10-09-2010 வெள்ளிக்கிழமை மாலை அர்விந்த், கிருத்திகா, அதிதி மூவரும் பெஸண்ட்நகர் வல்லப விநாயகர் கோயிலுக்கு அருகில் சென்று பிள்ளையார் பொம்மையையும் (50.00), புஷ்பங்கள், பழங்கள், பத்ரங்கள் ஆகியவற்றையும் வாங்கி வந்தனர். வீட்டுத் தோட்டத்திலிருந்து துளஸி, வில்வம், மாவிலை, அருஹம்புல் போன்ற பலவகையான பத்ரங்களை விஜயா பறித்து வந்தாள்.
11-09-2010 சனிக்கிழமை காலை எழுந்து, குளித்து, பிள்ளையாரை அலங்கரித்த பின்னர், நைவேத்யத்திற்கு கொழுக்கட்டை (2 விதம்), பாயஸம், வடை ஆகியவற்றை விஜயாவும், கிருத்திகாவும் செய்தனர். நான் மந்திரம் சொல்ல, அர்விந்த் பூஜை பண்ணினான். அருண்-காயத்ரியும், பெங்களூரில் அஷோக்-நீரஜாவும் இதே போன்று பூஜை முடித்தனர். தில்லி, தாணே, புணே, ஆகிய இடங்களிலும் விநாயகர் பூஜை சிறப்பாக நடந்தது.
தங்கள் வீட்டில் மிக சிறப்பான முறையில் கொண்டாடியதை வாசு விரிவாக தன்னுடைய வ்லைப்பதிவில் எழுதியுள்ளான்.
12-09-2010 மாலை 5 மணி அளவில் அர்விந்த், விஜயா, கிருத்திகா, அதிதி ஆகியோர் அருகிலுள்ள பெஸண்ட் நகர் கடற்கரைக்குச் சென்று, பிள்ளையாரை பிரியாவிடை கொடுத்து அனுப்பினோம். அதிதிக்கு ஒரே குறை - நம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே என சொல்லிக்கொண்டே இருந்தாள்.
இவ்வாறாக விநாயகர் சதுர்த்தி சிறப்பான முறையில் நடந்தது. எல்லாருக்கும் மிகவும் பிடித்த கடவுள் விநாயகர் எனப்படும் பிள்ளையார் எனப்படும் கணபதி எனப்படும் கணேசன் (அ) கணேஷ். அவர் எல்லாருக்கும் அருள் புரியட்டும்.
ராஜப்பா
காலை 11-40 மணி
13-09-2010

Comments