Skip to main content

Posts

Showing posts from September, 2017

We Went to Kanchipuram

காஞ்சிபுரம் நேற்று (20-09-2017, புதன்கிழமை) காலை 7 மணிக்கு நாங்கள் மூன்று பேர் டாக்ஸியில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 80 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்.  Me, Vijaya, Pattu Manni போகும் வழியில் ஸ்ரீ ராமானுஜர் ஸ்வாமிகள் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூர் சென்று அவரது கோயிலுக்கு சென்றோம். ஸ்வாமிகளின் 1000-வது ஜன்ம தினம் சமீபத்தில் கொண்டாடப்பெற்றது. அழகான கோயில். அடுத்த ஸ்டாப் - காலை உணவு. காஞ்சிபுரத்திற்கு அருகில், பெங்களூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள சரவணா பவன் ஓட்டல். பொங்கல், இட்லி சாப்பிட்டோம். இந்தப் பாதையிலிருந்து இடது புறம் திரும்பும் வீதியில் போய், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிஸித்தோம். ஏகாம்பரேஸ்வரர், முருகன், கைலாசநாதர், காளிகாம்பாள், கச்சபேஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்றோம். Gave Rs 3000.00 at Kachabeswarar koil for Annadhanam. இரவு 8-30க்கு வீடு திரும்பினோம். காஞ்சியில் 1008 கோயில்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. ஏகாம்பரேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில்களுக்கும் கூட்டம் வருகிறது; இந்தக் கோயில்க

Dabba Chetty Kadai, Mylapore

Namma Madras Wonders of Mylapore We all know the greatness of namma Mylapore - famous temples (both Shiva and Vishnu), concert halls and drama stages, Tamil culture at its best, best schools and educational institutions, hospitals, shops, vegetables; you ask for anything, you get the best in Mylapore. Today I will introduce to you another legend from Mylapore ---- the Dabba Chetty Kadai. This shop for herbal medicines was started 132 years ago in 1885 at the Kutchery Road in Mylapore near Arundale Street by one Mr. Krishnaswamy Chetty. They dealt with all sorts of herbal medicines. Whatever the consumer wanted, the shop will weigh that and pack it in a container and give it to the customer. Thus, the shop's name "changed" to dabba chetty kadai (dabba in Tamil means container). It is known as dabba chetty kadai only for the past 130 years !! Initially, the shop used to sell only the raw ingredients (like milagu - pepper, grambu-clove, sukku-dry ginger, etc.). My m

SRIRAM THALAI AVANI AVITTAM 2017

தலை ஆவணி அவிட்டம். இந்த வருஷம் (2017) சந்திர க்ரஹணத்தினால் 5-8-2017 நடக்க இருந்த ஆவணி அவிட்டம் (யஜுர் உபாகர்மா) 6-9-2017 சனிக்கிழமை என மாறிவிட்டது. சில பேர் ஆகஸ்டிலும் மீதி பேர் செப்டம்பரிலும் செய்தார்கள். நம் குடும்பத்தில் எல்லாரும் செப்டம்பர் 6ல் தான் செய்தோம். காலையில் 7 மணிக்கு நான் செய்தேன். பின்னர் அர்விந்திற்கு செய்வித்தேன். நானும் விஜயாவும் 9 மணி சுமாருக்கு அருண் வீட்டிற்கு சென்று இட்லி சாப்பிட்டோம். ஃபிப்ரவரியில் உபநயனம் ஆன ஸ்ரீராமிற்கு இது தலை ஆவணி அவிட்டம். அடையாறு ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலுக்கு அருண் ஸ்ரீராமை அழைத்துப் போனான். அங்கு நமது வீட்டு வாத்யார் ஸ்ரீ வெங்கடாசலம் எல்லாருக்கும் சமஷ்டியாக செய்து வைத்தார். அப்பம் முதலியவற்றை காயத்ரி செய்து கொடுத்தாள். அவள் இன்று லீவு போட்டிருந்தாள். பூணூல் போட்டுக் கொண்ட பின்னர் நாந்தி நடைபெற்றது. 9 வாத்யார்களுக்கு, அரிசி வாழைக்காய், 100.00 தக்ஷிணை கொடுத்து ஸ்ரீராம் முடித்தான். மத்தியானம் 1-30க்கு எல்லாம் ஆயிற்று. வீட்டிற்கு வந்து எல்லாரும் ஒன்றாக வடை, பாயசத்துடன் விருந்து சாப்பிட்டோம். மாலை 7 மணிக்கு அருண் ஆகிய