Skip to main content

SRINIVASA KALYANAM - Vishakha Hari

ஸ்ரீநிவாஸ கல்யாணம் - விஷாகா ஹரி உபன்யாஸம் DVD

நேற்று, ஜனவரி 3-ஆம் தேதி, இந்த டீவிடீ_யை மயிலாப்பூர் கிரி டிரேடர்ஸில் வாங்கினேன் (ரூ 99/-) இந்த டீவிடீ மூன்று நாட்கள் முன்புதான் டிசம்பர் 31-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

ஸ்ரீமதி விஷாகாவின் இன்னொரு அருமையான உபன்யாஸம். B Ananthakrishnan on Violin, Arjun Ganesh on Mridangam, Trichy Murali on Ghatam.

வைஷ்ணவர்களின் 108 திவ்ய தேசங்களில், முக்கியமானவை மூன்று - ஸ்ரீரங்கம் (வைஷ்ணவம் வளர்ந்த ஊர்), காஞ்சிபுரம் (பிறந்த ஊர்), திருமலா (வைஷ்ணவத்தின் புகலிடம்). இவற்றில் திருமலாவில் குடி கொண்டுள்ள ஸ்ரீநிவாஸனைப் பற்றியது இந்த உபன்யாஸம்.

“பரம யோகிகளுக்கு மட்டுமே வைகுண்டத்தில் நீ தரிஸனம் கொடுத்து அருள் பாலிக்க வேண்டுமா? எளியவர்களுக்கும் நீ தரிஸனம் கொடுக்க வேண்டாமா?” என பகவானை நாரதர் வேண்ட, “ஸரி, நீயே ஒரு இடத்தை காண்பி,” என பகவான் சொன்னார்.

“தொண்டை மண்டலத்தில் ஒரு இடம் உள்ளது; அது இருட்டாக மிகவும் க்ஷீணித்து, நலிந்து போயிருக்கும் ஒரு இடம், அங்கு நீங்கள் எழுந்தருள வேண்டும்,” என நாரதர் சொன்னார்.

அதுதான் திருவேங்கடம் என்றும் திருமலா என்றும் அழைக்கப்படும் இடம். முதலில் ஆதிசேஷன் சப்தகிரியாக (ஏழு மலைகளாக) அங்கு அவதரித்தார். ஆதிசேஷன் பெயரில் சேஷாத்திரி,  கருட பகவான் பெயரில் கருடாத்ரி, வேங்கடவனுக்காக வேங்கடாத்ரி, பகவான் நாராயணனின் பெயரில் நாராயணாத்ரி,  வ்ருபாஸுரனுக்காக வ்ருஷபாத்ரி, வேதங்களுக்காக வேதாத்ரி எனப்படும் வ்ருஷாத்ரி, அஞ்சனையின் புதல்வனாக இந்த ஊரில் அவதரித்த ஆஞ்சநேயர் பெயரில் அஞ்சனாத்ரி என ஏழு மலைகள்.

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம் என்கிறது ஸ்ரீவெங்கடேஸ ஸுப்ரபாதம்.

தொண்டை மண்டல ராஜாவாக இருந்த தொண்டைமான் சக்ரவர்த்திக்கு, மாடு மேய்க்கும் ஆயர்கள் தினமும் பால் கொண்டு சென்று சமர்ப்பிப்பது வழக்கம். ஒரு நாள் பால்குடங்களை எடுத்து சென்றபோது, வழியில் ஒரு புற்றின் அருகே பால்குடங்கள் தானாகவே உடைந்து பால் அந்த புற்றினுள் போனது. அதே சமயம், அந்த ஊரில் இருந்த ஒரு விவசாயியின் நிலத்தில் வராஹன் (பன்றி) வந்து, அவனையும் இந்த புற்றிற்கு கொண்டுவந்தது. அதிசயத்தை ராஜாவிடம் சொன்னான். ராஜாவின் கனவிலும் பகவான் நாராயணன் தோன்றி அந்தப் புற்றினுள் தான் இருப்பதாகவும் தனக்கு அங்கேயே கோயில் கட்டுமாறும் சொல்லியிருந்தபடியால், ராஜா அங்கு வந்து பால் அபிஷேகம் செய்து விக்ரஹத்தை வெளியில் எடுத்து, கோயிலை நிர்மாணித்தார். அதுதான் ஸ்ரீவேங்கடேஸ்வரன் கோயில். பின்னர் க்ருஷ்ணதேவ ராயர் போன்ற அரசர்கள் இதை புதுப்பித்தும், பெரிசு பண்ணியும் இன்று நாம் வணங்கும் கோயிலாக ஆகியுள்ளது.

இந்த வராஹன்தான் கோயிலில் முதலில் தோன்றியவர்; எனவே இன்றைக்கும் கோயிலில் ஸ்ரீவராஹனுக்குத்தான் முதல் நைவேத்தியம். நாமும் முதலில் வராஹனை வேண்டிக் கொண்டுதான் பின்னரே வேங்கடேஸ்வரனைத் தரிஸிக்க வேண்டும்.

பல ஆண்டுகள் கழித்து, மலைக்கு கீழே ஆகாசராஜன் என்னும் ராஜா ஆண்டு வந்தார். இவருக்கு அகஸ்திய தீர்த்தம் என்னுமிடத்தில் ஒரு நாள் தாமரை புஷ்பத்தின் மேல் ஒரு பெண்குழந்தை கிடைத்தாள். தாமரைக்கு “அலர்” என இன்னொரு பெயர் உண்டு; எனவே இந்தக் குழந்தை “அலர் மேல் மங்கை”, எனவும் “பத்மாவதி” (பத்மம் = தாமரை) எனவும் அழைக்கப்பட்டாள்.

தெலுங்கு மொழியில் அலமேலுமங்கா என அழைக்கப்பட்ட இவள் மிக அழகிய இளம்பெண்ணாக ஆனபோது, ஸ்ரீநிவாசனை ஒருமுறை பார்த்து அவன் மீது மையல் கொண்டாள். ஸ்ரீநிவாசன் சார்பாக சுகர் சென்று அரசனிடம் பெண் கேட்டார்.

பின்னர் பத்மாவதி தாயாருக்கும், ஸ்ரீநிவாசப் பெருமானுக்கும் கீழ் திருப்பதியான தி்ருச்சானூரில் திருக்கல்யாணம் நடந்தது.

வழக்கம்போல விஷாகா ஹரி தன்னுடைய தேன்குரலில் த்யாகராஜ பெருமானையும், பாபநாசம் சிவனையும், முத்துஸ்வாமி தீக்ஷிதரையும், முக்கியமாக அன்னமய்யாவையும் பாடினார்.

உபன்யாசம் மிக இனிமை; 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. கதை சொல்லும் அவரது நேர்த்தியில், அந்த வர்ணனையில், ஆங்காங்கே அன்னமய்யாவின் இன்னிசைப் பாடல்களை அவர் பாடும் தேன் மழையில் சொக்கினேன், கட்டுண்டேன்.

இதோ ஒரு அன்னமய்யாவின் பாடல்

ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே சரணம்

கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)

 பரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)
 அன்னமய்யாவின் இந்த அற்புத பாடலை MS அம்மாவின் குரலில் கேட்டு இன்புறுங்கள்.

ராஜப்பா
காலை 11-10 மணி
04 ஜனவரி 2010

The celebrated harikatha artist Vishakha Hari is back with a new discourse on the much loved story of Srinivasa’s kalyanam with Padmavathi. A fascinating story of how Lord Srinivasa / Balaji came to marry Princess Padmavathy, daughter of Akasa Raja, beginning with the story of Lord Srinivasa himself.

A story the young and old would love to hear over and over again – especially if it is told by Vishaka Hari – combining words, music and beautiful lyrics to create a unique experience for the viewer. This exciting new DVD will be released by Vishakha Hari at Brahma Gaana Sabha at 6pm on the last day of the year 2010. The first copy was offered to Lord Vinayaka and the DVD will be released with a small prayer.

from Indiainfoline

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011