ராஜா (சுந்தரராமன்) 60-வது பிறந்த நாள்.
விஜயாவின் அக்கா இந்திராவின் பெண் அகிலா - ராஜாவிற்கு சஷ்டிஅப்தபூர்த்தி 13 ஜுலை 2013 (சனிக்கிழமை) வந்தது. இதற்கு 20 நாட்கள் முன்னதாகவே எங்கள் இருவரையும் அகிலா- ராஜா ஃபோனில் அழைத்தனர். பின்னர், அபர்ணா - வஸந்த் இருவரும் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தனர்.
ஜூலை 11 வியாழன்: இன்று சுமங்கலிப் பிரார்த்த்னை.
காலை 7:00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினோம். TSG தன்னுடைய காரில் வளசரவாக்கம் கொண்டு போய் விட்டார். அங்கு போய் விஜயா குளித்துவிட்டு, மடிப்புடைவை கட்டிக்கொண்டாள். ”பெண்டுகள்” 5 பேரில் அவளும் ஒருவள். பிரார்த்தனை முடிந்து “பெண்டுகள்” சாப்பிட்டதும் நாங்கள் சாப்பிட்டோம்.
ராஜாவின் தங்கைகள் ரமாவும், பத்மாவும் வந்திருந்தனர். ரமாவின் கணவரும், ரமாவும் விசாகப்பட்டினத்திலிருந்து வந்தனர். பத்மா வேளச்சேரியில் இருக்கிறார். ராஜாவின் தம்பி வெங்கட், அவரது மனைவி, இரண்டு பெண்கள், ஒரு பையன் ஆகியோர் பெங்களூரிலிருந்து வந்தனர். அகிலாவும், ரமாவும் சமையல் பண்ணினார்கள்; அருமையாக இருந்தது.
நாங்கள் இரவு அங்கேயே தங்கினோம்.
ஜூலை 12 வெள்ளிக்கிழமை: ருத்ரம் பாராயணம் மற்றும் அபிஷேகம்.
காலை 5 மணிக்கு எழுந்து குளித்தோம். 12 சாஸ்திரிகள் வந்து ருத்ரம் பாராயணம், அபிஷேகம் செய்தனர். மிகவும் நன்றாக இருந்தது. இன்றைய சமையல் ஒரு மாமி வந்து செய்தார்.
சாஸ்திரிகள் 12 பேரும் சாப்பிட்ட பிறகு நாங்கள் சாப்பிட்டோம். அகிலா வீட்டின் எதிரில் உள்ள ஃப்ளாட்டில் சாப்பாடு. மொத்தம் 32 பேர். ஜ்யோத்ஸ்னா பகல் 12 மணிக்கு தில்லியிலிருந்து வந்தாள்.
மாலை நாங்கள் இருவரும் குமார் வீட்டிற்கு சென்று, கமலா சித்தியை பார்த்து வந்தோம்.
இரவு, வழக்கம்போல அகிலா வீட்டில் தங்கினோம்.
ஜூலை 13, சனிக்கிழமை. சஷ்டிஅப்த பூர்த்தி
காலை எழுந்து, JJ மண்டபம் நோக்கி நடந்து, மண்டபம் சென்றோம். 10 நிமிஷ நடை. 7 மணிக்கு சாஸ்திரிகள் வந்து ஆரம்பித்தார்கள். இன்று CATERER ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் காலை சிற்றுண்டி.
கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்தனர். எங்கள் இருவருக்கும் தம்பதி பூஜை செய்தனர். அர்விந்த், அதிதி, அர்ஜுன் வந்தனர்.
பின்னர் 12-30க்கு சாப்பாடு. சுமார் 55 பேர் சாப்பிட்டனர். 1-15க்கு கிளம்பி அகிலா வீடு வந்தோம். எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டு 2 மணிக்கு கிளம்பி 3 மணிக்கு திருவான்மியூர் வந்து சேர்ந்தோம்.
இவ்வாறாக ராஜாவின் சஷ்டி அப்தபூர்த்தி மிக சிறப்பாக நடந்தேறியது. ராஜா - அகிலா, அவர்கள் குடும்பத்தினர்க்கு ஆண்டவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
ராஜப்பா
8 PM
14-07-2013

Comments