CHENNAI BUSES
நேற்று வியாழன் 30-04-2009 மாலை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். A1 சொகுசு பஸ். கண்டக்டரிடம் 50 ரூபாய் தாளை நீட்டி “மந்தைவெளி ரெண்டு” என்றேன்.
“சார், டிக்கெட் 6 ரூபாய்தான், 6 ரூ கொடுங்க,” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சொகுசு பஸ்ஸில் சென்ட்ரல் - மந்தைவெளி ஒரு ஆளுக்கு 7.50, ”இவர் என்ன 3 ரூ என்கிறாரே, சரியாகக் கேட்கவில்லையோ” என நினைத்து, “மந்தைவெளி ரெண்டு” என மீண்டும் அழுத்தி சொன்னேன். “மந்தைவெளிக்கு 3 ரூபாய்தான் சார்,” ஒரு புன்னகையுடன் பதில் வந்தது.
பஸ்ஸில் இருந்த எல்லாருக்குமே ஒரே ஆச்சரியம், கண்டக்டர் என்ன, பணத்தை திருப்பிக் கொடுக்கிறாரே என்று கையிலுள்ள டிக்கெட்டை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், கண்களை நம்ப முடியாமல்.
விசாரித்ததில், நேற்று விடியற்காலை தமிழக அரசு பஸ் டிக்கெட் fare-களை திடீரென குறைத்துவிட்டதாம். வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, M சீரிஸ், LSS, Express, மிதவை, சொகுசு என விதவித ரேஞ்சுகளில் ஓடிக்கொண்டிருந்த சென்னை மாநகர பஸ்கள் நேற்று காலை முதல் “நாம் எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு” என எல்லா பஸ்ஸுகளும் இனி ஒரே ரேட்டில் (minimum 2 ரூ) ஓடும் என அரசு நிர்ணயித்துள்ளது !! ஆக மொத்தம் நேற்று எனக்கு 9 ரூ மிச்சம்.
11:45 , 01 மே 2009

ELECTION STUNT ?
இந்த செயல் தேர்தல் விதிமுறைகளை மீறியது என தேர்தல் ஆணையம் தமிழக அரசை கண்டித்து இருப்பது வேறு விஷயம்.
ராஜப்பா11:45 , 01 மே 2009
Comments