Skip to main content

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day2

27 ஜுன் 2009 சனிக்கிழமை (நாள் 2)

கிருஷ்ணனின் லீலைகள்

இன்றும் நாங்கள் மாலை 5 மணிக்கே ஆஸ்திக ஸமாஜத்திற்குச் சென்றுவிட்டோம். சரியாக 6-30க்கு ஸ்ரீமதி விஷாகா ஹரி தன் ஸங்கீத உபன்யாஸத்தை ஆரம்பித்தார்.

குழந்தை கண்னன் கோகுலத்தில் தன் அம்மா யஸோதாவிடம் செய்த லீலைகளுடன் உபன்யாஸம் களை கட்டியது.

கண்ணன் மண் தின்றது.

ஒரு நாள் பலராமனும், மற்ற சிறுவர்களும் யஸோதாவிடம் வந்து, கண்ணன் மண் தின்றதாக புகார் கூறினர். வாயைத்திறந்து காட்டுமாறு அவள் கேட்க, கண்ணன் தான் மண் திங்கவேயில்லை, பலராமனும், மற்றவர்களும் பொய் சொல்கிறார்கள் என்று சாதித்தான்.

யஸோதா விடாமல் வற்புறுத்தவே, கண்ணன் தன்னுடைய லீலையை ஆரம்பித்தான், குஞ்சு வாயை ஆவென்று திறந்து காட்டினான். பார்த்த யஸோதா வியப்பில் ஆழ்ந்தாள் - குழந்தையின் வாயில் அண்ட சராசரங்களும், பலப்பல கண்டங்களும், பாரத வர்ஷமும், பரத கண்டமும், அதனுள்ளே குட்டி கிருஷ்ணனும் - அந்த கண்ணன் வாயில் மீண்டும் அண்ட சராசரங்களும், கண்டங்களும், பாரத வர்ஷமும், மீண்டும் குட்டிக் கண்ணனும், அந்த குட்டிக் கண்ணன் வாயில் --- என தொடர்ந்து கொண்டே போயிற்று. யஸோதாவிற்கு "யார் இந்தக் குழந்தை" என ஒரே வியப்பு; சாக்ஷாத் பகவான் தான் என உறுதி கொண்டு, குழந்தையை நமஸ்காரம் பண்ண ஆரம்பித்தாள்.

தன்னை நமஸ்காரம் பண்ணி பூஜிக்க இந்த சராசரங்களில் கோடானுகோடி உயிர்கள் உள்ளன, ஆனால் தான் நமஸ்காரம் பண்ண தன் அம்மா-அப்பா மட்டுமே என நினைத்து, தன் மாயையை யஸோதா உடனே மறக்குமாறு பண்ணினான். இப்போது வாயைத் திறந்தால், உள்ளே ஒன்றுமேயில்லை. பகவானின் விஸ்வரூபம் அவளுக்கு மறக்கடிக்கப் பட்டது. மீண்டும் "வெண்ணை உண்ட கண்ணனாக, மண்ணை உண்ட கண்ணனாக" குழந்தையானான்.

"யஸோதா அம்மாவிற்கு காண்பித்த அந்த முகத்தை எங்களுக்கும் காண்பிக்க மாட்டாயா?" என பல ரிஷிகளும், முனிவர்களும், பக்தர்களும் இன்றைக்கும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் - "கிருஷ்ணா, நீ பேகனே பாரோ, பேகனே பாரோ, தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரிதா" என இறைஞ்சிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கண்ணனை உரலில் சேர்த்துக் கட்டியது.

இன்னொரு நாள் யஸோதா தயிர் கடைந்து கொண்டிருக்கும்போது, நடுவில் வேறு வேலையாக அவள் செல்ல, குட்டிக் கண்ணனுக்கு பொய்க்கோபம் வர, தயிர், வெண்ணெய் பாத்திரங்கள், தயிர் மத்து ஆகியவற்றை போட்டு உடைத்தான். பார்த்த யஸோதாவிற்கு நிஜக் கோபம் வந்தது.

உரலில் அவனைக் கட்டி வைக்க முடிவெடுத்தாள். நீளமான கயிறு கொண்டுவந்து கட்ட ஆரம்பித்தாள். கயிறு கொண்டு கட்டப்போவது யாரை? எல்லா உயிர்களுக்கும் பிறப்பு-இறப்புக் கட்டுக்களை அறுக்கும் அந்த பகவானை, ஸர்வேஸ்வரனை ! கயிற்றின் நீளம் போதவில்லை - ஓங்கி உலகளந்த உத்தமனை சாதாரணக் கயிற்றால் கட்ட முடியுமா? இன்னும் நீளமான கயிறு, அதுவும் போதாமல், இன்னும் நீளமான கயிறு கொண்டு வந்தாள். அப்போதும் நீளம் போதவில்லை. "போதும் நமது லீலை"யென தன்னுடைய உடலை கொஞ்சம் சுருக்கி, கயிற்றைக் கட்ட காண்பித்தான். உரலில் சேர்த்துக் கட்டப்பட்டான்.

உதரம் என்றால் வயிறு, தாமம் என்றால் கயிறு; வயிற்றில் கயிறு கட்டப்பட்டதால் தாமம் + உதரம் சேர்ந்து கண்ணன் தாமோதரன் ஆனான்.

யோகிகளுக்கும், முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் கூட எளிதில் கிடைக்காத அந்த பகவானைப் பிடித்து, கட்டிப் போட்ட யஸோதையே - நீ என்ன தவம் செய்தனை? பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள (கண்ணனை), உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே, நீ என்ன தவம் செய்தனை?

உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டு கண்ணன் இரண்டு மருத மரங்களுக்கு நடுவில் தவழ, அந்த மரங்கள் சரிந்து சாய, குபேரனின் இரண்டு குமாரர்கள் சாப விமோசனம் பெற்றனர். பின்னர், நந்தகோபன் வந்து கட்டுகளை அவிழ்த்தார்.

அகாஸுர வதம்.

இன்னொரு நாள் அவன் ஆயர் சிறுவர்களுடன் "கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்" என சாப்பிட போகும்போது, வழியில் ஒரு மலைப்பாம்பில் அகாஸுரன் என்ற அஸுரன் ஆவேஸித்து வாயை திறந்துவத்துக் கொண்டு கிடந்தான். அஸுரன் என்று தெரியாத குழந்தைகள் அவன் வயிற்றில் மாட்டிக்கொண்டனர். கடைசியாக வந்த கண்ணன் பாம்பின் வாயில் நுழைந்து, "ஓங்கி உலகளந்த உத்தமனாக" பெரிய உருவம் எடுத்து அஸுரனின் வயிற்றைக் கிழித்து, சிறுவர்களை மீட்டு, அகாஸுரனை வதம் பண்ணினான்.

ப்ரஹ்மாவிற்கு பாடம் புகட்டியது.

ஒரு நாள் ப்ரஹ்மா ஆயர்பாடி சிறுவர்களையும், அவர்களது மாடு கன்றுகளயும் கண்ணனுக்குத் தெரியாமல் கவர்ந்து, தன்னுடைய ஸத்யலோகத்திற்கு புறப்பட ஆரம்பித்தார். இதை அறிந்துகொண்ட கண்ணன் ப்ரஹ்மாவின் உருவம் எடுத்து, அவருக்கு முன்பாக ஸத்யலோகம் சென்று கதவை சாத்திக் கொண்டார். நிஜ ப்ரஹ்மா வந்தபோது த்வார பாலகர்கள் அவரை உள்ளே விட மறுத்து, தள்ளிவிட்டனர். பங்கம் அடைந்த ப்ரஹ்மா கண்ணனிடம் சரண் அடைந்தார்.

காளிங்க நர்த்தனம்.

மற்றுமொரு நாள், யமுனை நதியில் குதித்து, அதனுள் இருந்த காளிங்கன் என்ற 100-தலை நச்சுப் பாம்பின் மீது நர்த்தனம் ஆடி அதை வேறு இடத்திற்கு அனுப்பிவைத்தார்.

நாளை (ஜூன் 28) "ருக்மிணி கல்யாணம்." சந்திப்போம்

ராஜப்பா
28-06-2009
காலை 9 மணி

முதல் நாள் .... மூன்றாம் நாள்

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011