Skip to main content

Posts

Showing posts from July, 2013

ஸ்ரீமத் ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 1

ஆரண்ய காண்டம்  - மூன்றாவது காண்டம். மொத்தம் 75 ஸர்கங்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2013 மே 27 திங்கட்கிழமை (298) ஆரம்பித்தார். ராமர், ஸீதை, லக்ஷ்மணன் மூவரும் தண்டகாரண்யம் அடைந்து அங்குள்ள பல ரிஷிகளை வணங்கி வழிபட்டனர். அரண்யம் என்றால் “காடு”. அரண்யங்கள் ஞானத்தின் உறைவிடங்கள் என நம் முன்னோர் நம்பினர்; எனவேதான் இந்த காண்டத்திற்கு அரண்ய காண்டம் என பெயர் வந்தது. முதலில் விராட வதம் செய்தார். ராமர் அழித்த முதல் ராக்ஷசன். சரபங்க முனிவரை காப்பாற்ற இவனை அழித்தார். தீனஜன பரிரக்‌ஷணா வின் முதல் செய்கை. பின்னர் சரபங்க முனிவரை சந்தித்தனர். ராமனை சந்திப்பதற்காகவே முனிவர் காத்திருந்தார்; சந்தித்ததும் அவர்  ராமனுக்கு அவன் எங்கே போகவேண்டும் என சொல்லிவிட்டு, யோக அக்னியில் விழுந்து ப்ரம்ஹாவிடம் போய் விடுகிறார். [ 2 - 5] மற்ற பல ரிஷிகள் ராமனை சந்தித்து ராக்ஷசர்களை அழிக்குமாறு விண்ணப்பிகின்றனர். ராமனும் சம்மதிக்கிறான். பின், சரபங்கர் சொன்னவாறே, சுதீக்க்ஷண முனிவரிடம் செல்கிறான். ஓரிரவு அவரது ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டு அவர்கள் செல்கிறார்கள். ”அரக்கர்களை ஏன் அழிக்க வேண்டும்?, ” என்ற ஸீதையின் கேள

Raja - Akila Sashti Aptha Poorthy - 13072013

ராஜா (சுந்தரராமன்) 60-வது பிறந்த நாள். விஜயாவின் அக்கா இந்திராவின் பெண் அகிலா - ராஜா விற்கு சஷ்டிஅப்தபூர்த்தி 13 ஜுலை 2013 (சனிக்கிழமை) வந்தது. இதற்கு 20 நாட்கள் முன்னதாகவே எங்கள் இருவரையும் அகிலா- ராஜா ஃபோனில் அழைத்தனர். பின்னர், அபர்ணா - வஸந்த் இருவரும் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தனர். ஜூலை 11 வியாழன்:  இன்று சுமங்கலிப் பிரார்த்த்னை . காலை 7:00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினோம். TSG தன்னுடைய காரில் வளசரவாக்கம் கொண்டு போய் விட்டார். அங்கு போய் விஜயா குளித்துவிட்டு, மடிப்புடைவை கட்டிக்கொண்டாள். ”பெண்டுகள்” 5 பேரில் அவளும் ஒருவள். பிரார்த்தனை முடிந்து “பெண்டுகள்” சாப்பிட்டதும் நாங்கள் சாப்பிட்டோம். ராஜாவின் தங்கைகள் ரமாவும், பத்மாவும் வந்திருந்தனர். ரமாவின் கணவரும், ரமாவும் விசாகப்பட்டினத்திலிருந்து வந்தனர். பத்மா வேளச்சேரியில் இருக்கிறார். ராஜாவின் தம்பி வெங்கட், அவரது மனைவி, இரண்டு பெண்கள், ஒரு பையன் ஆகியோர் பெங்களூரிலிருந்து வந்தனர். அகிலாவும், ரமாவும் சமையல் பண்ணினார்கள்; அருமையாக இருந்தது. நாங்கள் இரவு அங்கேயே தங்கினோம். ஜூலை 12 வெள்ளிக்கிழமை :   ருத்ரம் பாராயணம்

Grocery Store

நாங்கள் திருவான்மியூர் (மே மாசம், 2011) வந்தது முதல். எங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்களை ஸ்ரீ மார்த்தாண்டம் ஸ்டோரில் வாங்குகிறோம். பழைய அருண்-வீட்டிற்கு அருகில் இது இருப்பதால் முன்பு கூட சில சில சாமான்களை இங்கு வாங்குவோம். அப்போதெல்லாம், கடையின் உள்ளே போய், நாமே சாமான்களை எடுத்து,  ”பார்த்து” வாங்க இயலாது. லிஸ்ட் போட்டுக் கொண்டு போய் கடைக்காரரிடம் சொன்னால், பில் போட்டு, அதற்குண்டான பணம் நாம் செலுத்திய பிறகு, சாமான்கள் நம்மிடம் கொடுக்கப்படும்.  இதில் உள்ள அசௌகரியம் : மார்க்கெட்டில் புதிதாக என்ன சாமான்கள் வந்துள்ளன, எதில் சலுகை விலைகள் உள்ளன, எதில் “ஓசி” சாமான்கள் கிடைக்கும் என்பன போன்றவை நமக்குத் தெரியாது. துவரம்பருப்பு எனக் கேட்டால், லூசில் (loose, unbranded) வாங்கினால் விலை குறைவு, அதே branded பருப்பு என்றால் கிலோவிற்கு 10-12 ரூ அதிகம். சென்ற மே மாஸம், கடையை புது வடிவில், புது வண்ணத்தில் மாற்றினார்கள். தற்போது உள்ளே போய் நாமே தொட்டு, எடுத்து பார்த்து சாமான்களை வாங்கலாம். ஏஸி பண்ணப்பட்டுள்ளது. விலையும் பழைய மாதிரியே, குறைவு. இன்று (4-7-2013) நாங்கள் இவ்வாறு கடையினுள் சென்று ச