Skip to main content

Posts

Showing posts from March, 2014

அதிகார நந்தி

Namma Madras,  MYLAPORE. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு , சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் அதிகார நந்தி வாகனம் , கடந்த 1917 ம் ஆண்டுக்கு முன் , மர வாகனமாகவே இருந்தது. மயிலை கோவில் அருகில் உள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில் அப்போது குடியிருந்த வீரசைவ மரபைச் சேர்ந்தவரும் , தண்டரை வைத்தியர் குடும்ப உறுப்பினருமான   த.செ.குமாரசுவாமி பக்தர் என்பவர் , இந்த மர வாகனத்திற்கு வெள்ளிக் கவசம் போர்த்தும் பணியை நிறைவேற்றினார். பங்குனிப் பெருவிழாவில் மூன்றாவது நாள் அதிகாலையில் 6 மணிக்கு அதிகார நந்தியில் கபாலீசுவரர் எழுந்தருளும்போது , முதல் மரியாதை குமாரசுவாமி பக்தரின் குடும்பத்தினருக்கே அளிக்கப்படுகிறது. சென்னையில் பிற சிவாலயங்களில் உள்ள அதிகார நந்தி வாகனங்களை விட , மயிலையில் உள்ளது கண்ணைக் கவரும் வகையில் கலை நயம் மிக்கதாக விளங்குகிறது. அதன் ஒவ்வொரு பகுதியும் , நுண்ணிய வ

வால்மீகி ராமாயணம் - 500

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் 2012ம் வருஷம் மார்ச் 31-ஆம் தேதி யன்று ( அன்று ஸ்ரீ ராம நவமி) ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ண ஆரம்பித்தார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் சொல்லி முடித்து, தற்போது சுந்தர காண்டம் கணையாழி பெற்றது சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த உபன்யாஸத்தின் 5 00 -வது பகுதி சென்ற வியாழனன்று (2014 மார்ச் 6 அன்று) நடந்தது. பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06-30 முதல் 06-45 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுவரை கேட்காதவர்கள் இனியாவது கேட்டு ஸீதம்மா ஸமேத ஸ்ரீ ராமரின் அருள் பெறுங்கள். ராஜப்பா 7-3-2014

சீதாலக்ஷ்மி மன்னி.

எங்கள் சொந்த கிராமம், கவரப்பட்டு என்பது. இது சிதம்பரத்திலிருந்து கிழக்கில் 8 கிமீ  தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். இங்குதான் என் தாத்தா, அப்பா, அவரது சகோதரர்கள் வசித்தனர். பின்னால், எங்கள் சித்தப்பா மட்டும் இருந்தார். நாராயணஸ்வாமி [ நாணா ] சித்தப்பாவிற்கு இரண்டு ராஜம், ஜெயம் என்கிற இரண்டு புத்திரிகளும், சுந்தரராமன் (சுந்தரம்) என்கிற புத்திரனும். சுந்தரம் அண்ணாவின் மனைவி சீதாலக்ஷ்மி. அண்ணா - மன்னிக்கு பாஸ்கர் என்கிற ஒரே புத்திரன். இந்த சீதாலக்ஷ்மி மன்னி இந்த வருஷம் 2014 ஃபிப்ரவரி 25 -ஆம் தேதி காலை மரணமடைந்தார், வயது 78-80 இருக்கும். 10-ஆம் நாள் காரியத்திற்கு போகலாம் என்று நானும், விஜயாவும் முடிவெடுத்தோம். சாவித்திரியும், மங்களமும் வருவதாக சொன்னார்கள். டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு [கிமீ ரூ. 9.00] மார்ச் 5-ஆம் தேதி (புதன்) காலை 11-20க்கு கிளம்பினோம். வழியில் ம்ங்களம், அடுத்து சாவித்திரி என அழைத்துக் கொண்டு, திண்டிவனம், பண்ருட்டி, நெய்வேலி வழியாக சிதம்பரம் சென்றோம். கீழ வீதியில் இருக்கும் குஞ்சிதபாதம் தீக்ஷிதர் வீட்டு மாடியில் தங்கினோம். இரவு தூங்கினோம். மறுநாள் மார்ச் 6-ஆம் தேதி