மாதங்களில் நான் மார்கழி - என்றான் கண்ணன். மார்கழி பிறந்தாலே நினைவுக்கு வருவது திருப்பாவை - திருவெம்பாவை தான். (மூடநெய் பெய்து முழங்கை வழிவார - என்று சுடச்சுட வெண்பொங்கலும் கூட!!!!)
2007 ஜனவரி துவங்கி இதுநாள் வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் "பகவத் கீதை" உபன்யாஸத்தை நானும் விஜயாவும் தவறாமல் கேட்டு வருகிறோம். ஸ்ரீ உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் மிக நேர்த்தியாக உபன்யாஸம் செய்கிறார். தெளிவான ஆற்று நீர் ஓட்டம்போல, தங்கு தடையற்ற இனிய தமிழ். பொதிகையில் காலை 6-30 முதல் 6-45 வரை ஒளிபரப்பாகிறது.
மார்கழி 1- ஆம் தேதி முதல், திருப்பாவை - திருவெம்பாவையும் ஒளிபரப்பு ஆகிறது, காலை 6 மணிக்கே. எனவே, நான் காலை 5-15க்கே எழுந்து, குளித்து (!!), 5-45க்கு திருப்பாவை படிக்க ஆரம்பித்து விடுகிறேன். விடியலுக்குமுன் குளிப்பதே பரம ஆனந்தம். கீதை உபன்யாஸத்தைக் கேட்டு முடித்த பிறகே மற்ற வேலைகள் ஆரம்பம்.
சுடச்சுட வெண்பொங்கல் (தொன்னையில்) ?? அது இன்னும் கனவாகவே உள்ளது.
ராஜப்பா
12-00 19-12-2007
Velukkudi Krishnan, Bhagavad Gita

Comments