முதலில், வியப்பு.
இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கறிகாய் கடையில், ஒரு இளைஞன் (25-28 வயசு) கடைக்காரரை கேட்டான் - " புதினா என்ன விலைங்க?"
கடைக்காரரின் பதில்: "தம்பி, நீ கையிலே வெச்சிருக்கிறது கொத்தமல்லி - புதினா இல்லே"
கொத்தமல்லிக்கும் புதினாவிற்கும் வித்தியாசம் தெரியாதா, ஒரு 26 வயசு இளைஞனுக்கு!!??
எனக்கு ஒரே வியப்பு.
அடுத்து, திகைப்பு.
இன்று (24 டிச 2007) காலை நான் ஒரு மளிகைக் கடைக்குச் சென்று, கொத்துக்கடலை வேண்டுமென்று கேட்டேன். கடைக்கார ஆளுக்கு ஒன்றும் புரியவில்லை - முழித்தான்.
"என்ன சார் வேணும் ?" திரும்பவும் கேட்டான்.
"கொத்துக்கடலை" - இது நான், அழுத்தமாக.
மீண்டும் அதே முழிப்பு.
என்ன சொல்லிக் கேட்பது என்றே எனக்குப் புரியவில்லை - அடிச்சி விட்டேன் "சன்னா" வென்று. தமிழ்நாட்டில் ஹிந்தியா?
கடைக்கார ஆளின் முகத்தில் 500W பல்பு எரிந்தது. "ஓ, சன்னாவா, அப்படி சொல்லுங்க" என்று 250 கி "கொத்துக்கடலை"யை கொடுத்தான்.
ஹிந்தி எதிர்ப்பு 1965-ல் நடந்ததாமே, அப்படியா?
எனக்கு ஒரே திகைப்பு.
ராஜப்பா
12:30 24 டிசம்ப்ர் 2007

Comments