என்னுடைய இன்றைய 15-11-2008 டைரிக் குறிப்பிலிருந்து ..
காலை 04-45 க்கு வழக்கம் போல எழுந்து, குளித்து, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, ஸ்லோகங்கள் சொன்னேன். பின்னர் விஷ்ணு சஹஸ்ர நாமம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, கீதையிலிருந்து 8 - 10 ஸ்லோகங்கள் பாராயணம்.
7 மணிக்கு அருகிலுள்ள் MRC Nagar (1 1/2 கிமீ) வரை நடை. திரும்பும் வழியில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் - பதினெட்டு படி ஏறி, ஐயப்பன் தரிசனம். பக்தர்கள் நிறைய பேர் இருந்தனர். சுடச்சுட வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் ப்ரஸாதமாக கிடைத்தது.
8 லிருந்து 8-45 வரை மூன்று ந்யூஸ் பேப்பர்கள். 9 மணிக்கு பூரி-கிழங்கு காலை சிற்றுண்டி. பின்னர், கடைக்குப் போய் முளைக்கீரை வாங்கிவந்தேன்.
9-30 முதல் 10-15 வ்ரை வெஜிடபிள் ஸூப்புக்கான தயாரிப்பு ஆரம்பம். பின்னர் கொஞ்ச நேரம் கம்ப்யூட்டரில் யாஹூ பார்த்தல். MIP குறித்து ஒரு மெயில் அனுப்பினேன்.
11-15க்கு ஸூப் பண்ண ஆரம்பித்தேன்; 11-45க்கு குடித்தோம் - நன்றாக வந்திருந்தது. (ஸூப் செய்முறை இங்கே படிக்கலாம்)
12-15க்கு (ஆர்டர் செய்திருந்த புதிய) இரண்டு இலவம்பஞ்சு மெத்தைகள் வந்தன - இரண்டும் ரூ. 4100.00 ஆயிற்று.
மதியம் 1-30 க்கு லஞ்ச் -முருங்கைக்காய் பொரித்த குழம்பு, சேனைக்கிழங்கு கறி, தக்காளி ரசம். பின்னர் 4-15 வரை தூக்கம். வீட்டிலிருந்து 2 கிமீ தூரத்திலுள்ள, ஸ்ரீஸித்தி புத்தி சமேத கற்பக விநாயகர் கோயிலுக்கு நானும் விஜயாவும் மாலை 5 மணிக்கு நடந்து சென்றோம். விநாயகரைத் தவிர, ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசந்திரமௌளீஸ்வரரும், நந்திகேஸ்வரரும் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். நவக்கிரகத்தையும் 9 முறை சுற்றி விட்டு, 7 மணிக்கு நடந்து வீடு திரும்பினோம்.
8-30 மணி முதல் 10-30 வரை டிவி - Man U vs Stoke City EPL football match - பார்த்தேன். Man U 5 - 0 கோல் கணக்கில் ஜெயித்தது.
ராஜப்பா
15-11-2008 இரவு 10-40 மணி

Comments