Skip to main content

ஸ்ரீகோதண்டராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மாம்பலம்

ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தான் புதிதாக சொல்லத் தொடங்கியுள்ள ஸ்ரீராமாயண உபந்யாஸத்தில் நேற்று (6-4-2012) காலை கோதண்டராமர் கோயிலையும், அந்த கோயிலில் உள்ள ஸஞ்சீவ பர்வத ஹனுமானையும் பற்றி விவரித்தார். உடனே சென்று ஸ்ரீராமரையும், ஹனுமானையும் தரிஸிக்க ஆசை வந்தது. மாலை 4 மணிக்கு நானும், விஜயாவும் கிளம்பிவிட்டோம்.

தி.நகர் பஸ் நிலையத்திற்கு மிக அருகில், மேற்கு மாம்பலத்தில் மேட்லி ரோட் கீழ்ப்பாதை (SUBWAY) முடியும் இடத்தில் அதன் இடது பக்க தெருவில் இந்த கோயில் உள்ளது. 150 வருஷங்கள் புராதனமானது. பிரதான வாயிலில் நுழைந்தால் அங்கு ஸ்ரீ ஹனுமான் சன்னதி இருக்கிறது. இந்த ஹனுமானைப் பற்றித்தான் ஸ்ரீ வேளுக்குடி காலையில் விவரித்தார். ஹனுமானை நன்கு தரிஸித்துக் கொண்டோம்.

பிரதான வாயில் - கோதண்டராமர் கோயில்

முக்கிய சன்னதியின் இடது புறத்தில் ரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது. தாயாரை வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தால், ஸீதம்மா, லக்ஷ்மண், ஆஞ்சநேயர் ஸமேத ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் காக்ஷி அருளுகிறார். பத்ராசலம் கோயிலுக்கு அடுத்தபடியாக இங்குதான் பட்டாபிஷேக ராமர் இருக்கிறார்.

கோதண்டராமர் கோயில்
வில்லேந்திய கோதண்டராமர், ஸீதா, லக்ஷ்மண் ஆகியோரின் சிலைகள் 1920-ல்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டன; இந்த சிலைகள் பட்டாபிஷேக ராம்ரின் பின்னால் உள்ளன. ராமர் கம்பீரமாக காக்ஷி தருகிறார்.

கோயிலில் ஸ்ரீரங்கநாதர், யோக நரசிம்ஹர், ஆழ்வார்கள், ஆண்டாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. ஒரு சிறிய நந்தவனமும் இருக்கிறது.  கோயிலின் திருக்குளம் புகழ் பெற்றது. வருஷம் தோறும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

அமைதியான, அழகான திருக்கோயில்.

அதற்கு அருகிலேயே ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் ஸமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. நாயக்க மன்னர்களால் சுமார் 400 வருஷங்கள் முன்பு கட்டப்பட்ட இந்த அழகிய கோயிலில் 2003-ல் புனர் உத்தாரணம் ஆரம்பிக்கப்பட்டு, கோயில் புதுப்பிக்கப்பட்டு, 2010-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இங்கு மூலவராக ஸ்ரீகாசி விஸ்வநாதரும், அம்பாளாக ஸ்ரீ காசி விசாலாக்ஷியும் அருள் புரிகின்றனர். ஸ்ரீப்ரஹ்மா, மஹாவிஷ்ணு, தக்ஷிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, விநாயகர், முருகன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

பக்கத்தில் ஸ்ரீசங்கர மடம், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், கோ சம்ரக்ஷணை சாலா ஆகியவைகள் உள்ளன. ஒரு வேத பாடசாலையும் இருக்கிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு எல்லாப் பசுக்களுக்கும் பூஜை நடக்கிறது. நிறைய பேர் கலந்து கொள்கின்றனர்
ஸ்ரீ சங்கர மடம்
வேத பாராயணம்
ஸ்ரீ சங்கர மடத்தில் மாதத்தில் ஒவ்வொரு அனுஷம் நக்ஷத்திரத்தன்றும் விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன. அனுஷம் மஹா பெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரம் என்பது தெரிந்ததே. விசேஷ அன்னதானமும் நடைபெறுகிறது.


கோ-சாலாவின் நுழைவு வாயில்

கோ-சாலாவில் பசுக்கள்
எல்லாவற்றையும் தரிஸித்துக் கொண்டு திருப்தியாக, சந்தோஷமாக வீடு திரும்பினோம்.

ராஜப்பா
காலை 9.00 மணி
7-4-2012


Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011