புகழ்பெற்ற ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலுக்கு நேர் எதிரில், கீழ தேரடி வீதியில் திருநெல்வேலியின் இருட்டுக் கடை ஹல்வா கடை உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பெயர் பெற்ற கடை. ராஜஸ்தானத்திலிருந்து வந்த ஒரு குடும்பத்தினரால் 90 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்றது. இன்றைக்கும் இந்தக் குடும்பத்தின் வழி வந்தவர்களே கடையை நிர்வகிக்கின்றனர்.
மாலை 5 மணிக்குத்தான் கடை திறக்கும்; இரவு 10 மணிக்கு மூடிவிடுவார்கள். ஒளி தர எண்ணெய் விளக்குகள் மட்டுமே. “இருட்டுக் கடை” என்ற பெயர் வந்ததே இதனால்தான்.
கடை இருட்டாக இருக்கலாம்; ஆனால், ஹல்வாவின் ருசியும் மணமும்! எப்பொழுதும் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு சாட்சி. கடையின் வெளியில் ஒரு சின்ன போர்டு கூடக் கிடையாது. ஆனாலும் கூட்டத்திற்கு என்னவோ குறைவே இருக்காது. பல கோடி ரூபாய்களை விளம்பரத்திற்காக செலவிடும் MNCக்கள் இந்தக்க் கடையை Marketing Study பண்ணவேண்டும்.
2003ல் (சுபா - மகேஷ் திருமணத்திற்கு முன்பு) நான் தி-வேலி சென்று Mr ராஜாமணி அவர்கள் (மகேஷின் அப்பா) வீட்டில் தங்கியபோது முதல்முறையாக இருட்டுக் கடை ஹல்வா கடைக்குச் சென்றேன். 1/2 கிலோ ஹல்வா வாங்கியதாக ஞாபகம்.
நெய் வழியும் சுடச்சுட ஹல்வாவை 50 கிராம் நிறுத்து, சிறிய வாழையிலையில் வைத்து ... வியாபாரம் என்ன விறுவிறுப்பு ! 50 கிராம் ஹல்வா மிகவும் famous.
2005-ல் சுபாவை “கொண்டுவிட” தி-வேலிக்கு திரு ராஜாமணி அவர்கள் வீட்டிற்கு இரண்டாம் முறையாகச் சென்றோம். அப்போது, குமாரின் (மகேஷின் அண்ணா) மாமனாரின் தம்பி எங்களுக்கு நெல்லையப்பர் கோயிலை சுற்றிக் காண்பித்தார் (பல அரிய விஷயங்களையும் விளக்கினார்). அப்போதும் இருட்டுக் கடை ஹல்வா வாங்கினோம். மகேஷின் அம்மா, காயத்ரியின் பெரியம்மா என்பதால் எங்களுக்கு நிறைய தடவை இந்த இ.க.ஹ சாப்பிடக் கிடைக்கும்.
இன்னும் விவரம் வேணுமானால், மகேஷை அணுகவும்.
ராஜப்பா
10:10 மணி
5-11-2009

Comments