நீரஜாவும் அஷோக்கும் சில வருஷங்களாக ஸ்ரீஸத்ய நாராயண வ்ரத பூஜை அனுஷ்டித்து வருகிறார்கள். இந்த வ்ரதத்தை பற்றியும் அவர்கள் 29 மார்ச் 2010 அன்று பூஜை செய்த விவரத்தையும் இங்கு படிக்கலாம்.
இந்த (2011) வருஷம் அவர்கள் 18 ஃபிப்ரவரி 2011 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த பூஜையை செய்தனர். விஜயாவும் நானும் சென்னையிலிருந்து 17-ஆம் தேதி பிற்பகல் பெங்களூர் சென்றோம்.
பூஜைக்கான ஏற்பாடுகளை (சாமான்கள் வாங்குதல் போன்றவை) நீரஜாவும், அஷோக்கும் ஏற்கனவே செய்து முடித்திருந்தனர். 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வீட்டை மெழுகி, துடைத்து, ஸ்வாமி படத்தை எடுத்து வைத்து, அலங்கரித்து பூஜைக்குத் தயாராகினோம். நீரஜா எலுமிச்சம்பழ சாதம், ரசஞ்சாதம், தயிர் சாதம், உ.கிழங்கு கறி செய்தாள். மாமி, மாமா, ஸ்ரீவள்ளி ஆகியோர் 4-45க்கு வந்தனர். நைவேத்யத்திற்கு மாமி ரவாகேஸரி பண்ணி எடுத்து வந்தார்.
சாஸ்திரிகள் 5-45க்கு பூஜையை ஆரம்பித்தார்.சென்னை மயிலாப்பூரிலிருந்து நாங்கள் வாங்கிச் சென்ற புடவையை நீரஜா அணிந்து கொண்டாள். மிகவும் விரிவான பூஜை. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர 1008 நாமாவளியுடன் பூஜை 8-15க்கு நிறைவுற்றது. மாமியும், விஜயாவும் 1008 நாமாவளியையும் அவருடன் சேர்ந்து சொன்னார்கள்.
பூஜைக்கு தயாராகிறது
தீபாராதனை, நமஸ்காரத்திற்கு பின்னர் சாஸ்திரிகள் ஸ்ரீஸத்ய நாராயண வ்ரத மஹாத்மிய கதைகளை (கன்னடத்தில்) சொன்னார். இவ்வாறாக, இந்த வருஷமும் (2011) பூஜை வெகு சிறப்பாக நடந்தது. நீரஜாவையும் அஷோக்கையும் ஸத்ய நாராயணர் ஆசீர்வதிக்கட்டும். GOD Bless them both.
rajappa
10:15 AM
24-02-2011
Comments