அன்னதானம். ANNADHAANAM
பல ஊர்களிலே, பல கோயில்களிலே, பல இடங்களிலே அன்னதானம் தினம் தினம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். இந்தப் பதிவு அதைக் குறித்து அல்ல.
மயிலாப்பூர் ஸ்ரீசாய்பாபா கோயிலில் என்றைக்குப் போனாலும் எப்போது போனாலும் இரவானாலும், பகலானாலும் உங்களுக்கு தொன்னை நிறைய சுடச் சுட வெண்பொங்கலோ, சக்கரைப் பொங்கலோ, புளியோதரையோ, தயிர் சாதமோ கிடைப்பது நிச்சயம்.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் (Mar-Apr) மயிலாப்பூர் கோயிலில் உத்சவம் நடைபெறும் - அறுபத்துமூவர் விழாவன்று RK Mutt ரோட்டில் ஸ்வாமி ஹால் தொடங்கி, இரண்டு கிமீ தூரத்திற்கு பத்தடிக்கொன்றாக சிறுசிறு "அன்னதான ஸ்டால்கள்" போட்டு, எல்லாருக்கும் வாரி வாரி வழங்குவார்கள். வழங்குபவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மக்கள்தான்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் முன்பாகவும், மந்தைவெளி பஸ் டிப்போ அருகிலும் இலை நிறைய இரண்டு விதமான சாப்பாடு வழங்குவார்கள்.
இதற்கு 2-3 நாட்கள் முன்பாக நடக்கும் திருத்தேர் விழாவின்போது, வீடு தோறும் தங்களால் முடிந்த அளவு சாப்பாடு கொடுப்பார்கள்.
இதுபோன்று, சென்னையில் நூற்றுக்கணக்கான கோயில்களை ஒட்டி வாழும் சாதாரண மக்கள் அளிக்கும் அன்னதானம் பற்றி எழுத இயலாது! சுனாமி என்று கேட்டதும் அடுத்த மணிக்குள் பெரிய பெரிய பாத்திரங்கள் நிறைய சாப்பாடு வந்து குவிந்தது - பெஸண்ட்நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலில்!நிர்வாகத்தினரே மூச்சுமுட்டி, வேண்டாம், வேண்டாம் என அவசரக்குரல் கொடுக்க வேண்டியதாயிற்று.
சென்னையில் மட்டும்தானா, தமிழ்நாடு, ஏன் பாரத தேசம் முழுதுமே இது போன்று பரிவு சிந்தனைகொண்ட மக்கள் லக்ஷக்கணக்கில் இருக்கிறார்கள். திருவண்ணாமலை தீபமா, மதுரை கள்ளழகர் உத்சவமா, மீனாக்ஷி திருக்கல்யாணமா, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கனுக்கு உத்சவமா, சபரிமலையில்
மகரஜோதியா, எங்கும் அன்னதானம்தான் - அதுவும் சாதாரண மக்களால்.
சென்ற 2008 ஆண்டு இறுதியில் திருமலா கோயில் நிர்வாகத்தினர் தினம் தினம் 5-6 லக்ஷம் பேருக்கு இலவசமாக முழுச் சாப்பாடு அளித்தனர் - என்ன ஒரு பரிவு. ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம், மந்திராலயம் போன்ற ஊர்களில் போவோர்க்களுக்கெல்லாம் (நூற்றுக்கணக்கில்) தினம் தினம் இலை போட்டு அன்னமிடுகிறார்கள். விநாயகர் விழாவின் போது (குறிப்பாக, விநாயகர் விஸர்ஜன் அன்று,) ஊர்வலமாகப் போகும் ஒவ்வொரு விநாயகர் வண்டியிலும் பெரிய பெரிய பாத்திரங்கள் நிறைய புளியோதரையும், தயிர் சாதமும் எடுத்துப் போய் ரோட்டில் உள்ள ஆயிரக்கணக்கானோர்க்கு வாரி வாரி வழங்குவார்கள்.
இதேபோன்று மும்பையிலும், புனேவிலேயும் பார்த்திருக்கிறேன்.
கர்நாடகாவிலும் பல கோயில்களில் ஆயிரக்கணக்கானோர்க்கு பந்தி அமர்த்தி விருந்து படைக்கின்றனர்.
இந்தியா ஏழை நாடு, இங்கிருப்பவர்கள் வறியவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், அன்னதான விஷயத்தில் நாம் மிகமிக உயர்ந்தவர்கள். நெஞ்சினில் ஈரம் கொண்டவர்கள்.
ராஜப்பா
16-01-2009, 7-15PM

Comments