Bhaja Govintham
திருப்பதி-திருமலா தேவஸ்தானம் நேற்று (31-05-2009, ஞாயிறு) விஜயவாடாவில் “பஜகோவிந்தம்” விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. காலை முதலே விஜயவாடா பக்தி மழையில் நனைய ஆரம்பித்தது. ஊர் முழுதும் கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்தான்.
மாலையில் அங்குள்ள ஒரு முனிசிபல் விளையாட்டு அரங்கில், பஜனைகள் ஆரம்பித்தன. பல மடாதிபதிகளும், TTDயின் தலைமை அதிகாரிகளும், சுற்றியுள்ள பல மாவட்டங்களிருந்து பொதுமக்களும், பஜனை மண்டலிகளும் அங்கு குழுமின. லக்ஷத்திற்கும் அதிகமானோர் அங்கு இருந்தனர்.
ஸ்ரீஹரி, ஸ்ரீவேங்கடேசா, ராமர், கிருஷ்ணர், ஹனுமந்தா ஆகியோர் மீது பஜனைப் பாடல்கள் பாடினார்கள். கூடவே லக்ஷம் பேரும் பாடியது கேட்கவே பரமானந்தமாகயிருந்தது. எங்கும் கோலாட்டம், கும்மி, நடனம் ... பார்க்க பரவசமாக இருந்தது.
TTDயின் பக்தி channel SVBC யில் நேரடி ஒளிபரப்பு நான் பார்த்தேன். ஒரு இனிமையான மாலைப்பொழுது.
முன்னதாக, 09-05-2009 ஞாயிறு அன்று,ஹைதராபாதில் Parade ground-ல் அன்னமாச்சார்யாவின் 601-வது பிறந்த நாள் விழாவை TTD ஏற்பாடு செய்தது. ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் தலப்பாகா என்னும் ஊரில் 9 மே 1408-ஆம் வருஷம் அன்னமாச்சார்யா பிறந்தார். ஸ்ரீ வேங்கடேஸப் பெருமாளின் பேரில் 32000 க்கும் மேலாக கீர்த்தனங்கள் இயற்றியவர்.
Parade Ground-ல் ஒரு லக்ஷம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்து, லக்ஷம் நாற்காலிகள் போட்டிருந்தனர் - ஆனால், வந்ததோ லக்ஷத்து எழுபத்து ஐந்தாயிரம் !! அத்தனை பேரும் அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளை ஒன்றாகப் பாடினார்கள். நினைத்துப் பாருங்கள், 1,75,000 பேர்! (இது ஒரு கின்னஸ் ரிகார்ட். லக்ஷம் நாற்காலிகள் போட்டது இன்னொரு ரிகார்ட்).
ராஜப்பா
காலை 09:00, 01-06-2009

Comments
Sudhakar
01-06-2009