பொன் (GOLD) ஒரு சேமிப்பாக கருதலாமா? அல்லது, சேமிப்பு (investment) என்ற முறையில் தங்கம் வாங்குவது அவ்வளவு சிறந்தது இல்லையா? மனதிலே ஆயிரம் எண்ணங்கள். இருந்தும், துணிந்து நேற்று மாலை - என் 67 வருஷ வாழ்க்கையில், விஜயாவின் 59 வருஷ வாழ்க்கையில் முதல் முறையாக - தங்கம் (காசு) வாங்கினோம், ஓரிரண்டு கிராம்களே. எதற்கும் “முதல் முறை” வேண்டுமல்லவா?
பொன் காசு வாங்கும்போது, செய்கூலிக்கு பணம் தரவேண்டாம்; சேதாரத்திற்கு மட்டும் வசூலிப்பார்கள்; தற்போது இது 3% ஆக உள்ளது.
தங்கத்தின் விலை தினம் தினம் மும்பை மார்க்கெட்டில் நிச்சயிக்கப்பட்டு, மற்ற ஊர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. 18 ஜனவரி 2008ல் ரூ 1044; ஃபிப்ரவரி 21ல் ரூ 1127; மார்ச் 16 அன்று 1211. ஏப்ரல் 30 அன்று வீழ்ச்சி 1059.00; மீண்டும் மே 21 அன்று 1204.00; ஜூலை 14 அன்று 1267; பின்பு வீழ்ச்சி செப்டம்பர் 12ல் 1059.00; டிசம்பர் 19 அன்று ரூ 1194.00
இந்த வருஷம் (2009) விலை ஏறிக்கொண்டே போய், மார்ச் 22ஆம் தேதி 1435 ஆக இருந்தது. நேற்று (4-4-2009) 64 ரூபாய் வீழ்ந்து, 1371.00 க்கு விற்றது.
தங்கம் வாங்குவது சேமிப்பா, வீண்வேலையா? சேமிப்புத்தான்.
ராஜப்பா
10:45 காலை; 5 ஏப்ரல் 2009
பொன்காசு, மற்றும் பொன் நகைகள் வாங்கும்போது, பல சங்கேதக் குறியீடுகளை சந்திக்க வேண்டி வரும் - சேதாரம் (wastage) என்பது ஒன்று. தங்கத்தை உருக்கி நகையாக செய்யும்போது சில மைக்ரோகிராம்கள் நஷ்டமாகிவிடும்; இந்த இழப்பை நம்மிடமிருந்து பணம் வாங்கி ஈடு செய்து கொள்வார்கள். சேதாரம் என்பது செய்யும் நகையைப் பொறுத்தது. நாம் வாங்கும் கடையையும், அந்தக் கடைக்கு நாம் எவ்வளவு “விசுவாசமானவர்கள்” என்பதையும் பொறுத்தது. 15% லிருந்து 18% வரை சேதாரம் இருக்கக்கூடும். 16 கிராம் எடைக்கு நகை வாங்கினால், 16 கிராமுக்கு 15% ஆன 2.4 கிராம் தங்கத்திற்கு பணம் சேதாரமாக வசூலிக்கப்படும்!
அடுத்த குறியீடு “செய்கூலி” (making charges) என்பதாகும். இதுவும் மேற்சொன்ன 3 விஷயங்களையே பொறுத்தது. சாதாரண வேலைப்பாடுள்ள நகை என்றால் குறைவாகவும், நுணுக்கமான நகை என்றால் அதிகமாகவும் இருக்கும்.பொன் காசு வாங்கும்போது, செய்கூலிக்கு பணம் தரவேண்டாம்; சேதாரத்திற்கு மட்டும் வசூலிப்பார்கள்; தற்போது இது 3% ஆக உள்ளது.

Comments