கு 80 வயசு + 8 மாஸங்கள் பூர்த்தியானதும் ஸதாபிஷேகம் செய்து கொள்வார்கள்.
”ஸதாபிஷேகம் / பீமரத ஸாந்தி / ஸஷ்டி அப்த பூர்த்தி” இவைகளை செய்து கொள்ளும் பெரியோர்களும், இவற்றை பண்ணி வைக்கும் அவர்களது புத்திரர்களும் மிக மிக மிக புண்யம் செய்தவர்கள். எல்லாரையும் ஆண்டவன் ஆசீர்வதிப்பார்.
ராஜப்பா
2-12-2012
சென்னை

Comments