Skip to main content

ஸ்ரீ புரந்தர தாசர் சரித்ரம் Sri Purandaradasar Charithram

ஸ்ரீமதி விஷாகா ஹரியை (Smt VISHAKHA HARI) யாவரும் அறிவீர்கள். ஸீதா கல்யாணம், ஸுந்தர காண்டம், ப்ரஹ்லாத சரித்ரம் ஆகியவைகளுக்கு அடுத்து தற்போது இவர் “ஸ்ரீ புரந்தரதாசர் சரித்ரம்” என்னும் கதாகாலட்க்ஷேபத்தை DVD வடிவில் கொடுத்துள்ளார்.

ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கே உரித்தான அந்த இனிமைக் குரலில் ஸ்ரீ புரந்தரதாசரின் சரித்திரத்தை பாட்டாகவும் வசனமாகவும் அளித்துள்ளார். அருமையாக உள்ளது. பாண்டுரங்க விட்டல் மீதான பக்தி இன்னும் சுவை சேர்க்கிறது.

கர்னாடக சங்கீதத்தின் “பிதாமகர்” என்று போற்றப்படுபவர் ஸ்ரீ புரந்தரதாசர். இவர் 4 லக்ஷத்திற்கும் அதிகமாக ஸ்வராவளிகள், ஜண்டைவரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள், கீர்த்தனைகள் ஆகியவைகளை இயற்றியிருக்கிறார். மஹாராஷ்டிர மாநிலம் பண்டர்பூரிலுள்ள, ஸ்ரீ பாண்டுரங்கனை (விட்டலை) இவர் துதித்து நாமசங்கீர்த்தனம் பண்ணியிருப்பது மிக விசேஷமானது.
பெல்லாரி ஜில்லாவில் ஹம்பிக்கு அருகில் புரந்தரகாட் என்னும் சிற்றூரில் வரதப்பா நாயக்கர் - கமலாம்பாள் தமபதியருக்கு சீனிவாச நாயக்கனாக இவர் 1484ல் பிறந்தார். நிறைய சங்கீத ஞானமும், மொழியறிவும் கொண்டவர். லக்ஷ்மிபாய் (சரஸ்வதிபாய்??) என்பவரை மணந்தார். இவர்களுக்கு 4 பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர்.

மிகப்பெரும் பணக்காரராக இருந்தபோதிலும், சீனிவாச நாயக்கர் மிக கருமியாகவும் இருந்தார். ஒன்பது கோடி ரூபாய்கள் சம்பாதித்து, ”நவகோடி நாராயணன்” என்ற பட்டப் பெயரை பெற்றார். 16 வயதிலிருந்தே தன் தந்தையின் தொழிலான ரத்தின வியாபாரத்தை கவனித்துக் கொண்டார்.

ஒருநாள் ஒரு வயதான் பிராமணர் இவர் கடைக்கு வந்து தன்னுடைய பையனுக்கு உபநயனம் பண்ண இருப்பதாகவும் அதற்கு சீனிவாச நாயக்கர் பண உதவி செய்யவேண்டும் என்றும் கேட்டார். கருமியான சீனிவாசன் மறுத்துவிட்டார்.

அந்த பிராமணர் சீனிவாசன் வீட்டிற்கே போய், லக்ஷ்மிபாயிடம் யாசித்தார். லக்ஷ்மிபாய் கருணை உள்ளம் கொண்டவர், தன் கணவர் ஏன் இவ்வளவு கருமியாக இருக்கிறார் என்ற வருத்தமும் உண்டு. பிராமணரின் நிலை கண்டு கருணை கொண்டு தன்னுடைய ரத்தினக்கல் மூக்குத்தியை கழட்டி அவரிடம் கொடுத்துவிட்டார்.

பிராமணர் சும்மா இருக்காமல், மூக்குத்தியை சீனிவாசனிடம் கொடுத்து அதற்குண்டான பணம் தருமாறு கேட்டார். மூக்குத்தி தன் மனைவியுடையது என அறிந்த சீனிவாசன் கோபம் கொண்டு வீட்டிற்கு வந்து லக்ஷ்மிபாயை விசாரித்தார். அந்த மூக்குத்தி தன்னுடையது அல்ல என லக்ஷ்மிபாய் சாதிக்க, அப்படியானால் உன்னுடையதை கொண்டு வா என இவர் சொல்ல - லக்ஷ்மிபாய் விட்டலை வணங்க, விட்டல் இன்னொரு மூக்குத்தி கொடுத்தார்.

கடைக்குப் போய் பார்த்தால், பிராமணர் கொடுத்த மூக்குத்தி - மிக கவனமாக பூட்டி வைத்திருந்தது - மாயமாக மறைந்து போயிருந்தது; பிராமணரும் மாயம்! மூக்குத்தியை இவர் உற்று நோக்க, அதில் ஸ்ரீ விஷ்ணு பகவான், “ஏன் இன்னும் இந்த மோகத்தில் ஆழ்ந்துள்ளாய்? என்னிடம் வா” என்று சொல்ல, அந்த க்ஷணம் முதல் கோடிகளை விட்டொழித்து, புரந்தரதாசராக மாறி நாடு முழுதும் நடையாகச் சென்று கீர்த்தனங்களையும் கீதங்களையும் பாடி ஸ்ரீ விட்டலை துதித்தார்.

விட்டலா, விட்டலா, பாண்டுரங்க விட்டலா ...

1564-ம் வருஷம் இவர் காலமானார். இவரது பாடல்களில் எளிமையும், பக்தியும் மணக்கும். புரந்தரதாசரைப் பற்றி மேலும் அறிய இங்கே படிக்கவும்

ராஜப்பா
காலை 11:30, 04-05-2009

Comments

சுதாகர் said…
Dear Raja Chitappa,

The story of becoming Purandhara Dhaasar is very nicely explained by you. So far, I just heard his name.

Vittala, Vittala, Panduranga Vittala…

Sudhakar
4 May 2009

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011