கோடை காலத்திற்கான் முன் அறிவிப்பு அறிகுறிகளில், மயிலாப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் மாவடு வரவு முக்கியமான ஒன்று.
தெற்கு மாட வீதியில் கொட்டி வைத்திருக்கும் மாவடுக்களை பார்க்கும்போதே நம் வீட்டு பெண்களுக்கு கைகள் உதற ஆரம்பித்து விடும்; உடம்பும் என்னவோ பண்ணும். அந்த க்ஷணமே மாவடுக்களை வாங்கி, ஊறுகாய் போட கை துறுதுறுக்கும். விஜயாவும் இந்த உலக நியதிக்கு விலக்கு அல்ல - விதவிதமாக ஊறுகாய் போடுவதில் அவள் ஒரு எக்ஸ்பர்ட்.
இந்த 2009 வருஷம் விஜயாவை முந்திக்கொண்டு விட்டாள் எங்கள் காயத்ரி! வாசலில் வந்தது என 2 படி மாவடு வாங்கி, விஜயாவிடமிருந்து செய்முறை கேட்டறிந்து, காயத்ரி ஊறுகாய் போட்டுவிட்டாள்.
ஊறுகாய்க்கு தேவைப்படும் கல்லுப்பு, மிளகாய்ப் பொடி (ஹைதராபாத் பொடி) ஆகியவைகளை விஜயா தயார் பண்ணிக்கொண்டு, மாவடு 5 படி (படி 20.00) வாங்கி ஊறுகாய் போட்டாள். இப்போது தினமும் தொட்டுக்க மாவடுதான்.
இதோ இன்று - 10 ஏப்ரல் - மயிலாப்பூரிலிருந்து ஹைதராபாத்துக்கு 5 படி மாவடு பயணம் செய்கிறது.
ராஜப்பா
8:10 இரவு, 10-04-2009

Comments