KANCHIPURAM
ஜூன் 4, 2009 காலை 0715க்கு, நான், விஜயா, கணேசன் ஆகிய மூவரும் ஒரு call taxi-யில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். இந்திராவும் வருவதாக இருந்தது, கடைசி நிமிஷத்தில் வர இயலாமற் போயிற்று. கணேசன் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் காஞ்சி செல்வது வழக்கம். நான்தான் நீண்ட வருஷங்களுக்குப் பிறகு செல்கிறேன்.
போரூர் ஸ்ரீபெரும்பூதூர் வழியாக காஞ்சி சென்றோம்; ஒன்றரை மணி நேரப் பயணம். முதலில், ஸ்ரீராமா கஃபேயில் இட்லி, தோசை சாப்பிட்டோம்; இந்த ஹோட்டல் 65 வருஷங்களாக் இருக்கும் புராதனமான ஹோட்டல்.
பின்னர், ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலிற்குப் பக்கத்தில்தான் விஜயாவின் வீடு இருந்ததது.
எங்கள் கல்யாணம் (31-01-1971) இந்தக்கோயிலின் அருகிலுள்ள ராஜகோபால் கல்யாண மண்டபத்தில் நடந்தது. கணேசனும், விஜயாவும் 45-50 வருஷங்கள் பின்னோக்கிச் சென்று பழைய இனிய நினைவுகளில் மூழ்கி விட்டனர்.
பின்பு, விஜயா படித்த Sri Somasundara Kanya Vidhyalaya (SSKV) ஸ்கூலிற்கு சென்றோம். இந்த SSKV ஸ்கூலில் இந்திரா, காமாக்ஷி, விஜயா, லலிதா ஆகிய நால்வரும் படித்தனர். விஜயா மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினாள்.
அங்கிருந்து, காஞ்சியின் புகழ்பெற்ற ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்; விஜயாவின் classmate-ன் தம்பி கோயிலில் கடை வைத்துள்ளார். பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டனர். அம்மன் தரிஸனம் நன்றாகக் கிடைத்தது.
அடுத்து, ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயிலுக்குச் சென்றோம். முருகனை தரிஸித்துக் கொண்டு, லிங்கப்பைய்யர் தெருவில் உள்ள விஜயாவின் பூர்விக வீட்டைப் பார்க்கச் சென்றோம். இந்த வீட்டில் அவர்கள் 1961 முதல் 1971 வரை குடியிருந்தனர்.
பின்னர், அவர்களுடைய 60-ஆண்டுகளுக்கும் பழைய குடும்ப நண்பர் Dr சிற்சபை (சித்த மருத்துவர்) வீட்டிற்குள் நுழைந்தோம். டாக்டர் சிற்சபை தற்போது இல்லை; காலமாகி விட்டார். அவரது மகன் (கணேசனின் வகுப்புத் தோழன்) டாக்டர் தங்கதுரையைப் பார்த்துப் பேசினோம். இரண்டு குடும்பங்களும் மிக நெருங்கியவை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது.
அங்கிருந்து ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலிற்குச் சென்றோம். பெருமாள், மற்றும் தாயார் (பெருந்தேவித் தாயார்) தரிஸனம் மிக அருகிலிருந்து கிடைத்தது.
அங்கிருந்து, விஜயாவின் அப்பா ஸ்ரீ யக்ஞஸவாமி அய்யர் வேலை பார்த்த பச்சையப்பன் ஸ்கூலிற்குச் சென்றோம். நூலகம் (Library) கட்டிட நிதியாக ரூ 55,000/- கணேசன் நன்கொடை கொடுத்துள்ளார். இந்த நூலகத்தை திருமதி கனிமொழி (கருணாநிதி) அவர்கள் 17 ஃபிப்ரவ்ரி (2009) அன்று திறந்து வைத்தார்.
விஜயாவின் அப்பா பெயர் பொறித்த ஒரு commemorative plaque ஸ்கூலில் வைத்திருக்கிறார்கள்.
சங்கீதா ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு, சென்னை திரும்பினோம். வரும் வழியில், கமலா சித்தி, மற்றும் கணபதிசுப்ரமணியம் வீடுகளுக்குச் சென்றுவிட்டு எங்கள் வீடு திரும்பும்போது இரவு மணி 8-45.
மிக இனிமையாக ஒரு நாள் பொழுது ஓடியது.
ராஜப்பா
6-6-2009 11.00 மணி

Comments
Nice. Please keep it up your good writing.