வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள். Part 02
நமது வாழ்ககை யந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில சமயம் சந்தோஷமான சில நிமிஷங்கள் வரும். அந்த சில நிமிஷங்களைத் தவற விடாமல், ரசித்தோமானால் என்ன ஒரு அதீதமான மன மகிழ்ச்சி !
குழந்தை அர்ஜுன் குறித்து எழுதினேன்; இது வேறு. செடிகளைப் பற்றியது.
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் (Terrace) ஒரு சிறிய தோட்டம் போட்டுள்ளோம்; 10-12 தொட்டிகளில் தக்காளிப்பழம், பச்சை மிளகாய், துளஸி, கறிவேப்பிலை, மற்றும் சிலப் பூச்செடிகள் போட்டுள்ளோம். முதலில் சில மாஸங்களுக்கு watchman தான் தண்ணீர் விடுவார். ‘கடனே’யென்று அவர் இந்தப் பணியை செய்துவந்தார். பல செடிகள் காய்ந்து பட்டுப் போக ஆரம்பித்தன.
“நாமே ஏன் தண்ணீர் விடக்கூடாது?” என எண்ணி, 2012 செப்டம்பர் 1ஆம் தேதி ஆரம்பித்தேன். தினந்தோறும் காலை 6-45க்கு சென்று தண்ணீர் ஊற்றுகிறேன். 20-25 நிமிஷங்கள் ஆகும். இன்று மூன்று மாஸங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. செடிகள் என்னமாக வளர்ந்திருக்கின்றன !! நிறைய பூக்களும், காய்களும்.
செப்டம்பர் 22 தேதி வாக்கில், பத்மா அக்கா வீட்டிலிருந்து (அம்பத்தூர்) சிறிய 6 செமீ உயர துளஸிக்கன்று ஒன்றை எடுத்து வந்து, இங்கு நட்டு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தேன். இந்த 2 1/2 மாஸங்களில் அது எப்படி வளர்ந்துள்ளது ! நீங்களே பாருங்கள்.
மற்ற செடிகளும் ஓங்கி உயரமாக வளர்ந்து வருகின்றன.
செடிகளின் வளர்ச்சியை தினம் தினம் பார்க்கும்போது மனஸுக்கு என்ன மகிழ்ச்சியாக இருக்கிறது! வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள்.
ராஜப்பா
10-12-2012
11:00 மணி

துளஸி

Comments