எங்கள் சொந்த கிராமம், கவரப்பட்டு என்பது. இது சிதம்பரத்திலிருந்து கிழக்கில் 8 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். இங்குதான் என் தாத்தா, அப்பா, அவரது சகோதரர்கள் வசித்தனர். பின்னால், எங்கள் சித்தப்பா மட்டும் இருந்தார். நாராயணஸ்வாமி [ நாணா ] சித்தப்பாவிற்கு இரண்டு ராஜம், ஜெயம் என்கிற இரண்டு புத்திரிகளும், சுந்தரராமன் (சுந்தரம்) என்கிற புத்திரனும்.
சுந்தரம் அண்ணாவின் மனைவி சீதாலக்ஷ்மி. அண்ணா - மன்னிக்கு பாஸ்கர் என்கிற ஒரே புத்திரன்.
இந்த சீதாலக்ஷ்மி மன்னி இந்த வருஷம் 2014 ஃபிப்ரவரி 25-ஆம் தேதி காலை மரணமடைந்தார், வயது 78-80 இருக்கும். 10-ஆம் நாள் காரியத்திற்கு போகலாம் என்று நானும், விஜயாவும் முடிவெடுத்தோம். சாவித்திரியும், மங்களமும் வருவதாக சொன்னார்கள்.
டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு [கிமீ ரூ. 9.00] மார்ச் 5-ஆம் தேதி (புதன்) காலை 11-20க்கு கிளம்பினோம். வழியில் ம்ங்களம், அடுத்து சாவித்திரி என அழைத்துக் கொண்டு, திண்டிவனம், பண்ருட்டி, நெய்வேலி வழியாக சிதம்பரம் சென்றோம். கீழ வீதியில் இருக்கும் குஞ்சிதபாதம் தீக்ஷிதர் வீட்டு மாடியில் தங்கினோம். இரவு தூங்கினோம்.
மறுநாள் மார்ச் 6-ஆம் தேதி காலை 7 மணிக்கு கிளம்பி கவரப்பட்டு சென்றோம். பத்தாம் நாள் காரியங்கள் ந்ல்ல முறையில் சாஸ்திரப்படி, குளத்தங்கரையில் நடைபெற்றது. குளத்திலேயே குளித்தோம்.
45 பேருக்கும் மேலாக சாப்பிட்டோம். 2-30 மணி சுமாருக்கு கிளம்பி, வழியில் நடேசன் [ என்னுடைய அத்தை மகன், 83 வயசு இருக்கும் ] அவரையும் பார்த்து பேசிவிட்டு, திண்டிவனம் வழியாகவே சென்னை திரும்பினோம்.
கவரப்பட்டு கிராமம், அங்குள்ள பெரிய குளம் மறக்க முடியாதவை.
ராஜப்பா
7-3-2014

Comments