நாங்கள் திருவான்மியூர் (மே மாசம், 2011) வந்தது முதல். எங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்களை ஸ்ரீ மார்த்தாண்டம் ஸ்டோரில் வாங்குகிறோம். பழைய அருண்-வீட்டிற்கு அருகில் இது இருப்பதால் முன்பு கூட சில சில சாமான்களை இங்கு வாங்குவோம்.
அப்போதெல்லாம், கடையின் உள்ளே போய், நாமே சாமான்களை எடுத்து, ”பார்த்து” வாங்க இயலாது. லிஸ்ட் போட்டுக் கொண்டு போய் கடைக்காரரிடம் சொன்னால், பில் போட்டு, அதற்குண்டான பணம் நாம் செலுத்திய பிறகு, சாமான்கள் நம்மிடம் கொடுக்கப்படும்.
இதில் உள்ள அசௌகரியம் : மார்க்கெட்டில் புதிதாக என்ன சாமான்கள் வந்துள்ளன, எதில் சலுகை விலைகள் உள்ளன, எதில் “ஓசி” சாமான்கள் கிடைக்கும் என்பன போன்றவை நமக்குத் தெரியாது. துவரம்பருப்பு எனக் கேட்டால், லூசில் (loose, unbranded) வாங்கினால் விலை குறைவு, அதே branded பருப்பு என்றால் கிலோவிற்கு 10-12 ரூ அதிகம்.
சென்ற மே மாஸம், கடையை புது வடிவில், புது வண்ணத்தில் மாற்றினார்கள். தற்போது உள்ளே போய் நாமே தொட்டு, எடுத்து பார்த்து சாமான்களை வாங்கலாம். ஏஸி பண்ணப்பட்டுள்ளது. விலையும் பழைய மாதிரியே, குறைவு.
இன்று (4-7-2013) நாங்கள் இவ்வாறு கடையினுள் சென்று சாமான்களை வாங்கினோம். 3 வருஷங்களாக மாதந்தோறும் டெலிஃபோன் மூலம் சொல்வோம்; சாமான்கள் வீட்டிற்கு வந்துவிடும்.
இப்போதும் சாமான்களை எடுத்துக் கொண்டு, பில் போடுபவரிடம் “Home Delivery" என டெலிஃபோன் எண்ணை சொன்னோம்; அரை மணி நேரத்தில் சாமான்கள் டெலிவர் பண்ணப்பட்டன. Free of charge.
இதிலுள்ள சின்ன அசௌகரியம் :: நாம் முதலில் லிஸ்ட்டில் எழுதாத சாமான்களையும் இன்று வாங்கினோம் (100 - 150 ரூ அதிகம் ஆயிற்று.)
ராஜப்பா
4-7-2013
8 PM

Comments