Dr Sudha Seshayyan and Kamba Ramayanam
“சுதா சேஷய்யன் இன்று மாலை மயிலாப்பூர் PS High School-ல் ஸ்ரீராம அவதாரம் என்கிற தலைப்பில் உரையாற்றுவார்” என்ற செய்தியை நேற்று காலை (18-04-2009) மயிலாப்பூர் டைம்ஸில் பார்த்தவுடன், இந்த நிகழ்ச்சிக்குத் தவறாமல் போகவேண்டும் என விஜயாவும், நானும் தீர்மானித்துக் கொண்டோம்.
சுதா சேஷய்யன் அவர்கள் ஒரு தலைசிறந்த சொற்பொழிவாளர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கம்ப ராமாயணத்தை “கரைத்துக் குடித்து” அதில் “முழுகி எழுந்தவர் ". அவரது கம்ப ராமாயண சொற்பொழிவுகள் மிக பிரசித்தம். தமிழில் நல்ல புலமை. (ஆங்கிலத்திலும்). அவரது சொல்லாற்றலும், தடையில்லா சொல் பெருக்கும் கேட்க கேட்க ஆனந்தமாயிருக்கும்.

மாலை 5-45க்கு ஹாலை சென்றடைந்தோம்; எனக்கு வியப்பும், நிறைய ஏமாற்றமும். 80-85 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய ஒரு குட்டி ஹால்! இந்தச் சிறிய ஹாலிலா சுதா பேசப்போகிறார்?! “இருக்காது, தவறான இடத்திற்கு நாம் வந்துள்ளோம்” என நினைத்த போது, “இல்லை, சுதா சேஷய்யன் இங்குதான் பேச இருக்கிறார்” என்பது உறுதியாகியது.
வழக்கம்போல, அவர் மிக நன்றாக சொற்பொழிவாற்றினார். ஸ்ரீராம அவதாரத்தின் சீரிய பண்புகளை - தன்னை மட்டுமல்லாமல், தன்னையும் கூடியிருக்கிற மற்றவர்களையும் பண்பில் உயர்ந்தவர்களாக ஆக்கிய ஸ்ரீராமனை நம் கண் முன் கம்பனின் பார்வையில் காட்டினார்.
”பட்டாபிஷேகம் பரதனுக்குத்தான், உனக்கல்ல, நீ மரவுரி அணிந்து 14 வருஷங்கள் வனவாஸம் போகவேண்டும், அரசன் இயம்பினன்,” என்று கைகேயி கூற --- அரசன், அதாவது தசரத மஹாராஜாவின் உத்தரவு, எனச் சொன்னால்தான் ஸ்ரீராமன் கேட்பான் என எண்ணி, அரசன் இயம்பினன் என சொன்னாள். அந்த க்ஷணம் வரை இந்த சேதியை கேட்டிராத ஸ்ரீராமன் என்ன பதிலளித்தான் தெரியுமா? “அரசன் மட்டுமல்ல, என் தாயாகிய நீங்கள் சொன்னாலே நான் வனவாஸம் போவேன்” என்றான்.
“14 வருஷம் வனவாஸம்” என்றுதானே சொன்னோம், என்றையிலிருந்து என சொல்லவில்லையே, இந்த ஸ்ரீராமன் இரண்டு வருஷம், ஒரு வருஷம், 6 மாஸங்கள் என நாள் கடத்திவிடுவானோ என கைகேயி மயங்க, ஸ்ரீராமன் அடுத்த வார்த்தையிலேயே “ இன்றைக்கே!” என சொன்னார்.
’இன்றைக்கே’ என்றாலும், ’எப்போது என்று சொல்லவில்லையே, மாலையில்தான் போவானா, இல்லை பின்னிரவிலா’ என கைகேயி யோசிக்க, ஸ்ரீராமனின் அடுத்த வார்த்தை வருகிறது, ‘விடை கொடுங்கள், கிளம்பி விட்டேன்’. அடுத்த க்ஷணம் ஸீதையுடனும், லக்ஷ்மணனுடனும் காட்டிற்கு கிளம்புகிறான் ஸ்ரீராமன். என்ன உயர்ந்த பண்பு. 30 விநாடிகள் முன்புவரை மஹாராஜாவாக இருந்தவன் அப்போதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கவில்லை; இப்போது வனவாஸத்திற்கு கிளம்பும் போதும் முகத்தில் துக்கத்தின் அறிகுறி கூட இல்லை. ஸ்ரீராமனுக்கு மட்டுமல்ல, ஸீதைக்கும், லக்ஷ்மணனுக்கும் கூட !
இதுபோன்று பல காட்சிகளை சுதா சேஷய்யன் கம்பனின் காவியத்திலிருந்து விளக்கினார்.
சுதா சேஷய்யன் ஒரு MBBS, MS, Professor in Medical College, கம்ப ராமாயண சொற்பொழிவுகளை 30 வருஷங்களுக்கும் மேலாக இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் உரையாற்றி வருகிறார்.
ராஜப்பா

19-04-2009 12:15 பகல்
Comments