Namma Madras, MYLAPORE.
9-3-2014
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக
இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க
வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர்
வந்தது
மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்
அதிகார நந்தி வாகனம், கடந்த 1917ம் ஆண்டுக்கு முன், மர வாகனமாகவே இருந்தது. மயிலை கோவில் அருகில் உள்ள பொன்னம்பல
வாத்தியார் தெருவில் அப்போது குடியிருந்த வீரசைவ மரபைச் சேர்ந்தவரும், தண்டரை வைத்தியர் குடும்ப உறுப்பினருமான த.செ.குமாரசுவாமி பக்தர் என்பவர், இந்த மர வாகனத்திற்கு வெள்ளிக் கவசம்
போர்த்தும் பணியை நிறைவேற்றினார்.
பங்குனிப்
பெருவிழாவில் மூன்றாவது நாள் அதிகாலையில் 6 மணிக்கு அதிகார நந்தியில் கபாலீசுவரர் எழுந்தருளும்போது, முதல் மரியாதை குமாரசுவாமி பக்தரின்
குடும்பத்தினருக்கே அளிக்கப்படுகிறது.
சென்னையில் பிற
சிவாலயங்களில் உள்ள அதிகார நந்தி வாகனங்களை விட, மயிலையில் உள்ளது கண்ணைக் கவரும் வகையில் கலை
நயம் மிக்கதாக விளங்குகிறது. அதன் ஒவ்வொரு பகுதியும், நுண்ணிய வேலைப்பாட்டுடன் மிளிர்கிறது.
இன்று (09-03-2014) ஞாயிற்றுக்கிழமை காலையில்,
அதிகார நந்தியில் சிவனை வழிபட்டு வணங்கினோம்.
ராஜப்பா9-3-2014
Comments