ஆரண்ய காண்டம் - மூன்றாவது காண்டம். மொத்தம் 75 ஸர்கங்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2013 மே 27 திங்கட்கிழமை (298) ஆரம்பித்தார்.
முதல் 44 ஸர்கங்களை பகுதி-1 ல் பார்த்தோம். பொய் மான் வேஷத்தில் வந்த மாரீசனை ராமன் கொன்றதும், மாரீசன் “ஸீதா ! லக்ஷ்மணா !” என ராமன் குரலில் ஓலமிட்டு இறந்ததையும், ராமன் ஆஸ்ரமத்திற்கு விரைந்ததையும் படித்தோம். இனி .... 45வது ஸர்கம்.
ராமனின் குரல் கேட்டும் லக்ஷ்மணன் அண்ணனின் உதவிக்குப் போகாமல் ஆஸ்ரமத்திலேயே இருப்பது கண்டு ஸீதா அவனை ஏசுகிறாள். லக்ஷமணன் எவ்வளோவோ எடுத்துக் கூறியும் ஸீதா அவனை கேட்பதாக இல்லை. அவளது வற்புறுத்தல் காரணமாக லக்ஷ்மணன் ராமனைத் தேடி புறப்படுகிறான். (ஸர் 45)
லக்ஷ்மணன் அந்தப் பக்கம் போனதும், இந்தப் பக்கமாக ராவணன் வருகிறான். போலி சாமியார் வேஷம் தரித்து ராவணன் வருகிறான். ஸீதாவின் அழகை வர்ணித்து அவளை போற்றுகிறான். ஸீதையும் அவனை உள்ளே அழைத்து ஆசனம் அளித்து உட்கார்ந்து சாப்பிட சொல்கிறாள். (ஸர் 46)
முதலில் அவனை ப்ராஹ்மண சந்நியாசி என நினைத்த ஸீதாவிற்கு, பின்னர் அவனது சுய சொரூபம் தெரியவருகிறது. தன்னை மணந்து கொள்ளுமாறு அவன் கேட்டபோது ஸீதா ஆவேசப் படுகிறாள். ராவணனை ஏசுகிறாள். இருவருக்கும் வாக்குவாதம் தொடர்கிறது . (ஸர் 47 - 48)
ப்ராஹ்மண சந்யாஸி வேஷத்தைத் துறந்து, தன் ராக்ஷச சொரூபத்திற்கு மாறி ஸீதையை தூக்கி தன் விமானத்தில் செல்கிறான். ஸீதை முதலில் லக்ஷ்மணனை தன் உதவிக்கு அழைக்கிறாள். பின்னர் ராமனையும் மற்ற தேவதைகளையும் உதவிக்கு வருமாறு அழைக்கிறாள்.அன்னம், ஸாரஸம் போன்ற பக்ஷிகளையும் கோதாவரி நதியையும் கூப்பிடுகிறாள். அங்குள்ள மரம், செடி, கொடிகளிடம் சொல்லி அழுகிறாள். ஜடாயூவை அங்கு பார்த்து ஜடாயூவிடமும் சொல்கிறாள். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை ராமனிடமும், லக்ஷ்மணனிடமும் விவரமாக விளக்குமாறு சொல்கிறாள். ராவணனிடம் நேராக போரிடுமாறு ஜடாயூவை அவள் கேட்கவே இல்லை. ஜடாயூ மிகவும் வயசானவர், தன் மாமனாருக்கு சமமானவர், அவரால் ராக்ஷசனுடன் சண்டை போட முடியாது என்பது ஸீதாவிற்குத் தெரியும். இவ்வாறு ஸீதா அபஹரணம் நிகழ்ந்தது. ( ஸர் - 49)
ஸீதாவின் அழுகையை கேட்ட ஜடாயூ ராவணனிடம் போர் புரிய தொடங்குகிறார். மிக கடுமையாக அவர் போரிட்டும், கடைசியில் அவர் ராவணனால் கத்தி வெட்டுப்பட்டு கீழே ரத்தவெள்ளத்தில் விழுகிறார். ராவணன் ஸீதாவை விமானத்தில் கடத்திப் போகிறான். ( ஸர் - 50 - 53)
அழுது புலம்பிக் கொண்டிருக்கும் போதே, கீழே ஒரு மலைமீது 5 வானரங்கள் உட்கார்ந்து இருப்பதை ஸீதா பார்க்கிறாள். ”இந்த வானரங்கள் ஒரு வேளை ராமனை சந்திக்க நேர்ந்தால் அவனிடம் தன் அபஹரணம் பற்றி சொல்லக்கூடும்,” என எண்ணி தன் ஆபரணங்களை கழற்றி புடைவை முடிச்சில் முடிந்து அந்த வானரங்கள் மத்தியில் அந்த முடிச்சை வீசுகிறாள். ராவணன் மிக விரைவாக சென்று, ஸமுத்திரத்தை கடந்து லங்காவில் நுழைகிறான். அரண்மனைக்குள் சென்று ராக்ஷசிகளிடம் ஸீதையை கண்காணிக்கும்படி ஆணையிடுகிறான். தன் வீரர்களில் பலசாலிகளான எட்டு ராக்ஷசர்களை அழைத்து ராமனை கொன்று வருமாறு பணிக்கிறான். (ஸர் 54)
தன்னை மணந்து கொள்ளுமாறு ஸீதையை கேட்கிறான். அவளை ராணியாக்குவதாகவும் கூறுகிறான்; அவனது பசப்பு வார்த்தைகளுக்கு ஸீதை மயங்குவதாக இல்லை. ”தன்க்கு பணியாத எந்த ஒரு பெண்ணையும் அவன் தொட்டானே ஆகில், அவனது தலை சுக்கு நூறாக வெடித்து விடும்” என்ற சாபத்தை ஸீதை அறிவாள், எனவே ராவணனிடம் தைரியமாக பேசுகிறாள். (ஸர் 56)
மாரீசனை வதம் பண்ணி, திரும்பிய ராமனும், லக்ஷ்மணனும் ஸீதையைக் காணாமல் வருந்தி, அழுது, அவளைத் தேட துவங்குகிறார்கள். ராமனை லக்ஷ்மணன் தேற்றுகிறான் (ஸர் 57 - 67)
கழுகுகளின் அரசனான ஜடாயூவை காண்கிறார்கள். ஸீதையை கடத்தியது ராவணன் என்று சொல்லிய ஜடாயூ இறந்து போகிறான். மிகவும் சோகமான ராமன் கழுகரசனுக்கு (தன் சொந்த தந்தைக்கு செய்வது போன்று) எல்லா ஈமக் காரியங்களையும் செய்கிறான் (ஸர் 68)
அங்கிருந்து கிளம்பிய ராமனை கபந்தன் என்னும் ராக்ஷசன் பிடித்துக் கொள்கிறான். கபந்தனைப் பார்ப்பது ராமாயணத்தில் ஒரு திருப்பு முனை. தன் ராக்ஷசக் கைகளால் ராமனையும் லக்ஷ்மணனையும் பிடித்த கபந்தனை அவர்கள் இருவரும் அவன் கைகளை வெட்டி வீழ்த்தினார்கள். நீங்கள் யார் என அவன் வினவ, லக்ஷ்மணன் பதிலளிக்கிறான். ராமனால்தான் தன் சாப விமோசனம் கிடைக்கும் என்பது கபந்தனுக்கு தெரியும், எனவே அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான். தன்னை எரித்து விட சொல்லுகிறான்; எரித்தால், தான் தன்னுடைய நிஜ ரூபமான தேவனாக மாறி விடுவேன் எனவும் சொல்லுகிறான். ராமனும் அவனை எரிக்கிறான் (ஸர் 71)
தேவ வடிவத்திற்கு மாறிய கபந்தன், ராவணனைப் பற்றி கூறுகிறான். ராமனுக்கு உதவி செய்ய வானரங்களின் அரசனான சுக்ரீவனால் முடியும் எனவும், சுக்ரீவன் இருக்கும் இடமான ரிஷ்யமுகாவிற்கு செல்லும் பாதையை விளக்கி சொல்கிறான் (ஸர் 72 - 73)
போகும் வழியில் உள்ள பம்பா நதி பற்றியும் அதன் அழகையும் விவரிக்கிறான். அங்கு ஸபரி என்னும் மூதாட்டி ராமனுக்காக காத்திருப்பதையும் கபந்தன் சொல்கிறான். அவர்களும் பம்பா நதியைக் கடந்து ஸபரி இருப்பிடத்தை அடைகிறார்கள். (ஸர் 74)
ஸபரியை ஆசிர்வதித்து அவள் விரும்பியபடியே அவளை மோக்ஷம் அடைவிக்கிறார்கள். அவள் வழிகாட்டியபடியே பம்பா ஏரியை அடைகிறார்கள். (ஸர் 75)
இத்துடன் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தின் மூன்றாவது காண்டமான ஆரண்ய காண்டம் நிறைவு பெறுகிறது.
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸபரி மோக்ஷத்தை 2013 செப் 10ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சொல்லி ஆரண்ய காண்டத்தை நிறைவு செய்தார். 373 ஆம் பகுதி. அடுத்து கிஷ்கிந்தா காண்டம் - ஸ்ரீ ஹனுமானையும், சுக்ரீவனையும் சந்திக்க்ப் போகிறார்கள்.
தொடரும் .......
ராஜப்பா
11-09-2013

Comments