தலை ஆவணி அவிட்டம்.
இந்த வருஷம் (2017) சந்திர க்ரஹணத்தினால் 5-8-2017 நடக்க இருந்த ஆவணி அவிட்டம் (யஜுர் உபாகர்மா) 6-9-2017 சனிக்கிழமை என மாறிவிட்டது. சில பேர் ஆகஸ்டிலும் மீதி பேர் செப்டம்பரிலும் செய்தார்கள். நம் குடும்பத்தில் எல்லாரும் செப்டம்பர் 6ல் தான் செய்தோம்.
காலையில் 7 மணிக்கு நான் செய்தேன். பின்னர் அர்விந்திற்கு செய்வித்தேன். நானும் விஜயாவும் 9 மணி சுமாருக்கு அருண் வீட்டிற்கு சென்று இட்லி சாப்பிட்டோம். ஃபிப்ரவரியில் உபநயனம் ஆன ஸ்ரீராமிற்கு இது தலை ஆவணி அவிட்டம்.
அடையாறு ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலுக்கு அருண் ஸ்ரீராமை அழைத்துப் போனான். அங்கு நமது வீட்டு வாத்யார் ஸ்ரீ வெங்கடாசலம் எல்லாருக்கும் சமஷ்டியாக செய்து வைத்தார். அப்பம் முதலியவற்றை காயத்ரி செய்து கொடுத்தாள். அவள் இன்று லீவு போட்டிருந்தாள்.
பூணூல் போட்டுக் கொண்ட பின்னர் நாந்தி நடைபெற்றது. 9 வாத்யார்களுக்கு, அரிசி வாழைக்காய், 100.00 தக்ஷிணை கொடுத்து ஸ்ரீராம் முடித்தான். மத்தியானம் 1-30க்கு எல்லாம் ஆயிற்று. வீட்டிற்கு வந்து எல்லாரும் ஒன்றாக வடை, பாயசத்துடன் விருந்து சாப்பிட்டோம்.
மாலை 7 மணிக்கு அருண் ஆகியோர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு போனார்கள். அர்ஜுனும், விஜயாவும் கூட போனார்கள்.
இப்படியாக ஸ்ரீராமின் தலை ஆவணி அவிட்டம் சிறப்பாக நடந்தேறியது.
ராஜப்பா
7-9-2017

Comments