எழுத்தாளர் ஜ ரா சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் தற்போது பாமர கீதை என எழுதிக் கொண்டிருக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து கொண்டு அவனுக்கு உபதேசித்த கீதையை (அதன் சாராம்சத்தை) எளியவர்களுக்கும் புரியும்படி, அவர்களது மொழியில் எழுதியுள்ளார். மிக அருமை, அருமையிலும் அருமை.
கிஷ்டன், பார்த்தன் இருவரும் சென்னை வாழ் ரிக்ஷாக்காரர்கள். பார்த்தனுக்கு வரும் சந்தேகங்களை போக்கி அவனுக்கு நல்வழி கூறுபவன் கிஷ்டன்.
ஆடி மாசத்தில் ஆத்தாவிற்கு (காளி அம்மனுக்கு) கூழ் ஊற்ற காசு போதவில்லை என்பது பார்த்தனின் வருத்தம், ஆற்றாமை. அதற்கு கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்) என்ன சொல்லி பார்த்தனை தேற்றுகிறான் --- படியுங்கள் ....
”கூழ் ஊற்றுவதும் பக்திதான். அது நம்ம சக்திக்கு முடியாதென்றால்” .... இனி மேற்கொண்டு.
-----******-----
கிஷ்டன் : அவசரப்படாதே. ஒரு நல்ல மனுஷன் சொல்ற புத்திமதிப் பேச்சைக் கேட்கறது... இப்ப வாரியார் சாமி பேச்சு மாதிரி எங்ஙனா நடக்குது. இல்லே. எங்கனாச்சும் யாராச்சும் ராமியாணம், பாரதம் படிக்கறாங்க... அங்கே போய்க் குந்திக்கிணு கொஞ்ச நேரம் கேளு. அதுக்கு உடம்பாலே பூசை பண்ற மாதிரிதான் அருத்தம்.
”தேவத்விஜ குரு ப்ராக்ஞ பூஜனம் சௌசம் ஆர்ஜவம் | ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச சாரீரம் தப உச்யதே || >> கீதை அத் 17 ஸ்லோகம் 14. இதன் அர்த்தம் ::: தேவர், ப்ராம்மணர், குருமார், ஞானிகள் ஆகியவர்களை போற்றுவதும், தூய்மையும் நேர்மையும் ப்ரம்மசர்யமும் அஹிம்ஸையும் தேகத்தால் செய்யும் தவம் எனப்படுகிறது.
-----******-----
பார்த்தி : அப்போ இந்த மெல்லிசை அது இதுன்னு ஏற்பாடு பண்றதெல்லாம் வேணாங்கறே?
கிஷ்டன் : அவுங்களும் நாலு சாமி பாட்டுப் பாடினா நல்லது. அந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் ஏற்பாடு பண்ண சவுகரியப்படலியா? கவலைப்படாதே. இந்த ஆடி மாசம் பூரா எல்லார்கிட்டயும் சந்தோசமா, இனிமையா, மருவாதியா, அடக்க ஒடுக்கமாய் பேசறதுன்னு வெரதம் வெச்சுக்கிட்டு அதே மாதிரி பேசு... அதுவும் ஒரு பூசைதான். அது வாக்காலே பண்ணற பூசை.
இனி கீதை என்ன சொல்கிறது,
ஸ்ரீகிருஷ்ண பகவான் என்ன பதில் சொல்கிறார், பார்ப்போம் ....
“அனுத்வேக கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்| ஸ்வாத்யாய அப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே|| அத் 17 ஸ்லோ15. அர்த்தம் >> எவரையும் துன்புறுத்தாத வாய்மையும், இனிமையும் நலனும் கூடிய வார்த்தை, மற்றும் வேதம் ஓதுதல் --- இது வாக்கு மயமான தபசு என்று சொல்லப்படுகிறது.
-----******-----
பார்த்தி : என்னாலே, அப்படியெல்லாம் பேச முடியுமா நம்ம தொழில்லே?
கிஷ்டன் : அட, பண்ண முடிஞ்சா பண்ணு. செரி. அத்தெ வுடு. லொட லொடன்னு பேசாம மவுனமா, வாயை மூடிக்கினு கம்முனு கெட. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் பேசாம இரு.
பார்த்தி : மவுன வெரதம்னு சொல்றாங்களே, அதுவா?
கிஷ்டன் : அதுதான். குமுறிக்கினு ஆத்திரமா வருது. திட்டணும் போலிருக்கு. வம்பு பேசணும் போல ஆசையா கீது. அப்போ கம்முனு அமுக்கமா வாயைத் தெறக்காம இருந்துரு.
ரொம்ப நேரத்துக்கு இல்லே. ரெண்டு மணி நேரத்துக்கு அதுவும் கூட பூசை மாதிரிதான். வாயிலே பேச்சு இல்லே. மனசுலே 'காளியாத்தா... எனக்கு பொறுமையைக் கொடு'ன்னு அந்த சமயத்திலே நெனைச்சுக்கோ... அதுவும் ஒரு பூசைதான். மனசாலே பண்ற பூசை.
ஒருத்தருக்கு எதுனா சின்னதா உதவி செய்தா அதுகூட ஒரு தவசுதான். பூசைதான். அன்னைக்கி ஒரு பெரீவரு, 'தாக்குர் சத்திரம் எங்கிருக்கிது'ன்னப்ப கையைப் புடிச்சுக்கினு கூட்டிகினு ரோடை கிராஸ் பண்ணி பஸ் ஸ்டாண்டுலே வுட்டு, இருபத்தாறாம் நம்பர் பஸ்ஸு வந்ததும் ஏத்தி வுட்டியே! ஆத்தாளுக்கு ஆடி மாசத்துக் கூழை அன்னிக்கே நீ ஊத்திட்டே...
இனி கீதை .... “மனஸ் ப்ரஸாத ஸௌம்யத்வம் மௌனம் ஆத்மவிநிக்ரஹ: | பாவ ஸம்சுத்திர் இதி ஏதத் தபோ மானஸம் உச்யதே ||” அத் 17 ஸ்லோ 16. அர்த்தம் >>>> மன அமைதி, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம், தூய நோக்கம் ... இது மானஸ (மனசினால் செய்யப்படுகிற) தபசு எனப்படுகிறது.
-----******-----
கிஷ்டன் : பாவி! பாவி! கழுநீர்ப் பானையிலே கையை வுட்டுட்டாப்பலே அந்த மாதிரிக் காரியம் பண்ணிடாதே. இன்னும் வசூலாகலயேன்னு பறக்காமல், என்ன வசூல் பண்ணியிருக்கியோ அதைக் கொண்டு அம்மனுக்கு மனசாரப் பூசை பண்ணுவோம். ஆத்தா சந்தோசப்படுவா. அந்தக் கோயில்லே வெளக்கு போடறாங்க, இந்தக் கோயில்லே சினிமாப் பாட்டுக்காரங்க கச்சேரி வெக்கிறாங்கன்னு போட்டி வேணாம். நல்ல சொல்லு சொன்னா பூசைதான். நல்லது ஒண்ணைப் பெரியவங்ககிட்டயிருந்து கேட்டுகினா அதுவும் பூசைதான். ஒரு சின்ன உபகாரம், அவன் திருப்பி இன்னா செய்வான்னு எதிர்பார்க்காம செஞ்சா அதுவும் பூசைதான். ஆத்தாவுக்கு பாலைக் கொட்டி பூசை பண்ணினாலும் பூசைதான். பிரியுதா?
கீதை புஸ்தகம் வைத்திருப்போர், அத் 17 ஸ்லோகம் 18, 19, 20, 21, 22, ஆகியவற்றையும் படியுங்கள். ஜராசு எழுதி இருப்பதின் அர்த்தம் “பிரியும்” (!!!)
Rajappa
21-06-2017

Comments