10 ஏப்ரல் 2012 செவ்வாய்க்கிழமை. அன்றையப் பொழுது வழக்கம்போல விடிந்தது. காலை 4-15க்கு எழுந்து, குளித்து, பாராயணங்கள் படித்து, 6-30க்கு பொதிகை டீவியில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஸ்ரீராமாயணம் உபன்யாஸம் கேட்டேன். காலை 7-30க்கு, விஜயா குளித்துக் கொண்டிருக்கும் போது காய்கறி வாங்க பைகள் எடுத்துக் கொண்டு, திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் கிளம்பினேன். காய்களும் வாங்கினேன். திரும்பும் போது மார்க்கெட் வாசலில் நுங்கும் வாங்கினேன். வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
நடக்க ஆரம்பித்ததுதான் தெரியும் - அடுத்து நான் கண் விழிக்கும் போது ஒரு ஹாஸ்பிடலில் இருந்தேன், கூடவே விஜயாவும், அர்விந்தும் சோகமாக. என்ன ஆயிற்று எனக்கு? நான் ஏன் ஹாஸ்பிடலில் படுத்து இருக்கிறேன்? ஒன்றுமே நினைவில்லை. டாக்டர்கள் வந்து என்னை டெஸ்ட் பண்ணியதோ, பல டெஸ்ட்டுகளுக்கு ஆட்படுத்தப் பட்டதோ, அருண், காயத்ரி, கிருத்திகா, கணபதி சுப்ரமணியம், சுகவனம், சுதா, சதீஷ், ராமமூர்த்தி அத்திம்பேர் ஆகியோர் வந்தததோ ஒன்றுமே தெரியாது. Total blank.
ECR-ல் ”தமிழினி” கடைக்கு அருகில் நடந்து வந்த போது, நான் திடீரென தலைகுப்புற கீழே விழுந்திருக்கிறேன். மயக்கமாகி விட்டேன். அங்கிருந்தோர் என்னை தூக்கி உட்கார வைத்து விட்டு, என்னுடைய மொபைல் ஃபோனை ON பண்ணி பார்த்திருக்கிறார்கள், “கடைசியாக ஃபோன் பேசியது” யாரிடம் என நோக்கியிருக்கிறார்கள். “கிருத்திகா” பெயர் தென்பட, அந்த எண்ணுக்கு உடனே ஃபோன் பேசி, கிருத்திகாவிடம் “யாரோ ஒரு பெரியவர் காய்கறிகளுடன் வந்த போது, கீழே விழுந்ததையும், பேச்சு, உணர்வு இல்லாத நிலையில்” இன்ன இடத்தில் இருப்பதாகவும் அவர்கள் சொல்ல, விஜயாவும், அர்விந்தும் கண்ணீருடன் காரில் விரைந்து வந்து, என்னையும் காய்கறிப் பையையும் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள (திருவான்மியூர்) ஸ்வரம் மருத்துவ மனைக்கு விரைந்தனர். காலை மணி பத்து. எனக்கு சுத்தமாக ஒன்றுமே நினைவே இல்லை.
அங்குள்ள டாக்டர்கள் விரைந்து முதல் உதவி அளித்து, ECG, Fasting Sugar டெஸ்ட் பண்ணினார்கள். கடவுள் புண்ணியத்தில் எல்லாம் நார்மல். Chief Doctor வந்து பரிசோதித்தார். “Loss of Short Term Memory" என சொன்னார்கள். அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லியிருக்கிறேன். ஆனால் அன்று என்ன நடந்தது (அதாவது எப்படி விழுந்தேன், எங்கு விழுந்தேன் என்பதற்கான பதில்கள் என்னிடம் இல்லை !!) மாலையும் அவர் வந்து பரிசோதித்தார். X-RAY எடுக்கப்பட்டது. காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோர் மாலை 4-30க்கு வந்தனர்.
பகல் உணவு, மாலை காஃபி, இரவு உணவு ஆகியவைகளை கிருத்திகா வீட்டிலிருந்து கொண்டு வந்தாள். மாலையில் என்னை PRECISION DIAGONOSTIC LAB (Besant Nagar MG Roadல் உள்ளது.) கூட்டிப் போய் விவரமாக பல பல டெஸ்ட்டுகள் செய்தனர். அருணும், விஜயாவும் கூட்டிச் சென்றனர். EEG எடுக்கப்பட்டது. பல டெஸ்ட்டுகளுக்கு பிறகு திரும்பவும் ஸ்வரம் ஹாஸ்பிடலுக்கு வந்தோம். சதீஷும் சுகவனமும் அப்போது வந்தனர்.
இரவு 8-45க்கு விஜயா கஞ்சி கொண்டுவந்தாள். அருண் காயத்ரி குழந்தைகள் சாப்பிட்டு விட்டு படூர் திரும்பினர். அஷோக், நீரஜா இருவரும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் பெங்களூரிலிருந்து இரவு 10 மணிக்கு வந்தனர். எல்லாருக்கும் மன வேதனை. என்னைப் பார்த்து விட்டு, அவர்களும் விஜயாவும் வீடு திரும்பினர். எனக்குத் துணையாக இரவில் அர்விந்த் ஹாஸ்பிடலிலேயே படுத்துக் கொண்டான்.
இரண்டாவது நாள், 11-04-2012.
ஹாஸ்பிடலில் நர்ஸின் உதவியோடு நான் குளித்தேன். இன்று காலையும் என் நினைவு முழுதுமாக திரும்பவில்லை. EEG Report "Normal" என வந்ததும், என்னை discharge செய்தனர். அப்போது மணி 11:00 AM. அஷோக் ஸ்வரம் ஹாஸ்பிடலுக்கு வந்து காரில் என்னை வீட்டிற்கு அழைத்து வந்தான். அருண் படூரிலிருந்து வந்தான். அஷோக்-நீரஜா பகல் 2 மணிக்கு ஸ்டேஷனுக்கு போய், 5-00மணி ஷதாப்தி ரயிலில் பெங்களூர் போனார்கள். நிறைய பேர் ஃபோன் பண்ணி உடல்நலம் விசாரித்தனர். சுந்தரேசன், சாவித்திரி, ரமா, வாசு ஃபோன் பண்ணினார்கள். ஆண்டவன் அருளினால் நல்லபடியாக முடிந்தது. ஆண்டவனுக்கு கோடி நமஸ்காரங்கள்.
விழுந்தது ஏன் என்பதற்கான காரணம் தெரியவில்லை. ECG, EEG, XRAY, Complete Blood Tests, Sugar Level Tests, Liver, Kidney tests everything, every test was normal. ஒன்றுமே இல்லை, எல்லாம் நார்மல் என ஸ்வர்ம் ஹாஸ்பிடலிலும், பின்னர் 2 நாள் கழித்து CGHS டாக்டரும், இன்னும் இரண்டு நாள் கழித்து என்னுடைய வழக்கமான டாக்டர் மாதவனும் சொல்லிவிட்டார்கள்.
ராஜப்பா
12-04-2012
காலை 10:00 மணி
Comments